யேர்மனியில் Lüdenscheid நகரில் மீண்டும் James Bond 007
ஐ காண முடிந்தது. ஆம் கடந்த மாதம் (பங்குனி) 13..03.2019 முதல் 30.03.2019 வரை லுடின்சைட் stern centerஇல் Top Secretஎனும் இந்த அரிய கண்காட்சி இடம்பெற்றது.
இந்தக் கண்காட்சியைப்பார்த்தபோது அந்தக்காலத்து பல இரகசியங்கள் அம்பலத்திற்கு வந்து. உளவு பார்ப்பதற்கான அத்தனை கருவிகளும் இற்றைக்கு 90 வருடங்களுக்கு முன்னமே பாவனையில் இருந்துள்ளது என்பதை அறிந்து ஆச்சரியம் கொள்வைத்தது. 1970 வதுகளில் வந்த 007 படங்கள் பலவற்றில் இந்த உளவு பார்க்கும் கருவிகள் காட்டப்பட்டு இருந்து நினைவுக்குவந்தன.


முதலாவது ஒரு குடை .இது குடையல்ல. இந்தக்குடையின் கீழ் ஸ்ரன் கண் (Stun Gun) என எழுத்ப்பட்டு இருந்தது.
இந்தக்குடையின் கையைப்பிடித்துதுக்கொண்டு விரித்தால் துப்பாக்கி உடன் தயார் நிலைக்கு வந்துவிடும். இந்தக்குடையினை கிழக்குயேர்மனி மாகாணப் பாதுகாப்பு அமைச்சு 1980 இல் பாதுகாப்புக்காக பயன்படுத்திவந்தது. Ministry for Stats Security in East Germany1980. பார்ப்பதற்கு குடை அதனை விரித்தால் கொலை.
அடுத்து


Jacket Pocket Camera (T90466)

இது பார்ப்பதற்கு சிறியதாக இருக்கும். இதனை Jacket எங்கும் மறைத்து வைத்துவிட்டு Remote ஐ Pocketஇல் வைத்திருந்தால் போதும் நினைத்த நேரம் படம் எடுக்கலாம்.


அடுத்து Kiew 30 Kompakt kamara 1974 இதனுடைய படச்சுருள் அளவு 16mm. இந்தக் கமாரமூலம் 50 cm தூரத்தில் இருந்து தெளிவான படம் எடுக்கலாம். அதனை பிரதி எடுக்கும்போது A4 அளவில் பெரிதாகவும் தெளிவாகவும் எடுக்கமுடியும். இது இரகசியங்களை ஆராய கிடைத்த சிறப்பான கமரா.
இந்தக்கமாரா பெண்களின் மார்புக்குள் ஒளிந்திருந்து (அதாவது அவர்கள் அணியும் பிராவுக்குள் மறைக்கப்பட்டு) அவர்கள் முன் உரையாடும் மனிதர்களை துல்லியமாகப்படம் எடுப்பதுடன் அவர்களது உரையையும் பதிவுசெய்து விடும்.
இந்தக் கமராமூலம் பெண்கள் எடுத்த படங்களில் எல்லாம் நேராக படத்திற்கு போஸ்கொடுப்பதுமாதிரி இருந்ததாம். காரணம் ஆண்களின் பார்வை பெண்களின் மனத்தை விட மார்பின்மீதே கண்ணாக இருக்குமாம். இதானால் பல குற்றவானிகளின் முகம் தெளிவாக எடுக்க இக்கமராவால் முடிந்ததாம். இந்தக்கமரா இன்றோ மூக்குநுனியில் விரல் வைக்கும்படி தொழில் நுட்பத்தில் வளந்துள்ளது. இன்று இது தமிழ்நாட்டிலே பொள்ளாச்சி வரை பாவனையில் உள்ளது..
சட்டைப் பொத்தான் கமரா
அடுத்து வரும் சட்டைப் பொத்தான் கமரா F21 with Button Set German Robot 1948 இந்த கமராவின் முகம் பொத்தானுக்குள் மறைந்து இருக்கும் .அந்த அளவு சிறிய கமரா. சிறதுவாரம்போதும் அதனூடாக மறைந்திருந்து படம் எடுக்க..


