என் வெற்றிக்கு காரணம் நடிப்பில் இருந்த பயம்
திரையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த எது உதவுகிறது என்று தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்ய விரும்புகிறார். இந்நிலையில் அவர் சினிமா, நடிப்பு பற்றி கூறியதாவது, ஒவ்வொரு கதாபாத்திரத்தை ஏற்றுக் கொள்ளும்போதும் இதை நம்மால் சிறப்பாக செய்ய முடியுமா என்று கேள்வி அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் வரும்.
இந்த கதாபாத்திரத்தில் நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற கேள்வியும் கூடவே எழும். ஒரு கதாபாத்திரத்தை ஏற்கும் முன்பு பல கேள்விகள் எழும். பிறரை விட எனக்கு அதிக கேள்விகள் எழும். அப்படி அதிகமாக கேள்விகள் எழுவதால் எனக்கு நல்லது மட்டுமே நடக்கிறது.
ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் பயம் ஏற்படும். அந்த பயமும் நல்லது தான். பயத்தால் தான் நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்த முடிகிறது. மகாநதி படத்தில் நடித்தபோது ரொம்பவே பயந்தேன். ஆனால் அந்த படம் வெற்றி பெற்ற பிறகு நான் அடைந்த சந்தோஷத்தை சொல்லி விவரிக்க முடியாது என்கிறார் கீர்த்தி சுரேஷ். மகாநதி படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் சாவித்ரி கணேசனாக நடித்தபோது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் படம் வெளியான பிறகு அவரை விமர்சித்தவர்கள் அமைதியா கிவிட்டனர்.
801 total views, 1 views today