மனோதிடமுள்ள பிள்ளைகளை வளர்த்தெடுக்க, மனோதிடமுள்ள பெற்றோராக நாம் இருக்கவேண்டும்


குழந்தைப்பருவம் எப்பொழுதும் அழகானது மட்டுமல்ல. சவால்கள் நிறைந்தது. குழந்தைகள் கோபம், கண்ணீர், மற்றும் அடம்பிடித்தலும் நிலத்தில் விழுந்து புறழ்வதும், குழந்தைப்பருவத்தில் எதிர்பார்க்கவேண்டிய ஒன்றே. உணர்வுகள் இல்லாமல் மனிதர்கள் இல்லை. பெற்றோராக, நம் எதிர்பார்ப்புகளும் அதற்கு அமைவாக இருக்கவேண்டும். சவாலான பொழுதுகளில் Pause button இனை அழுத்த மறக்காதீர்கள் என்கிறார்கள் csey நிபுணர்கள். குழந்தை நிலத்தில் விழுந்து புரளும் சந்தர்ப்பத்தில் கூட, இது உதவும். பொதுவாக, பெற்றோரின் இதய துடிப்பு, மூச்சு வேகம் மற்றும் உடல் தொழிற்பாடுகள் நம் குழந்தைகள் உடல் தொழிற்பாடுகளோடு இசைவாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே, பெற்றோராக நாம் அமைதி காக்கும்போது, அந்த அமைதி, ஆறுதல், நம் பிள்ளைகளையும் அமைதிப்படுத்தும்.

பல சமயங்களில், ஏன் இப்படி செய்கிறாய் என நம் பிள்ளைகளை கேட்கிறோம். அதே கேள்வியை, அதாவது நான் ஏன் இப்படி கோபப்படுகிறேன் அல்லது பதட்டப்படுகிறேன் என்ற கேள்வியை நீங்களே உங்களிடம் கேட்டு கொள்ளுங்கள். அதற்கான காரணத்தை கண்டறிந்து திருத்த பாருங்கள். எதற்கு “ஆம்” என்கிறோம், எதற்கு “இல்லை” என்கிறோம் என ஆராய்ந்து பாருங்கள். பிள்ளையின் அழுகையை, ஆரவாரத்தை நிறுத்த எப்பொழுதும் அவர்கள் கேட்பதற்கெல்லாம் “ஆம்” என்று நீங்கள் தலையாட்ட தேவையில்லை. அன்புடன் “இல்லை” என மறுக்க, பெற்றோராகிய நாம் கற்றுக்கொள்ளவேண்டும். “ஆம்” என சொல்வது அந்த பொழுதுக்கு ஒரு இலகுவான பதிலாக இருக்கலாம். ஆனால், காரணத்தை பிள்ளைகள் புரிந்துகொண்டால், “இல்லை” என்ற பதில் பயனுள்ளதாகிறது. அதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கி கொள்ளுங்கள்.

பிள்ளைகளை உங்கள் சுயமரியாதையின் பிரதிபிம்பமாக பார்க்காதீர்கள். அப்படி பார்க்கும்போது, உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அவர்கள் இல்லையெனில் ஏமாற்றம் அடைந்துவிடுவீர்கள். பொதுவாக, இது எம் சமூக

வரைமுறையாக இருக்கிறது. அதாவது, எம் பிள்ளைகள் சரியாக இல்லை என்றால், அது பெற்றோராகிய நம் தவறுதான் என்பது. அந்த எண்ணத்தை விடுத்து, நாம் அமைதி கொள்ளவேண்டும். நமக்கு ஒரு வாழ்க்கையை நாம் அமைத்து கொண்டது போல், எம் பிள்ளைகளுக்கும் ஒரு வாழ்க்கை அமையத்தான் போகிறது.

தோல்விக்கு பயந்து
புதிய விடயங்களில்
இறங்க தயங்குகிறாரா?

8-14 வயதில், பெண்பிள்ளைகளின் தன்னம்பிக்கை 30மூ குறைவடைகிறது.
14 வயதில், பெண்பிள்ளைகள்அதி தாழ் நிலையில் இருக்கும்போது, ஆண் பிள்ளைகள் தன்னம்பிக்கை 27% அதிகமாக இருக்கிறது. இந்த தன்னம்பிக்கையை வளர்த்தெடுக்க நாம் தான் எம் பெண் பிள்ளைகளுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும். அவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும்.
உங்கள் மகள் சவால்களை எதிர்கொள்ள பயப்படுகிறாரா? தோல்விக்கு பயந்து புதிய விடயங்களில் இறங்க தயங்குகிறாரா? வகுப்பில் மற்றோர் முன்னால் பேச வெட்கப்படுகிறாரா? புது நண்பர்களை ஏற்படுத்திக்கொள்ள பின்தங்குகிறாரா? இந்த சந்தர்ப்பங்களில், அதீத யோசனை, மற்றவர்களை திருப்திப்படுத்த அதீத பிரயத்தனம், மற்றும் pநசகநஉவ ஆக தான் இருக்கவேண்டும் என்ற எண்ணம், எல்லாமே தோன்ற ஆரம்பித்து, உங்கள் மகளின் தன்னம்பிக்கையை மேலும் குறைத்துவிட தொடங்குகிறது.

பதின்மவயதோடு ஏற்படும் மூளை மாற்றங்கள் பெண்பிள்ளைகளில் தேவையற்ற யோசனைகளை அதிகரித்து விடும் சாத்தியம் இருக்கிறது. அவர்களுக்கு உதவ, புதிய சவால்களை துணிவோடு அணுக நாம் ஊக்கம் அளிக்கவேண்டும். பெற்றோராக உங்கள் வாழ்க்கை சவால்களை எப்படி எதிர்கொண்டீர்கள், தோல்விகளை எப்படி ஏற்றுக்கொண்டீர்கள் என்பது பற்றி எல்லாம் உங்கள் பிள்ளைகளோடு நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். எது ஒரு பிள்ளைக்கு சவாலாக அமையும் என்பது வேறுபடலாம். சிலருக்கு, ஒரு புதிய விளையாட்டு குழுவில் இணைவது சவாலாக இருக்கலாம்.
அதுவே சிலருக்கு ஒரு நண்பரை வீட்டுக்கு வரவேற்பது சவாலாக இருக்கலாம். இப்படியான சவால்களை எடுக்கவும், பிள்ளைகளின் தேவையற்ற பயத்தை போக்கவும் அவர்களுக்கு உறுதுணையாக இருங்கள். வாழ்க்கையின் மேடு பள்ளங்களை அரவணைக்க உங்கள் பிள்ளைகளை தயார்படுத்துங்கள். உங்கள் மனோதிடம், உங்கள் பிள்ளைக்கும் நிச்சயம் தொற்றிக்கொள்ளும்.

பதின்மவயதில் college/university க்கு எப்படி தயார்படுத்தலாம்?
உங்கள் பிள்ளைக்கு தொடர்ந்து படிக்க college அல்லது university யில் இடம் கிடைத்திருந்தாலும், அவர்கள் அதற்கு தயாராக இருக்கிறார்களா? முன்கூட்டியே, high school இல் இருக்கும் உங்கள் பிள்ளைகளின் சுயாதீனத்தை (independence) பலமாக்குவதன் மூலம், உங்கள் பிள்ளைக்கு நீங்கள் உதவலாம். பெற்றோராக நாம் 100% நம்பிக்கையோடு இருக்கலாம். ஆனால் நம் பிள்ளைகளை பற்றி ஆரம்பத்திலேயே கணிப்பிட்டு பார்க்கவேண்டும். இங்கு மூன்று முக்கிய விடயங்கள் அடங்கும்: ஆரோக்கியம், கல்வி, மற்றும் நிர்வாகம். இவற்றில் நம் பிள்ளைகள் எவ்வளவுக்கு சுயாதீனத்தை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்?

