வளங்களில் சிறந்தது மனித வளம் அது உயிருள்ள வளம்.
இன்றைய உலகில் முகாமைத்துவத்தில் மனிதவள முகாமைத்துவம் முக்கியமான பகுதியாக கானப்படுகிறது. ஏனைய வளங்களை முகாமை செய்யவேன்டிய பொறுப்பும் அதிகாரமும் மனிதவளத்தையே சார்ந்து இருப்பதானல் இதனை பற்றிய அறிவு வணிகக்கல்வி மாணவர்களுக்கு அத்தியாவசியமானதாகும்.
முகாமைத்துவம் என்றால் என்ன என்று நோக்கும் பொழுது இங்கு பௌதிக மற்றும் மனித வளங்களை உள்ளீடாகக் கொண்டு முகாமைத்துவ செயன்முறையகளுக்கான திட்டமிடல் ஒழுங்கமைத்தல் கட்டளையிடல் இயைபாக்கம் கட்டுப்படுத்தல்
என்பனவாகும் இவ்வரை விலக்கணத்தில் இரண்டு முக்கிய பகுதிகள் காணப்படுகின்றது.
நான்கு முகாமைத்துவ கருமங்களான திட்டமிடல் ஒழுங்கமைத்தல் கட்டுப்படுத்தல் வழிநடத்தல் வினைத்திறன் வாய்ந்த முறையில் நிறுவனத்தின் குறிக்கோளை அடைதல்
திட்டமிடல் – எதிர் காலத்தை ஆராய்ந்து செயற்திட்டத்தை ஆயத்தம் செய்தல்
ஒழுங்கமைத்தல் – தொழில் முயற்சியின் மனித பௌதீக மூலவளங்களைக் கட்டியெழுப்பலும் அவற்றை ஒழுங்குபடுத்தலும்
கட்டளையிடல் – நிறுவனத்தின் ஆளணியினரைத் தம் பணிகளை ஆற்றப்பண்ணுதல்
இயைபாக்கம் – எல்லாச் செயற்பாடுகளையும் ஒழுங்கு சேர்த்தலும் இனைத்தலும்
கட்டுபடுத்தல் – விதிகள் அறிவுறுத்தல்கள் என்பவற்றிற்கு இயைபாக சகலதும் நடைபெறுகின்றதா என்பதை கவனித்தல்
எனவே முகாமைத்துவம் என்பது தீர்மாணிக்கப்பட்ட குறிக்கோள்களை பயன்தரும் வகையில் அடைவதற்காக பிறரின் ஒத்துளைப்பு பங்குபற்றுதல் தொடர்புறுதல் என்பவற்றை உறுதிப்படுத்தும் ஒரு சமூகச்செயல் முறையே முகாமைத்துவமாகும்.
அதாவது ஒரு நிறுவனத்தின் இலக்கை அடைவதற்காக அந் நிறுவனத்தில் உள்ள மனித பௌதீக வளங்களைத் திட்டமிடல் ஒழுங்கமைத்தல் கட்டுப்படுததுதல் கண்காணித்தல் நெறிப்படுத்தல் போன்ற செயற்பாடுகள் முகாமைத்துவம் எனப்படும்.
அந்த வகையில் முகாமைத்துவ வரை விலக்கணத்தில் குறிப்பிடப்படும் முக்கிய விடயங்கள்.
நிறுவனம்
குறித்த ஒரு பொது இயல்பு ஒன்றை அடைவதற்காக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் குழுவாக ஒன்றினைந்து செயற்படும் அமைப்பாகும்.
வளம்
குறித்த ஒரு நிறுவனம் ஒன்றின் நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு பயன்படுத்தப்படும் அனைத்தும் வளங்கள் எனப்படும்.
இவ்வளங்கள் சுருக்கமாக 5m என அழைக்கப்படும் அவை பின்வருமாறு.
Men – மனித வளம் Money – பணம் Materials – மூலப் பொருட்கள்
Machine- பொறிகள் Methods- முறைகள்
இலக்கு
குறித்த நிறுவனம் மொன்று நீண்ட காலத்தில் அடைய உத்தேசித்துள்ள பரந்தளவான பெறுபேறு இலக்கு எனப்படும் நிறுவன மொன்றின் குறிக்கோள் தொடர்பான பண்புகள் பின்வருமாறு
Specifics- குறிப்பானது measurable- அளவிடக்கூடியது Achievable- உன்மையானது Realistic- காலவரையறையானது.
செயல்திறன்
நிறுவனத்தின் நோக்கத்தினை முழுமையான அளவில் அடைந்து கொள்வதற்காக நிறுவனத்தினால் வரையறுக்கப்பட்ட முறைகளை திறம்பட பின்பற்றி நிறை வேற்றப்படுவதை குறிக்கும்.
வினைத்திறன்
நிறுவனத்தின் வளங்களை சிக்கனமாகப் பயன்படுத்தி குறைந்தளவு விரயத்துடன் கூடியளவு வெளியீட்டைப் பெற்றுக் கொள்வதைக் குறிக்கும்.
உற்பத்தித் திறன்
நிறுவனத்தின் குறித்த ஒரு காலப்ககுதியில் உள்ளீட்டிற்கும் வெளியீட்டிற்கும் இடையிலான தொடர்பே உற்பத்தித் திறன் எனப்படும். எனவே குறிப்பிட்ட குறிக்கோளை அடைவதற்காக அருமையாக கிடைக்கும் வளங்களை அதி உச்ச நேரப் பயன்பாட்டில் திட்டமிடப்பட்டு ஒழுங்கு படுத்தப்படுகின்ற செயற்பாடே முகாமைத்துவமாகும். ஒரு குறிக்கோளின் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேன்டுமாயின் சிறந்த முகாமைத்துவம் அங்கு இருக்க வேண்டும்
அந்த வகையில் முகாமைத்துவத்தில் மனித வளத்தின் உடைய பங்கு பிரதானமானதாக கானப்படுகின்றது அவை அளவிடமுடியாத பங்கு மனித வளத்தின் பங்கு மனிதவளங்கள் இயங்ககூடிய சக்திமிக்க உயிருள்ள வளங்கள் ஆகும் மனிதவளங்களுக்கு சிந்தித்து உணர்ந்து செயல்படு வதற்கான ஆற்றல் உண்டு.
மனிதவளங்களின் பெறுமதி காலத்திற்கு காலம் அதிகரிக்கக் கூடியன ஏனெனில் அனுபவம் பயிற்சி போன்றவற்hல். மனிதவளங்கள் தமக்குரிய கொடுப்பனவைத் தீர்மானிப்பதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளது.
இந்த நூற்றான்டின் மனிதனின் அதி நவீன கண்டு பிடிப்புக்கள் . இலத்திரனியல் சாதனங்கள் ஆராச்சிகள் காலத்திற்கு ஏற்றவாறு புதிய இலத்திரனியல் கண்டு பிடிப்புக்கள். நாடுகளுக்கு இடையிலான போட்டி தன்மைகள். உலகையே வியக்க வைக்கின்றது என்றால். அது மனித வளத்தின் வளர்ச்சியின் ;மாற்றம் தான். அந்த மாற்றம் தான் இன்று மனித வளமாக மாற்றம் பெற்றுள்ளது.
உன்மையாகவே மனிதன் வளமாக மாற்றம் பெற்று விட்டான் நீங்கள் மாற்றம் பெற்று விட்டிர்களா இன்றே மாறுங்கள் இவ் உலகில் உங்களை அடையாளப்படுத்தி கொள்ளுங்கள்.
8,405 total views, 6 views today