தெளிவும் தெரிவும்
வாழ்க்கையில்மோசமானசூழ்நிலை
ஏற்படும்பொழுதுதான் – நீங்கள
;மனிதர்களைப்புரிந்துகொள்வீர்கள்.
நெருக்கமானவர்களின் துரோகமும்
விலகி இருப்பவர்களின் நேர்மையையும்
இந்தசந்தர்ப்பத்தில் நீங்கள்உணரும்
வாய்ப்புகிடைக்கும்.
மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுபார்த்து
நாட்களைவீணடிப்பதைவிட
உங்களைப்பற்றிய சுயத்தை
நீங்களே சிந்தித்துப்பாருங்கள்.
உங்களைப்பற்றி இன்னொருவர்
என்னநினைக்கிறார் என்று நினைப்பதைவிட்டு
உங்களை நீங்களே கணித்துக்கொள்ளுங்கள்.
உங்களை உங்களால் சரிபடுத்தமுடியவில்லை என்றால்
வேறொருவரால் உங்கள் உள்ளுணர்வுகளை
எவ்வாறுசரியாக புரிந்துகொள்ளமுடியும்.
எப்போதுமே உங்கள் மனநிலையை
சமநிலையில்வைத்துக் கொண்டிருந்தால்
எவராலும ;உங்கள் எண்ணங்களை மாற்றமுடியாது.
நிதானம் என்பது
உங்களை நீங்களே நெறிப்படுத்துதல்
அமைதியாகாமல் முடிவுகள் எடுத்தால்
அதில்தடுமாற்றம்இருக்கும்.
நீங்களேஉங்களை நிலைப்படுத்தினால்
யாரும்உங்களை வழிநடத்தவேண்டிய
அவசியம்இல்லை…
உங்கள்பசிக்காக இன்னொருவர்
உணவு உட்கொள்ளமுடியாது
இதேபோன்றதுதான் எல்லாவற்றுக்கும்
உங்களை நீங்களே தயார்படுத்திக்கொள்ளுதல்!
— நெடுந்தீவு முகிலன்
1,513 total views, 3 views today