ஆரோக்கியம் என்று பார்த்தால், சில பிள்ளைகளுக்கு ஏதாவது நோய் நிலை இருக்கலாம் (நீரிழிவு, Asthma etc) குடிஃபோதை பாவனை, அல்லது ஒழுங்கற்ற நித்திரை பழக்க வழக்கமாக இருக்கலாம். இப்படியான ஒரு பிரச்னையை தாமாக சுயாதீனமாக கையாள பழகி இருக்கிறார்களா என்பது முக்கியம். உதாரணமாக, பெற்றோராகிய நீங்கள் தான் உங்கள் பிள்ளையை காலையில் யடயசஅ வைத்து எழுப்ப வேண்டும். பாடசாலைக்கு நேரத்துக்கு போக நினைவுபடுத்த வேண்டும் என்றால், உங்கள் பிள்ளை மேற்படிப்புக்கு இடம் மாறி சென்று எப்படி சமாளிக்க முடியும்?

அடுத்தது கல்வி, பாடசாலை சார்ந்தது. உங்கள் பிள்ளை பள்ளி வேலைகளை தனியாக தரம் பிரித்து, அந்தந்த விடயங்களை சரியான நேரத்துக்கு செய்து, பாடசாலையில் ஒப்படைக்க வேண்டிய விடயங்களை சுயாதீனமாக, சரியாக, நேரத்துக்கு ஒப்படைக்கிறாரா? அல்லது நீங்கள் கண்ணில் விளக்கெண்ணெய் வைத்து அவர்களை மேல்பார்வை பார்க்கவேண்டி இருக்கிறதா?
11ம் வகுப்பின் இறுதியிலும், “homework police” போல் நீங்கள் உணர்கிறீர்கள் என்றால், நீங்கள் விரைவில் இந்த வேலையில் இருந்து ஓய்வெடுத்து கொள்ளவேண்டும் என்றே பொருள். பாடசாலை வேலை சார்ந்து உங்கள் பிள்ளை பொறுப்பை உணர்ந்துகொள்வது மிக முக்கியம். பல சமயங்களில் எங்கள் பிள்ளைகள் பாடங்களில் என்ன புள்ளிகள் வாங்குகிறார்கள் என்பதிலேயே நம் கவனம் இருக்கும். ஆனால், தன்னிச்சையாக ஒரு பிள்ளை படித்து எடுக்கும் ஊ பசயனந நீங்கள் பின்னாலும் முன்னாலும் கண்காணிப்பதால் எடுக்கும் யு – அல்லது டீ – இனை விடவும் சிறந்தது. ஏனென்றால், மேல்படிப்பில் வெற்றிபெறுவதற்கு கல்வி-சார்ந்த சுயாதீன பழக்க வழக்கங்களை உங்கள் பிள்ளைகள் வளர்த்துக் கொள்வதென்பது மிக முக்கியம். அதுவே வெற்றியை தரும்!
உங்கள் பிள்ளை மேற்படிப்புக்கு தயார் என்பதற்கான மூன்றாவது அறிகுறி, நாளாந்த, எளிமையான விடயங்களை உங்கள் பிள்ளை சுயாதீனமாக செய்கிறார் என்பதே. இது ஒரு கால அட்டவணையை (calender) வைத்து தன் அலுவல்களை கவனிப்பதாக இருக்கலாம், பாடசாலைக்கு தேவையான படிவங்களை நிரப்புவதாக இருக்கலாம், காலதாமதம் இன்றி செய்ய வேண்டிய விடயங்களை செய்வது, தன் விடயம் சார்ந்து ஒரு எளிமையான தொலைபேசி அழைப்பை ஏற்படுத்துவது..இப்படி, ஒரு வயத்துவந்தவர்க்குரிய சில காரியங்களை செய்யும் பக்குவம் உங்கள் பிள்ளைக்கு இருக்கிறதா?

குழந்தை பருவத்தில், பதின்மவயதில், பெற்றோராக நாம் வழிகாட்டினோம்.

college/university வாழ்க்கைக்கு தானே இந்த விடயங்களை நிர்வகிப்பது என்பது உங்கள் பிள்ளைக்கு இன்றியமையாததாகிறது.

— டாக்டர் புஷ்பா கனகரட்டணம்.

2,278 total views, 12 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *