நாம் வாழும் நாட்டையும் நேசிப்போம்

யேர்மனியில் லூடின்சைட் Lüdenscheid நகரம் பல்வேறு விடயங்களில் மிகவும் பிரபலமாக விளங்குகின்றது.
மின்சார விளக்குகள் செய்வதற்கு மிகவும் பிரபலமான நகரம் இது. சமீபகாலங்களில் இங்கு காணப்படும் விளக்குகளின் நகரம். “City of Light” என்ற விளம்பர பதாதைகள் இதனைமிகவும் அழகாகச் சுட்டிக்காட்டுகின்றன. ERCO என்ற இங்கு உள்ள நிறுவனமே இந்த உற்பத்தியில் மிகவும் க்கியமானது. இந்த நிறுவனம் உலகப்புகழ்பெற்ற கட்டிடங்களான துபாய் இல் உள்ள Burj al Arab hotel in Dubai றோம் நகரில் உள்ள Vatican Pinakothek in Rome பாரிசில் நகரில் the Grand Louvre e in Paris பேர்லின் நகரில் உள்ள the Brandenburg Gate in Berlin,Bilbao நகரில் உள்ள the Guggenheim-Museum போன்றவற்றிற்கு மின்சார விளக்குகள் பொருத்தி அவை மிக அழகாக காட்சியளிக்க வகைசெய்தன.

இந்த அழகான நகரில் காணப்படும் “Phänomenta”. என்று அழைக்கப்படும் விஞ்ஞான நூதனசாலை Northrhine Westphalia வடக்கு யேர்மன் மாநிலத்தில் முதல்தரமானது இது. உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் இங்கு வந்து பௌதீகம் சம்மந்தமான ஆராய்ச்சிகளை செய்ய இந்த இடம் மிகவும் உதவியாக உள்ளது. இங்கு கட்டப்பட்டிருக்கும் 78மீற்றர் உயரமான கோபுரத்தில் ஊசல் (pendulum )பொருத்தப்பட்டுள்ளது. 1851ம் ஆண்டு உலகம் சுற்றுகிறது என்பதை பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி Léon Foucault என்பவருக்கு உணர்த்தியது எதுவோ. அதே அடிப்படையில்தான் இக் கோபுரம் அமையப்பெற்றுள்ளது. இன்று லூடின்சைட் நகரத்தின் அடையாளமாகக் காணப்படும் இந்தக்கோபுரத்தில் ஐரோப்பாவில் பெரிய பல வண்ணக் காட்சிக் கருவி (Europe’s largest kaleidoscope) பொருத்தப் பட்டுள்ளது மிகவும் முக்கியமானதொன்றாகும்.

மேலும் இந்த அழகான நகரம். பல்வேறு நதிகள் நீர்த்தேக்கங்கள் மலைத் தொடர்களைக் கொண்டது. பல்வேறு மலைத் தொடர்களைக்கொண்டதினால் இந்நகரை. மலை களின் நகரம் (Bergstadt) என்றும் அழைப்பார்கள். ஆராய்ச்சிகளின் படி 1067 ஆண்டு கிராமமாக காட்சியளித்து, பின்னர் 1268 ம் ஆண்டு நகரமாக மாறியது என்றால் மிகையா காது.

வாகன உதிரிப்பாகங்கள் மின்சார விளக்குகள் இரும்பு பிளாஸ்டிக் போன்றவற்றை உற்பத்திசெய்யும் பல்வேறு சிறிய நடுத்தர தொழில் பேட்டைகள் கொண்ட நகரமாகத் திகழ்கின்றது. இந்த அழகான நகரில் காணப்படும் kostal என்ற பெரிய நிறுவனம் வாகனங்களுக்கு தேவையான மின்சார உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக விளங்குகின்றது. இந்த நிறுவனத்தில்; ஏறத்தாள 1500 பல்தரப்பட்ட வேலையாட்கள் உள்ளனர். இந்த நிறுவனமே முதலாவதாக மங்கலாக்கும் வாகனங்களின் முன்பக்க விளக்கைத்தயாரித்தது. (dimming headlight.) அத்துடன் வாகனங்களுக்குத்தேவையான மின் இணைப்பு பலகை (first patented switch panel) ஐரோப்பாவில் முதல் முதலாகத் தயாரித்த நிறுவனமாகும். இத்தகைய பிரபலமான நிறுவனத்தில் வெற்றிமணி ஆசிரியர் 33 வருடங்கள் வேலை செய்து அண்மையில் (1.02.2018) ஓய்வுபெற்றார்.