Robot BND 1980

1980 உருவாக்கப்பட்ட Speed Camera இது. தனிய வாகனங்களின் வேகத்தைக் கணிக்கமட்டுமல்ல. இது ஆவணங்களையும் தெளிவாகப் படம் எடுக்கவும் பயன்படுத்தப்பட்டது. இது 250 படங்களை ஒரே மூச்சில் எடுக்கவல்லது. Film Roll மாற்றத்தேவை இல்லை. இதனால் யேர்மனியின் பெரும் வீதிகளில் (Auto Bhan) வேகக்கட்டுப்பாட்டிற்கு இவை பொருத்தப்பட்டு இருந்தன இவை 2000 ஆண்டுவரை பயன்பாட்டில் இருந்தமை குறிப்பித்தக்கது. இன்று டியிட்டல்யுகம் 1000 படங்களுக்குமேல் எடுத்தாலும் ஆச்சரியம் இல்லை.அன்று 250 என்பது பெரும் ஆச்சரியத்திற்குரிய எண்ணிக்கை.
உலகிலே மிகச்சிறய Camera 1937 தயாரிக்கப்பட்டது 50 படங்கள் தொடர்ச்சியாக எடுக்கலாம்.இது தயாரிக்கப்பட்ட காலத்தை எண்ணியபடி பாருங்கள் அப்போதுதான் அதன் தார்ப்பரியம் புரியும்.


Russischer Nachban einer Leica M um 1938

உலகில் மிகச்சிறய கமரா இது. இது 1930ம் ஆண்டு உலகமகாயுத்தத்தின்போதும், மற்றும் நாட்டின் இரகசிய உளவுபடையின் உபயோகத்திற்கும் பெரிதும் கைகொடுத்தது. இந்த கமாரா. இதனுடைய Lens மிகவும் துல்லியமானது. இதனுடைய படங்கள் எல்லாம் High Quality உடையது அதில் இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால் படம் எடுக்கம்போது சத்தமே வராது. இரகசியம் என்றாலே உஷ் சத்தம் வரப்படாது.அது இங்கு வரவே வராது.
அடுத்து கதவின் திறப்பு ஓட்டைக்குள்ளால் எடுக்கும்; கமரா. இதன் விட்டம் ஒரு சிறு பூட்டின் துவாரத்தளவே இருக்கும். ஆனால் புகுந்துவிiளாடும் அளவிற்க்கு படம் எடுக்கும். இந்த திறப்போட்டைக்குளால் பார்ப்பது தமிழ்படங்களில் 1970 களில் ஆரம்பமான திறில் காட்சிகள். ஆங்கிலப்படத்தில் சுட்டகாட்சிகள் அன்று நிறையவே வந்துள்ளன.


அடுத்து குடையில் துப்பாக்கி பாரத்தோம் இப்போது குடையில் கமரா இது 1978 தயாரிக்கப்பட்டது. இது மிகச்சிறியது. 35 அஅ இது இரகசியமாக படம் எடுக்க தயாரிக்கப்பட்டுது. சத்தம் மூச்சே விடாது பிறகென் படம் தானே இரகசியங்களை அம்பலப்படுத்தும். இதன் கமரா குடையின் கீழ் அடிப்பாகத்தில்; அமைந்திருக்கும்? அன்றாடம் பாவிக்கம் பொருட்களில் இந்தக் கமரா அல்லது துப்பாக்கி இவற்றை மறைத்தோ அல்லது அந்த உருவத்pலே உருவாக்கினால் பெரும் சந்தேகம் பார்ப்பவர்களுக்கு வரமாட்டாது. அதனாலேயே குடை,பெண்களின் பிரா எனத் தெர்ந்தெடுத்தார்கள்.
இது மட்டுமா கச்சன் கத்தி சிலுவைக்கத்தி
உளவு பார்க்கவும் கொலைசெய்யவும் மக்களுக்கு எதில் சந்தேகம் வராதோ அதனையெல்லாம் பாவித்துள்ளார்கள் இதற்கு சிலுவையும் விதிவிலக்கு அல்ல.


ஒரு சிலுவைச் சங்கிலியின் அடியில் சிறு கத்தியும்,கைச்சான் கடலையைப் பிடியாக அதனுள் கத்தியும் வைத்து செய்துள்ளார்கள்.
அன்று இக்கருவிகள் பாவிக்கும்பொது அதனைக் கண்டுகொள் முடியாதபடி மக்கள் அறிவு விருத்தியாக இருக்கவில்லை.
இன்று சிறு குழந்தைக்கும்; இவை தெரியும் வண்ணம் ஊடகங்கள் ஊதி ஊதிக்காட்டுகின்றன.மற்றும் அறிவியல் வளர்ந்தும் விட்டது. எனவே இன்று உள்ள சமுகத்தை குறிவைத்து அவர்களின் அறிவைக்கொண்டு கண்டுபிடிக்கமுடியாத படி இன்னும் பலபடி மேலே தொழிநுட்பத்தை புகுத்தி, அன்று செய்தவற்றை அடிப்படையாகக்கொண்டு இன்று இன்னும் தெளிவாககக் கூர்மையாகத் தயாரித்து வருகிறார்கள். அந்த தயாரிப்புக்கும் அடிவகுத்துக்கொடுத்த அந்தக்காலத்தை மறக்:கமுடியவில்லை. இன்றும் 007 என்றால் இந்த உளவாளியே எம் கண்ணுக்குத் தெரியும்..

2,849 total views, 9 views today

1 thought on “James Bond 007

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *