Vettimani 25th anniversary

ஐரோப்பாவில் வெள்ளி விழாக்கண்ட முதல் பத்திரிகை
வெற்றிமணி யேர்மனியில் பெருவிழாவாகக் கொண்டாடியது!
யேர்மனி வூப்பற்றால் நகரில் வெற்றிமணியின் 25 ஆவது ஆண்டுவிழா 15.09.2019 அன்று மண்டபம் நிறைந்த கூட்டத்துடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது. மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இவ்விழாவிலே வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும், வெற்றிமணி விருதுகளும், அனுசரணையாளர் விருதுகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வு வெற்றிமணி ஆசிரியர் தமிழையும், கலையையும் நேசிக்கும் பண்பையும், நன்றியுணர்வையும் தெட்டத்தெளிவாகக் காட்டியது.
வாழ்நாள் சாதனையாளர்கள் விருதை முதலில் தமிழாலயத் தந்தை அமரர் இரா.நாலிங்கம் ஐயா அவர்களுக்கு அர்பணம் செய்து அவரது புதல்வன் திரு நிர்மலன் நாகலிங்கம் அவர்கள் பெற வெற்றிமணியின் வாழ்நாள் சாதனை விருது பெற்றவர்களான
.கம்.காமாட்சி அம்பாள் ஆலய குரு.சிவஸ்ரீ ஆறுமுக பாஸ்கரகுருக்கள்.
ஈழத்தமிழர் புலம்பெயர் நாட்டில் பிரமிக்கத்தக்க ஆலயங்களை அமைத்து வழிபட முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தவர். தவிர்கமுடியாத காரணங்களால் சமூகம் தரமுடியாமையால், அவரது பாரியார் ஸ்ரீமதி மதிவாணி பாஸ்கரகுருக்கள் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
.ஈழத்தின் மெல்லிசை மன்னன் எம்.பி.பரமேஷ். உனக்கு தெரியுமா நான் உன்னை நினைப்பது என்ற பாடலை பட்டிதொட்டி எல்லாம் சினிமாப்பாடல்களை முறியடித்து இதயங்களைத் தொட்டவர். முதல் றைக்கோட்டாக வெளியிட்டு றைக்கோட் அடித்தவரும் இவர். இன்றும் பாடியபடி இருக்கும் இவர் பெற்றுக்கொண்டார்.
.நூலகவியலாளர் என்.செல்வராஜா
தனது ஆயராத முயற்சியால் பல நூல்தேட்டங்களை தொகுத்து பல எழுத்தாளர்களது படைப்புக்களை ஒழுங்கு படுத்தி நூல்தேட்டமாக அவற்றைப்பதிவு செய்து வைத்துள்ளவர், நூலகவியலாளர் திரு. என். செல்வராஜா அவர்கள். ஈழத்துத் தமிழ் நூல்களை ஆவணப்படுத்தும் பணியை 1990இல் தொடங்கி இன்று வரை 2000 நூல்களை ஒருதொகுத்து உள்ளார். பிறரது படைப்புகளுக்காக தனது நேரத்தை அற்பணிக்கும் பெருமகன் பெற்றுக்கொண்டார்;.
சங்கீதரத்தினம் ச.பிரணவநாதன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனத்தின் அதிவி;சேடப் பிரிவில், 13 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றியவரும், யேர்மனி கலைபண்பாட்டுக்.கழக்தின் மூத்த தாள வாத்தியக் கலைஞரும், இளைய தலைமுறையினருக்கு, மென்முளவு வாத்திய இசையை அயராது போதித்து எம்மினத்திற்கு பெருமைசேர்த்து வருகின்ற மூத்த கலைஞர்களில் ஒருவருமான மிருதங்க வித்துவான்,லயகுமாரன் சங்கீதரத்தினம் பிரணவநாதன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
சிம்மக்குரலோன் வலன்ரையின் 500க்கும் அதிகமான, பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கியவரும் 1000 கணக்கான நிகழ்ச்சிகைளை தொகுத்து சிறப்பித்தவரும் கலைபண்பாட்டுக்கழகத்தின் அறிவிப்பாளராக பணிபுரிந்த சிறந்த அறிவுப்புக் கலைஞர் அவர் பெற்றுக்கொண்டார்.
