இளைஞர்கள் அன்றும் இன்றும்!!!
அஜித்தின் நேர்கொண்ட பார்வை ட்ரெய்லரை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அவர்களை மேலும் மகிழ்ச்சியல் ஆழ்த்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வந்துள்ளன. விவேகம் படத்தின் தோல்வியினால் வருத்தத்தில் இருந்த தனது ரசிகர்களை விஸ்வாசம் படத்தின் வெற்றியின் மூலம் சந்தோஷப்படுத்தினார் அஜித். பொங்கலுக்கு வெளியான இப்படம் வசூலை வாரி குவித்ததோடு அனைத்து தரப்பினரும் கொண்டாடும் படமாகவும் அமைந்தது. அவரது அடுத்த படம் யாரோடு இருக்கும் என கோலிவுட்டே எதிர்பார்த்த நிலையில், தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய ஹெச். வினோத் தான்,அஜித்தின் அடுத்த பட இயக்குனர் என்ற அறிவிப்பு வெளியானது.
அதுவும் இந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரீமேக்கில், அமிதாப் பச்சன் நடித்த வேடத்தில் அஜித் நடிக்க போகிறார் என்றதும் அவரது ரசிகர்களின் மகிழ்சிக்கு அளவே இல்லை. நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அஜித்தின் பிறந்த நாளன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு பின் ஒரே ஆண்டில் இரு அஜித் படங்கள் வெளியாகவுள்ளன. கடைசியாக 2015-ம் ஆண்டு என்னை அறிந்தால், வேதாளம் ஆகிய படங்கள் வெளியாகின. வருடத்தின் தொடக்கத்திலேயே விஸ்வாசம் படத்தின் வெற்றியினால் மகிழ்ச்சியாயிருந்த அஜித் ரசிகர்களிக்கு இதே ஆண்டில் அடுத்த படமும் வெளியாகும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்த நிலையில், அவரது அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி மேலும் மகிழ்ச்சி அளித்துள்ளது. இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்க ஹெச்.விநோத் இயக்குகிறார். இந்த படத்திற்கான பூஜை, ஆகஸ்டு 29 -ம் தேதி நடக்கிறது. அஜித் முற்றிலும் மாறுபட்டு தோன்றும் இந்த புதிய படம் அடுத்தாண்டு, ஏப்ரல் 10 -ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. இதற்கெல்லாம் மேலாக ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகுமென கூறப்ப்ட்ட நேர்கொண்ட பார்வை தற்போது முன்னதாகவே ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாகவுள்ளது. அடுத்தடுத்து வந்துள்ள இந்த 3 அறிவிப்புகளால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திக்கு முக்காடியுள்ளனர்.
சரி இன்றைய இளைஞர்களுக்குத்தான் கொண்டாட்டம் என்றால் அன்றைய இளைஞர்களுக்கும் கொண்டாட(1972) நடிகர்திலகம்.சிவாஜி வாணிஸ்ரீ நடித்த காதல் ஓவியம் வந்தமாளிகை புதுப்பொலிவுடன் டிஜிட்டலில் மாற்றியமைக்கப்பட்டு திரைக்கு வருகிறது. மனதில் மகிழ்ச்சிபொங்கினால் எல்லோரும் இளைஞர்களே!
1972 ஆண்டு இளைஞர்களின் காவியம் வசந்தமாளிகை
இப்படம் கடந்த 1972ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ, நாகேஷ், பாலாஜி, மேஜர் சுவுந்தரராஜன் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். டி.ராமநாயுடு தயாரிப்பில் கே.எஸ்.பிரகாஷ் ராவ் இயக்கத்தில் உருவான இப்படத்துக்கு கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார். இந்த படத்திற்கு கவியரசு கண்ணதாசன் பாடல் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே மெகா ஹிட் ஆனது அனைவருக்கும் தெரிந்ததே. அன்றைய காலகட்டத்தில் கலரில் வந்து வெள்ளிவிழா கொண்டாடிய திரைப்படம் தான் வசந்த மாளிகை.தற்போது இந்த படம் மீண்டும் டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் வி.சி.குகநாதன் மேற்பார்வையில் புத்தம் புதிய பரிமாணத்தில் தாயாராகி வெளிவருகிறது.
2,484 total views, 3 views today