ஈழத்துச் கலைச்சிங்கம் தி. விஜயசிங்கம்.
மக்கள் திலகத்துடன் எம்.ஜி.;ருடன் பணியாற்றிய
ஈழத்துச் கலைச்சிங்கம் தி. விஜயசிங்கம்.
பன்னாலை – தெல்லிப்பழையில் வாழ்ந்த திருவருள் சின்னத்தங்கம் தம்பதிகளுக்கு மூத்தண்ணை (தனபாலசிங்கம்) பொன்னுக்கண்டு (குலசிங்கம்) சின்னத்தம்பி (தர்மகுலசிங்கம்) செல்லக்கண்டு (பரராஜசிங்கம்) அப்புக்கண்டு (விஜயசிங்கம்) ஜெயம் (ஜெயசிங்கம்) தம்பிப்பிள்ளை (துரைராஜசிங்கம்) சறோ (சரஸ்வதி) என செல்லமாக அழைக்கப்பட்ட பிள்ளைகள் எண்மர்.
1938 ல் பிறந்த விஜயசிங்கமும் நானும் 1946 ல் ஒரே வகுப்பு மாணவர்களாக பன்னாலை சேர் கனகசபை வித்தியாசாலையில் ஆரம்ப கல்வி கற்க ஆரம்பித்து பின்னர் மகாஜனாக் கல்லூரியில் 1956 வரை கல்லூரி மாணவர்களாகத் தொடர்ந்து ஏழு தசாப்தங்களாக நண்பர்களாக தொடர்பில் இருந்தோம்.
1950 களில் மகாஜனா கல்லூரியின் சிறந்த விளையாட்டு வீரராக விஜயசிங்கம் விளங்கினார். யுனபையச இல்லத்தைச்சார்ந்த இவர் பங்கு பற்றாத ஓட்டப் போட்டிகள் இல்லை என்றே சொல்லலாம்.ஓட்டப் போட்டிகள் உயரப்பாய்தல் ஆகியவற்றில் முதல் இடம் அனேகமாக வகித்த இவர் 1953 ல் இல்ல விளையாட்டு அணித் தலைவராகவும் (யுவாடநவiஉ ஊயிவயin) 1955 ல் இல்லத் தலைவராகவும் (ர்ழரளந ஊயிவயin)திகழ்ந்தார்.1957 ல் கல்லூரி விளையாட்டு சாதனை வீரராக (யுவாடநவiஉ ஊhயஅpழைn) தெரிவு செய்யப்பட்ட இவர் யாழ் கல்லூரிகளுக்கு இடையிலான (து.ளு.ளு.யு) விளையாட்டுப் போட்டியில் உயரப்பாய்தலில் சாதனை நாட்டியிருந்தார். மகாஜனாக்கல்லூரி 2 னெ நுடநஎநn உதைபந்தாட்ட அணித்தலைவராக 1954 ல் பணியாற்றிய இவர் தொடர்ந்து வந்த மற்றைய ஆண்டுகளில் 1 ளவ நுடநஎநn அணியில் விளையாடினார்.
அதிபர் தெ.து.ஜயரத்தினம் அவர்களின் அபிமானத்துக்குரியவரான விஜயசிங்கத்தின் மறு பக்கம நடிப்புக்கலையாகும். ஆண்டு தோறும் இடம் பெறும் கல்லூரி ஸ்தாபகர் தின நிகழ்வின் நாடகங்களில் கதாநாயகனாக இவர் நடித்தவை துரோகி யார்? ராஜ ராஜ சோழன் அம்பிகாபதி ஆகியவை.1955 ல் இல்லங்களுக்கிடையே நடந்த நாடக போட்டிகளில் இவர் கதா நாயகனாக நடித்த அஞ்சுகம் நாடகம் முதற் பரிசு பெற்று இவருக்கு சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுக்கொடுத்தது.பன்னாலை கணேச சனசமுக நிலைய நிதி சேகரிப்புக்காக இவர் நடித்த நாடகங்கள் அமரசிற்பியும் நிராசையுமாகும்.
நடிப்பிலும் திரைத்துறையிலும் மோகம் கொண்ட இவர் 1959 ல் சென்னை சென்று தேவர் பிலிம்ஸில் சாதாரண ஊழியராக இணைந்தார். விஜயசிங்கத்தின் திறமையையும் கடின உழைப்பையும் கண்ட சின்னப்பா தேவர் எம்.ஏ. திருமுகம் இயக்கிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரின் தாய் சொல்லைத் தட்டாதே திரைப்படத்திற்கு உதவியாளராக நியமித்தார். விஜயசிங்கம் உதவி இயக்குனராகவும் துணை இயக்குனராகவும் 25 படங்களில் பணியாற்றிய பின்னர் இணை இயக்குனராகி 19 திரைப்படங்களில் பணியாற்றினார்.
விஜயசிங்கத்தின் செயற் திறனை உணர்ந்த தேவர் பணம் பத்தும் செய்யும் என்ற திரைக்கதையை இயக்கும் பணியை இவரிடம் ஒப்படைத்தார். விஜயசிங்கத்தின் இயக்கத்தில் 1985 ல் வெளிவந்த பணம் பத்தும் செய்யும் திரைப்படம் 100 நாட்கள் கடந்து வெற்றி நடை போட்டு சாதனை படைத்தது. தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளி வந்த படங்கள் பிறந்தேன் வளர்ந்தேன் எங்க ராஜா கிளி ஜோஸ்யம் பஸ் கண்டக்டர் எல்லாம் பணத்துக்காக ஆகியன தயாரிப்பாளரின் திருப்திக்கு ஓடிய படங்கள்.முண்ணணி நடிகர்கள் பலருடன் பணியாற்றும் சந்தர்பம் இவருக்குக் கிடைத்தது.எம்ஜி.ஆர்.ஜெமினி கணேசன். ரஜனிகாந்த்.ஜெய் சங்கர்.ஏ.வி.எம்.ராஜன். சிவகுமார்.சாவித்திரி. ஜெயலலிதா.கே.ஆர்.விஜயா.சௌகார் ஜானகி.சுஹாசினி என்று பல பிபலங்களுடன் நடிக்கும் வாய்ப்பும் கிட்டியது.
இவர் பணியாற்றிய 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சில:- தாய் சொல்லைத் தட்டாதே தாயை காத்த தனையன் தர்மம் தலை காக்கும் வேட்டைக்காரன் முகராசி தனிப்பிறவி விவசாயி நல்ல நேரம் துணைவன் நேர்வழி வெள்ளிக்கிழமை விரதம் ஆட்டுக்கார அலமேலு அன்னை ஓர் ஆலயம் தாயில்லாமல் நானில்லை அபூர்வ சகோதரிகள்
மூன்று பெண் பிள்ளைகளுக்குத் தந்தையான விஜயசிங்கம் மனைவி லீலாவதியடனும் பிள்ளைகளுடனும் 2011ல் லண்டனில் குடியேறினார்.பிள்ளைகள் மூவருக்கும் தகுந்த வாழ்கைத்துணை தேடி திருமணம் செய்து வைத்தார்.இவருக்கு 6 பேரக் குழந்தைகள் உண்டு.
தனது அனுபவங்களை ஐ.டீ.ஊ தொலைக்காட்சியின்; நேர்காணல் நிகழ்ச்சியான அகக்கண்ணில் பதிவு செய்திருந்தமை லண்டன் வாசிகளின் நினைவில் நிலைத்திருக்கும்.
சிறிது காலம் சுகவீனமுற்று இருந்த விஜயசிங்கம் இலண்டனில் 2019 மார்ச் மாதம் 19 ல் காலமானார்.
Dr.கதிர் துரைசிங்கம்.கனடா.
3,069 total views, 2 views today