.வானதி நர்த்தனாய அதிபர்.கலாநிதி திருமதி.வானதி தேசிங்குராஜா. யேர்மனியில் முதல் பரத நாட்டிய அரங்கேற்றத்தை செய்தவர். இன்று 47 அரங்கேற்றங்களை செய்து மகிழ்ந்தவர். பரத நூல் ஒன்றை மாணவர்களுக்கு ஆங்கிலம், தமிழ், என இருமொழிகளில் தந்தவர். சிறந்த பண்பாளரான கலாநிதி வானதி தேசிங்குராஜா அவர்கள் தவிர்க்முடியாத காரணங்களால் சமூகம்தரவில்லை. அவருக்கான விருதினை அவரது மாணவிகளின் பெற்றோர்சார்பாக திருமதி சிவநேசலிங்கம் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
அகரம் பிரதம ஆசிரியர் த.இரவீந்திரன்.2004 சேர்மனியில் முதல் தமிழ் 24 மணிநேர வானொலி ஆரம்பித்தது 2011 மே அகரம் ( 100 இதழ்கள்) நிறைவு செய்து 2014 ஏப்ரல் அகர தீபம் சஞ்சிகை ஆரம்பித்து அனைத்திலும் சிறப்புற்று திகழும் முயற்சியாளர் திரு.த.இரவீந்திரன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
வெற்றிமணியின் 25 ஆவது ஆண்டுவிழா மலர் கால்நூற்றாண்டு வெற்றிச் சுவடுகள்; இந்நிகழ்வில் வெளியீடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிகளை இலண்டனில் இருந்து வருகை தந்திருந்த அறிவிப்பாளர் திருமதி. சிவகாமி விநாயகமும், வெற்றிமணியின் ஆஸ்தான அறிவிப்பாளரான சிவகுருநாதன். சக்திவேல் அவர்களும் தொகுத்து வழங்கியிருந்தார்கள்.
கலைநிகழ்வுகளுக்கு இந்தியா, கேரளா, கனடா, இலண்டன் போன்ற நாடுகளில் இருந்து கலந்து சிறப்பித்த கலைஞர்கள் புல்லாங்குழல் இசை, பரதநாட்டியங்கள், பாடல்கள், டீழடடல றழழன நடனங்கள் போன்றவற்றைத் தந்திருந்தார்கள். ஜேர்மனியில் நடைபெறுகின்ற பல பரதநாட்டியப் பாடசாலை மாணவர்களும் குழுநடனங்களைத் தந்திருந்தமை கண்ணுக்கு விருந்தளித்தது.
நிகழ்ச்சியின் நடுவே வெற்றிமணி விருது பல்துறைகளில் சிறந்து விளங்குபவர்களான வெற்றிமணி விருது
.ஆடற்கலாலய அதிபர் ஆடற்கலைமணி திருமதி.றெஜினி சத்தியகுமார் .ஓவியர்.சந்திரவதனி.ஸ்கந்தகுமார (லண்டன்) நிருத்திய நாட்டியாலய அதிபர். நாட்டியக்கலைமணி திருமதி அமலா அன்ரனி சுரேஷ்குமார்,தமிழர் அரங்கம் திரு.வி.சபேசன், விளையாட்டு பயிற்சியாளர். திரு.சோ.சசிமோகன்,ஆவணக்காப்பாளர் அன்ரன் யோசேப், இளம் எழுத்தாளர் செல்வன் இராம் பரமானந்தன்; மற்றும் வெற்றிமணி அபிமானி விருது சோஸ்ற் தமிழ் கல்லி கலாச்சார அமைப்பின் அதிபர் திருமதி இந்து தெய்வேந்திரம்,வாசகர் வட்ட விருது 1992 இல் ஐரோப்பிய வாசகர் வட்டம் அமைத்த திரு.க.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு வழங்கப்பட்டது. அறிவிப்பாளர் சிவகுருநாதன் சக்திவேல் அவர்களுக்கு வெற்றி மணி மகுடம் விருது வழங்கி வெற்றிமணிக்கும் அவருக்குமான 25 வருட பிணைப்பை வெளிப்படுத்திக் கௌரவிக்கப்பட்டார். வெற்றிமணி ஆசிரியர் கலாநிதி. மு.க.சு.சிவகுமாரன் அவர்களைக் கௌரவிக்கும் முகமாக ஆதரவாளர்கள், எழுத்தாளர்கள், உறவினர்கள், அவரையும் அவர் மனைவி குடும்பத்தினரையும் ஆரத்தி எடுத்து மலர் மாலை மரியாதையுடன் மண்டபத்தில் இருந்து அரங்கிற்கு அழைத்துவந்த நிகழ்வு கண்கொள்ளாக் காட்சியாகக் காணப்பட்டதுடன் மனதுக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது.
வெற்றிமணி ஆசிரியரின் தனி முயற்சியிலும், குடும்பத்தினரின் ஆதரவுடனும், விளம்பரதாரர்களின் அனுசரணையுடனும் மிகச் சிறப்பாக இந்நிகழ்வு நடைபெற்றது.

2,013 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *