நமது கண்கள் எத்தனை மெகா பிக்சல் கொண்டிருக்கிறது?
ஒரு புதிய நிழற்படக் கருவி, அதாவது Photo camera வாங்குபவர்கள் பல விஷயங்களைப் பார்த்து வாங்குவார்கள். குறிப்பாக அந்த நிழற்படக் கருவி எத்தனை மெகாபிக்சலில் (mega pixle) படங்களை எடுக்கும் என்பதும் ஒன்றாகும். ஆனால் உண்மை சொல்லப்போனால் நமது கண்களும் கூட ஒரு விதமான நிழற்படக் கருவி தானே?
அப்படிப் பார்த்தால் கண்களாகிய நமது இந்த நிழற்படக் கருவிக்கு எத்தனை மெகாபிக்சல் இருக்கும் என்று எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக் கின்றீர்களா? இல்லையா? அப்படி என்றால் கண்டிப்பாக தொடர்ந்து படியுங்கள்.
ஒவ்வொரு மனிதனின் கண்களும் அசைந்து அனைத்தையும் பார்ப்பதற்கு 6 தசைகள் செயல் படுகின்றன. ஒவ்வொரு மனிதனின் கண்களும் தினமும் சுமார் 1 லட்சம் தடவை அசைகின்றது.
ஒரு சராசரி மனிதனின் விழித்திரையில் ஐந்து மில்லியன் உழநெ receptors என்று அழைக்கப்படும் உயிரணுக்கள் உள்ளன. நாம் காணும் படங்களின் நிறங்களைப் பார்க்க இந்தக் cone receptors காரணமாக இருப்பதால், நம் கண்களை ஐந்து மெகாபிக்சல் நிழற்படக் கருவிக்கு ஒப்பாகக் கருதலாம்.
ஆனால், நாம் காணும் படத்தைப் பார்க்கவும், அதன் வண்ணங்களைப் பிரித்துணரவும் மேலும் 100 மில்லியன் Roads என்று அழைக்கப்படும் உயிரணுக்கள் கண்களில் உள்ளன. எனவே, இவை அனைத்தையும் வைத்து நமது கண்களை 105 மெகாபிக்சல் நிழற்படக் கருவிக்கு ஒப்பாகக் கூறலாம், ஆனால் அதுவும் குறைவான மதிப்பீடு தான்.
அதற்குக் காரணம், நமது கண்கள் ஒன்றும் அசைவில்லாத நிழற்படக் கருவி இல்லையே. நமக்கு மொத்தம் இரண்டு கண்கள் உண்டு, எனவே இந்த இரு விழிகளும் தொடர்ந்து அங்கும் இங்கும் சுழன்று காட்சிகளைக் கண்டு, அவற்றை மூளையில் விரிவான படமாகப் பதிவு செய்கின்றது. எனவே, விஞ்ஞானிகளின் கணிப்புப் படி நமது கண்கள் 576 மெகாபிக்சல் நிழற்படக் கருவிக்கு ஒப்பானது எனக் கூறுகின்றனர்.
நண்பர்களே, இப்படி ஒரு hi tech camera வை உங்கள் உடலுக்குள்ளே வைத்திருப்பது ஆச்சரியமாக இல்லையா?
சரி நண்பர்களே, இனி நீங்கள் கூறுங்கள். உங்களுக்கு இந்த விஷயம் முன்பே தெரியுமா? இதற்குரிய பதிலை மட்டும் இல்லை, எனது சிறு கட்டுரை பற்றிய அபிப்பிராயத்தையும் எனக்குக் கண்டிப்பாக எனது முகநூல் பக்கத்தில் (www.facebook.com/scinirosh) அறியத் தாருங்கள்!
— Dr Niroshan
1,593 total views, 1 views today
2 thoughts on “நமது கண்கள் எத்தனை மெகா பிக்சல் கொண்டிருக்கிறது?”