அலாவுதீனும் அற்புதப் பெண்ணும்
வெகுஜன ஊடகங்களில் தெற்காசியர்களின் பிரதிநிதித்துவம்“ என்ற ஆய்வில் நான் சந்தித்த அம்சங்களையும், சிக்கல்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
Disney நிறுவனம், கடந்த மாதம் Aladdin திரைப்படத்தை வெளியிட்டது. அங்கே அலாவுதீனின் காதலி, இளவரசி ஜஸ்மினின் கதாப்பாத்திரம், Naomi scott என்ற நடிகையால் நடிக்கப்பட்டிருந்தது. நயோமியின் தாயார் உசா ஆபிரிக்காவில் உள்ள உகண்டா தேசத்தில் பிறந்த ஒரு இந்தியப்பெண். குஜ்ராத்தியான உசா, அவரது பெற்றோருடன் சிறு வயதில் இங்கிலாந்திற்கு புலம் பெயர்ந்தார். தகப்பனார் Christpher scott வெள்ளை இங்கிலாந்தவர்.
ஊடக உலகில் ethnic casting என்பது அண்மைக்காலத்தில் மிகச்சர்ச்சையாப் பேசப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட ஒரு இனத்தைச் சேர்ந்த கதாப்பாத்திரத்தை நடிப்பதற்காக அவ்வினத்தைச் சேர்ந்தவரையே தேர்ந்தெடுப்பது நுவாniஉ ஊயளவiபெ ஆகும். „காந்தி“ திரைப்படத்தில் வெள்ளையர் Ben kingsley (1982) மகாத்மா காந்தியாகவும், ஊடநழியவசய திரைப்படத்தில் நுடணை
Elizabeth Taylor மகாராணி Cleopatra வாகவும் (1963) வேற்றினத்தவராக வேசம் போட்டு விருதுகளைத் தட்டிச்சென்றது இன்றைய காலத்தில்
நினைக்கமுடியாதது போல் இருக்க, வாழைப்பழத்தில் ஊசி போடுகின்றனர், அலாவுதீன் (2019) திரைப்படத்தினர்.
நான் வெள்ளை உலகில் நடிக்கச்சென்ற காலங்களில், ஊயளவiபெ அதாவது பேசிக்காட்டப் போகும்போது, தமிழ்த்தோற்றம் இருந்தால், இந்திய அல்லது ஜேர்மன் அல்லாத கதாப்பாத்திரங்களுக்கும், முக்கியமாக வில்லத்தனமான கதாப்பத்திரங்களுக்கும் மட்டுமே பேசிக்காட்டச் சொல்வார்கள். நகைச் சுவையான கதாப்பாத்திரம் என்றால், ஜெர்மன் மொழி அறியாத, முட்டாள் இந்தியர் போல் பேசு என்பார்கள். நேர்மறையான கதாப்பாத் திரங்களைத் தேர்ந்துகொடுத்தால், தெற்காசியர் என இனம்காணக்கூடிய முறையில், நடை, உடை, பாவனை இருக்கவேண்டாம் என்பார்கள். மொத்தத்தில் நேர்மறை யான கதாப்பாத்திரம் என்றால் எவ்வளவு வெள்ளையினத்தை ஒத்ததாக இருக்கமுடியுமோ அப்படி இருக்கவேண்டும் எனும் கோரிக்கை மௌனமாக வெளிவரும்.
இதற்கும் மேலாக எந்த இனத்தைச் சேர்ந்தவர் என தெரியாமல், contact lenses, சுருட்டை முடி என்பவற்றை பயன் செய்து, நடிககர்,நடிகைகளை இனக்கலப்பினராகக் காட்டுவார்கள்.
எந்தளவு இனத்தை அடையாளம் காணமுடியாததாக இருந்தாலோ, அந்தளவு அணுகமுடியாத அற்புதமாக ஆகிடுவார்கள். வெள்ளை உலகின் காமப்பசியிற்கு அயலுலகத்து வசீகர இரையாக நிறத்தவர் நாம்.
அலாவுதீன் புகழ் நயோமியின் வாழ்வியல் பிண்னணியைப் பார்த்தாலோ, அவரது உருவத்தைப்பார்த்தாலோ, எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதை சரியாகச் சொல்ல முடியாததும், அவ்வுருவைக்கொண்டு west London – English முறையில், தூய்மையான ஆங்கிலம் பேசுவது, யேழஅiயின் வியாபாரத்தரத்தைக் கணக்கில்லாது உயர்த்துகிறது.
ஒரு தீவிரவாதியையோ,தீவிரவாதியின் மனைவியையோ திரையிற்காக தேர்ந்தெடுக்கையில்,ஏனோ குறிப்பிட்டு மத்தியகிழக்கினத்தவர்களைத் தேர்ந்தெடுக்கக் கூடியதாக உள்ளார்கள்,ஆனால் மாண்புமிகு Disney இளவரசியை காண்பிக்க ஐரோப்பிய அம்சமுடையவரேதேர்ந்தெடுக்கப்படுகிறார். அதிகபட்சம் வெள்ளையினத்துக்குநிகராகாவும், குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே அந்நிய தோற்றங்கள் இருக்கலாம் என்ற கொள்கை என் ஆய்வில்விரிவானது. ஆண்களைவிட,பெண் நடிகைகளுக்கு இந்த விதி கடுமையாக பிரையோகிக்கப்படுகிறது. இளவரசியின் வீட்டுப்புலியின்
இந்தியப்பெயர் ராஜா, அவர் ஆளும் நாடு அரேபிய கற்பனை நகரம் ஆக்கிரபார், வாழும் மாளிகை இந்துக்கோயில்கள், பள்ளிவாசகல் தாஜ்மஹால் ஆகியவற்றின் உருவத்தைக் கொண்டுள்ளது, அவர் உடை எந்த நாட்டினது என்பதும் குறிப்பிடமுடியவில்லை, அதைவிட அவர் நடனம் கூட பல கலாச்சாரங்களால் வைத்த சாம்பாறு போல் தான் சுவைக்கிறது.
Disney in ஜஸ்மின் பல எடுத்துக்காட்டுகளில் ஒன்றுதான், New girl எனும் அமேரிக்க வெள்ளித்திரை நாடகத்திலும் Hanna simone என்ற நடிகை cece எனும் இந்தியப்பெண்ணாக நடித்துவருகிறார். Hanna simone இன் வாழ்வியற்பின்னணியும் Naomi scott னதுபோல் பல தேசங்களுக்கு சிதறப் பட்டதாகவே தெரிகிறது.
Simone இந்தியத்தகப்பனிற்கும், ஆங்கில, இத்தாலிய, கிரேக்க, ஜெர்மனிய பிண்ணணி கொண்ட தாயிற்கும் இங்கிலாந்தில் பிறந்து, கனடாவில் வளர்ந்த நடிகை. அதைவிட ளுiஅழநெ டெல்ஹியிலும், அமெரிக்காவிலும் வாழ்ந் திருந்தது, அவரது நாணயமதிப்பை ஏற்றுகிறது.
பல இனக்கலப்புகளின் பிண்ணனி (Mixed race) இருந்தால், ஒரேயினத்து பெற்றோர்களைக்கொண்டவர்களைவிட பெறுமதி அதிகமாகிறது.
வெள்ளை ஊடக நிபுணர்களிற்கு நாங்கள் அனைவரும் ஒரு இனம் என்பது போல் Disney காட்டுகிறது. இல்லையெனின் அரபு நாட்டு இளவரசியிற்கு எதற்கு இந்திய அம்சங்கள்?
„உன்னைப் பார்க்க இளவரசி ஜஸ்மின் மாதிரியே உள்ளது“ என வெள்ளையர்கள் கூறாத தமிழ்ப்பெண் உள்ளாரா, இல்லை அலாவுதீன் என அழைக்கப்படாத துருக்கிப்பையன் உள்ளானா?
அடர்ந்த முடியும், வெய்யிலில் குளித்த மாசிலா மேனியும், மூக்கும், முழியும், அழகான உதடுகளும், வெள்ளை உலகின் அழகுத்தரங்கள் எல்லாம் தெற்காசியப்பெண்ணில். எவ்வின இளவரசியாக இருந்தாலும், வெள்ளை யினத்தில் பிறவினங்களின் சிறிய அம்சங்கள் இருப்பதற்கே அனுமதி கொடுக்கிறது வெள்ளை ஊடகம். இளவரசியாகவும், துணிவின் திலகம் அலாவுதீனாகவும் இருக்க விரும்பும் சிறார்களிடம், நீ உன் இனத்தை அதிகம் காட்டிடாதே என சொல்லிடமுடியுமா?
Disney நிறுவனத்திடமிருந்து வெளிவர இருக்கும் அடுத்த திரைப்படம் சீன இளவரசி முலானின் கதை. அதில் இனங்களுக்கு மதிப்பு எப்படி இருக்கபோகிறது எனப் பார்க்கலாம்.
வெள்ளை வெகுஜன ஊடகங்கள் எங்களது வரலாறுகளையும் பின்னணிகளையும் தமக்குச் சாதகமாகவே மாத்திக்கொண்டு உபயோகிப்பது நிச்சயமாகிறது. இன்றுவரை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் தாயர் வெள்ளையினத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல், முதலாவது கறுப்பினத்து ஜனாதிபதியின் வரலாற்றை நியமிக்க மூடிமறைக்கப்பட்டு வருகிறது. கால்ப்பந்தாட்டவீரன் Mesut ozil ஜேர்மனிய அணியைவிட்டுப்பிரிந்ததும், இங்கிலாந்து இளவரசி Meghan merkle ஒரு பத்திரிக்கையில் „முதலாவது கறுப்பு இளவரசி“ எனவும் இன்னொரு இதழில் “கலப்பின இளவரசி” எனவும் பெயர்சூட்டப்படுவதும் இவற்றையே எதிரொலிக்கின்றன.
— ராம் பரமானந்தன்
1,942 total views, 2 views today