மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் கதை படமாகிறது.
ஒருவர் உயிரோடு இருக்கும்போது அவரது வரலாற்றை படம் எடுக்க அசாதரண துணிச்சல் வேண்டும். கலைஞர் மு.கருணாநிதி,மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்.செல்வி ஜெயலலிதா இவர்கள் வாழும்போதே இவர்களது கதையை இது உண்மைக் கதையல்ல என போட்டு உண்மைக்கதையைத் தழுவி இருவர் என்ற பெயரில் எடுத்தவர் இயக்குனர் மணிரத்தினம். இதில் பிரகாஷ்ராஜ், கலைஞர் மு.கருணாநிதி யையும், மோகன்லால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களையும், ஐஸ்வர்யராவ் செல்வி. ஜெயலலிதாவையும் கண்முன் நிறுத்துவதாக படம் எடுத்தார்.
அவர்கள் யாவரும் வாழும்போது இக்கதை கதை உண்மையல்ல, பக்கச்சார்பானது என எவ்வளவு எதிர்ப்புகள் கிளம்பியது. அதற்குள்ளும் படம் வெளிவந்து வெற்றிபெற்றது. தற்போது சாவித்திரியின் பாத்திரத்தில் கீர்த்திசுரேஷ் நடிக்க, படம் வெளிவந்து வெற்றியானது. கதை முழுவதும் உண்மையல்ல என சலசலப்பு வந்தாலும், அதில் சம்மந்தப்பட்ட காதல் மன்னன் ஜெமினிகணேசனும், நடிகையர்திலகம் சாவித்திரியும், உயிருடன் இல்லாதமையால் அவர்கள் பிள்ளைகள் கொடுத்த எதிர்புக்கூட எடுபடவில்லை.
தற்போது மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் கதை படமாகிறது. இப்படம் முழுக்க உண்மையாக எடுத்துவிடமாட்டார்கள் என்பது திண்ணம். மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப கதை அமையும். பிழை என்றாலும் எதிர்க்க ஜெயலலிதா இப்போ இல்லை. இந்த நிலையில் அவர்கதை படாமாகிறது. அவரது கதையை இரு நிறுவனங்கள் வேறு வேறு கதாநாயகிகளைவைத்து எடுக்கின்றார்கள்.
விஜய் இயக்கும் தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிகை கங்கணா ரனாவத் நடிக்கிறார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை கங்கணா ரனாவத். எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல், தானாகவே முயற்சித்து இன்று இந்த நிலைக்கு வந்திருக்கிறார். குயீன்,தானு வெட்ஸ் மானு உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் கங்கணா ரனாவத் பெற்றுள்ளார்.
இன்று 23.03.2019 கங்கணாவின் பிறந்த தினம் என்பதால், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். பெருமைப்படுகிறேன்; இதுகுறித்து பேசிய கங்கணா, “இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய வெற்றி சரித்திரத்தை கொண்டவர் ஜெயலலிதா. ஒரு நடிகையாக இருந்து இந்தியாவின் முக்கியமான அரசியல் தலைவராக உயர்ந்தவர். அவரது கதை, ஒரு வரலாற்று சினிமாவுக்கு மிகவும் ஏற்புடையது. அதில் நடிப்பதில் எனக்கு பெருமை”, என தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் தலைவி படம் தமிழ், இந்தி என இருமொழிகளில் உருவாகிறது. இந்தியில் இப்படத்திற்கு ஜெயா என பெயரிடப்பட்டுள்ளது. போட்டி போடும் திரைத்துறை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பதில் ஏகப்பட்ட போட்டி நிலவுகிறது. ‘தி அயர்ன் லேடி’ எனும் பெயரில் பிரியதர்ஷிணி இயக்கும் படத்தில், ஜெயலலிதா வேடத்தில் நித்யா மேனன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் ஜெலலிதாவேடத்தில் நடித்தால் என்ன? ஆனால் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் வராமல் கதை நகராதே. அப்படி என்றால் எம்.ஜி.ஆர் ஆக நடிக்கப்போவது யார்?
நடிகர் ஆர்யா, நடிகை சயீஷாவின் திருமணம் கடந்த 10ம் தேதி ஹைதராபாத்தில் நடந்தது. இதையடுத்து அவர்கள் தேனிலவுக்கு சென்றுள்ளனர். தேனிலவுக்கு சென்ற இடத்தில் எடுத்த புகைப்படங்களை சயீஷா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
சயீஷா வெள்ளை கவுன் அணிந்திருக்கும் சயீஷாவை ஆர்யா புகைப்படம் எடுத்துள்ளார். ஆர்யாவுக்கு இவ்வளவு அழகாக புகைப்படம் எடுக்கத் தெரியுமா?.
ஆர்யா ரொம்ப ஜாலி பேர்வழி. படப்பிடிப்புத்தளத்தில் எப்பொழுதுமே ஜாலியாக பேசிக் கொண்டிருப்பார். சயீஷா அப்படியே நேர் எதிரானவர். அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருப்பவர். அவர்களுக்கு இடையே எப்படி காதல் ஏற்பட்டது என்று சில திரையுலக பிரபலங்களே வியந்துள்ளனர். காப்பான் பட படப்பிடிப்பில் ஆர்யாவும், சயீஷாவும் ஒன்றுமே தெரியாதது போன்று ஆளுக்கு ஒரு பக்கமாக இருந்துள்ளனர். அவர்கள் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானபோது அந்த படக்குழுவை சேர்ந்த பலர் வியந்துள்ளனர். காதலுக்கு பேச்சு எதற்கு! பார்வை ஒன்றே போதும் அல்லவா! சரி சுயம்வரம் இன்றி ஆர்யா சுயமாக தேடி ஒருவரை எடுத்துவிட்டார். காதலுக்குமரியாதை.
807 total views, 1 views today