அவர் அங்கு வேலைசெய்யும் காலத்தில் வாகனங்களின் மின்சார உதிரிப்பாகங்களைக் கொண்டு பல சிற்பங்களையும் படைத்தார். அவற்றில் ஒன்று இன்று Kostal பிரதான நுழைவாசலில் கண்ணாடிப் பேழைக்குள் கம்பீரமாக இருக் கின்றது. இச்சிற்பம் 1997 முதல் அங்கு உண்டு.
முதல் முதலாக லூடின்சைட் நகரில் 1898 ஆண்டு Carl berg தொழிற்சாலையில் போர்க்கால வானூர்தி (Zeppelin airship) தயாரிக்கப்பட்டது. அதுமட்டுமா!
அச்சுக்கலைக்கும் இந்தநகரம் பெயர் பெற்றது 2013 ஆண்டு பேர்லின் நகரில் நடைபெற்ற புத்தகக்கண்காட்சியில்; Druck & Medien Awards 2013 என்ற விருது Seltmann Printart Gmbh Lüdenscheidநனை க்கு கிடைத்தது. இந்த அச்சகத்தில் வெற்றி மணி சிவத்தமிழ் அச்சாகி வெளிவருகிறது.(1999 முதல்)
ஆரம்பத்தில் ஒட்டுவேலைகளால் அமைக்கப்பட்டு அதனைப் படம் எடுத்து அச்சாக்கியது அந்தக்காலம். இன்று போல் அன்று வடிவமைப்பு கணனியின் கைகளில் இல்லை. அது கண்ணாவின் கையில் இருந்தது. (ஓவியருக்கான வெற்றிமணி ஆசிரியரின்; பெயர்) அப்பொழுது அச்சகத்தின் அதிபர் Frank Seltmann மிகவும் அக்கறையுடன் எனது முயற்சிகளுக்கு கைகொடுத்தார். இன்று வரை எமக்கு பலக்கபலமாக இருந்து வருகின்றார். 2012 முதல் அவரது மகன் Arno seltmann ஸ்தாபனத்தின் அதிபராக உள்ளார். இந்த அச்சகம் 4 சந்ததிகளைக்கண்டது. 1852 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது என்றால் பாருங்களேன்.

யேர்மனியில் ஒரு தமிழ்ப்பத்திரிகை Lüdencheid நகரத்தில் இருந்து வெளிவந்து, அது முதல் வெள்ளிவிழாக்கண்ட பெருமையைப் பெறுகிறது. வெற்றிமணி சிவத்தமிழைத் தொடர்ந்து இந்த அச்சகத்தில் அகரம், அகரதீபம், தற்போது
தமிழ் ரைம்ஸ், என பல அங்கு அச்சாகி வெளிவர வெற்றி மணியும் காரணமானது என்பது உண்மை. தாய் நாட்டை மறவாது நாம் தமிழர்களாக இங்கு வாழவேண்டும். அதே நேரம் எமக்கு அடைக்கலம் தந்து எமது சந்ததியினர் சுதந்திரமாக கல்வி,கலை,வர்த்தகம், என பலவற்றிலும் உச்சம் தொட ஆதரவு தந்த இந்த நாட்டையும் மதிக்க வேண்டும். அதனால் வெற்றிமணி வெள்ளிவிழா மலரின் முன்அட்டையில் நகரத்தின் அடையாளமான “Phänomenta”. வை இடம்பெறவைத்து நன்றி உணர்வை வெளிப்படுத்தியது, வெற்றிமணி.

— வெற்றிமணி மு.க.சிவகுமாரன்

1,890 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *