தெளிவும் தெரிவும் – 04
சிலரது அன்பு பனித்துளி போன்றது.
சூரியன் வரும் வரை தான் – அது
புல்லோடு வாழும்.
தூக்கி எறிவதால் உங்களை புரிந்து
கொள்ளவில்லை என்று வருந்தாதீர்கள்.
அவர்களுக்கு வேறு ஒருவரை பிடித்திருக்கலாம் !
பிடித்தவர்களை அவர்களின் விருப்பம் போலவே வாழ விட்டுப் பாருங்கள். விரைவில் அவர்களையே விலக நேரிடும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப்பவே !
உலகத்தை உண்மையாக நேசிப்பவர்கள் மரணத்தைப் பார்த்து பயப்படுவது இல்லை
அதனால் பிரிவு ஏற்படுகிறது என்றே வருந்துகிறார்கள்.
பலர் கூட இருந்தாலும் பயனில்லை… பறிக்கப்பட்டு விடும் புன்னகை சிலர் விலகினாலே போதும் சொந்தமாகி விடும் கண்ணீர்.
பிடித்து இருக்கிறது என்பதால்
யாரும் மேலதிக கொடுக்க விளக்கம் முனையாதீர்கள் – நேசம் என்பது எந்த எதிர்பார்ப்புகளும் அற்றது.
வெள்ளம் அதிகமாகி விட்டால் எப்படியாவது அணை உடைந்து தானே ஆக வேண்டும்.
எவ்வளவுதான் அடக்கி வைத்திருந்தாலும் சிலரிடம் பேசும் போது மட்டும் கண்ணீர் பெருக் கெடுத்து ஓடும்.
நிழலைப் போன்றது தான் நம்மோடு இருக்கும் உறவுகளும் …
சேர்ந்து வரும் பின்ணுக்கு வரும் சில வேளை முன்னோக்கி போகும் இருள் என்றாள் இல்லாமலே போய்விடும்.
சொல்லி புரிய வைக்க முடியாதது வேதனை வாழ்க்கையின் எந்த நிலைக்கு போனாலும் அதை அனுபவித்தவன் ஒருபோதும் மறக்க மாட்டான்
மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை நீங்கள் நினைக்க ஆரம்பித்து விட்டால்…
நீங்கள் உங்களை இழந்து விடுவீர்கள்.
அழகுக்காக மட்டுமே ஒன்றை அடைந்து விடாதீர்கள் முதலில் அதன் கவர்ச்சி பிரமிப்பை ஏற்படுத்தும் பிறகு அதை விட நீங்கள் இன்னொன்றை ரசிக்கும்போது தன்னிலை மறந்து விடுவீர்கள்.
நெடுந்தீவு முகிலன்
1,819 total views, 4 views today