அறநெறித்தமிழ் பாடசாலையின் 15வது ஆண்டு விழா
எசன் தமிழர் கலாச்சார நற்பணி மன்றத்தின் ஒரு அங்கமான அறநெறிப் பாடசாலையின் 15வது நிறைவு ஆண்டு விழா எசன் நகரில் அமரர் சங்கீத பூஷணம் செல்வ சீராளன் அரங்கில் வெகு சிறப்பாக 02.03.2019 திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
அறநெறிப்பாடசாலையின்; மாணவிகள் வரவேற்பு நடனத்தை அளிக்க நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. மாணவர்களின் ஆடல்பாடல் பேச்சு என விழா களை கட்டி நின்றது. பாடசாலையின் சின்னஞ்சிறார்கள் அளித்த பாடல்கள் நடனங்கள் காவடி.நாடகம், என அனைத்தும் ரசிக்கக் கூடியவையாக இருந்தன இவர்களை உருவாக்கிய ஆசிரியர்களுக்கு பாராட்டுக்கள். விழாவில் முத்தாய்ப்பு வைத்தநிகழ்ச்சியாக அமைந்தது பல்வேறு துறை சார்ந்த கலைஞர்கள் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி மதிப்பளிக்க
எழுத்தாளர் பூவரசு ஆசிரியர் இந்துமகேஷ்;, கலைவிளக்கு சு.பாக்கியநாதன் அறிவிப்பாளர் பாலா நகைச்சுவை நடிகர்,கல்வியாளர், திரு. தர்மசோதிராஐன் துர்காதுரந்தரர் ஜெயந்தி நாதக்குருக்கள் சிவசாமிக்குருக்கள், விமர்சகர் கந்தசாமி கிருஷ்ணமூர்த்தி, ஆசிரியை திருமதி இந்து தெய்வேந்திரம்
ஆகியோர் இந்த விருதுக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தனர். விழாவில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த எசன் நகர பிதா திரு வுhழஅயள முரகநn அவர்கள்
அனைவருக்கும்
பொன்னாடைப்
போர்த்தி பாராட்டுப்
பத்திரம் வழங்கி
கௌரவித்தார். பல
சமய மற்றும்
இலக்கிய
நண்பர்களதும்,
ஊடகவியலாளர்
களினதும்
வாழ்துரைகளுடன் திரு. நயினைவிஜயன் அவர்களின் நன்றியுரையோடு விழா இனிதே நிறைவுற்றது. வாழ்க வளர்க எசன் அறநெறிப்பாடசாலை
735 total views, 2 views today
2 thoughts on “அறநெறித்தமிழ் பாடசாலையின் 15வது ஆண்டு விழா”