உளநோய் ஏன் வருகிறதென்று உயிரியல் பதில் சொல்லுமா?

உளநல சிகிச்சைக்காக (psychological treatment) என்னிடம் வந்த ஒருவர், மருந்துகள் பெறுவதற்காக ஒரு உளநல மருத்துவரை (psychiatrist) சந்தித்ததாக சொன்னார். மேலும் விளங்கப்படுத்தும் போது, அந்த மருத்துவர், மூளையின் இரசாயன சமமின்மையால் (chemical imbalance) தான் தனக்கு உளச்சோர்வு (depression) ஏற்பட்டிருப்பதாகவும், மருந்துகள் எடுக்கும்போது அந்த இரசாயன மட்டம் இங்கிருந்து இங்கு மட்டும் அதிகரிக்கும் என அவர் சொன்னதாக கையால் சைகை செய்தும் காண்பித்தார். இந்த விளக்கம் சரிதானா என்பது கேள்விக்குறி தான்.

எங்கள் சமூகத்தில் உளநோய் மருந்துகளின் பாவனை அதிகரித்திருக்கிறதா இல்லையா என்ற தரவுகள் நம்மிடம் இல்லை. ஆனால், உளநோய்களை இழுக்காக கருதுபவர்களுக்கு, அது நம்மவராக இருந்தாலும் வேறு சமூகத்தவராக இருந்தாலும், “உங்களுக்கு மூளையின் இரசாயன சமமின்மையால் தான் உளநோய் வந்திருக்கிறது” என்று வைத்தியர் சொன்னால், அதனை கொஞ்சம் இலகுவாக ஜீரணிக்க கூடியதாக இருக்கலாம். அந்த காரணத்திற்காகவே, சில வைத்தியர்கள் அந்த கருத்தை முன்வைக்க கூடும். அதனாலேயே, அந்த கருத்து உண்மையாகிவிடாது.

முன்னாள் F.D.A. Psychopharmacologic Drugs Advisory Committee தலைவர் Wayne Goodman சொல்கிறார்: மருந்துகள் இரசாயன சமநிலையை உருவாக்கும் என்பது ஒரு உபயோகமான உருவகமாக இருந்தாலும் அதனை ஒருநாளும் நோயாளிகளுக்கு விளக்கமாக நான் முன்வைக்கமாட்டேன் என்கிறார். Psychiatric Times இன் முன்னாள் ஆசிரியர் Ronald Pies மருந்துகள் இரசாயன சமநிலையை உருவாக்கும் என்ற விளக்கத்தை கொடுக்கும் உளநல வைத்தியர்கள் சற்று சங்கோஜப்பட்டு தான் இந்த விளக்கத்தை கொடுப்பார்கள் என நினைக்கிறன் என்கிறார். ஏனென்றால், நேரத்தை சேமிப்பதற்காக, வைத்தியர்கள் கொடுக்கும் ஒரு மேலோட்டமான கருத்து இது என்பது அவர் வாதம்.

இன்றைய காலகட்டத்தில், உளநோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துக்கொண்டு வருகிறது. 2001 க்கும் 2003க்கும் இடைப்பட்ட காலத்தில் National Institute of Mental Health நடத்திய ஒரு ஆய்வின் படி, 46மூ அமெரிக்கர்கள் தம் வாழ்க்கை காலத்தில் ஏதாவது ஒரு உளநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவல் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.

மருந்துகள் மூலம் உளநோய்களுக்கு சிகிச்சை வழங்குவ தென்பது, மூளையின் இரசாயன சமநிலையை மருந்து சரிசெய்கிறது என்ற கடந்த 40 ஆண்டு கால கண்ணோட்டத்தோடு ஒத்து போயிருக்கிறது. மருந்து

எடுப்பவர்கள் எண்ணிக்கையும் அதோடு அதிகரித்துக்கொண்டு போயிருக்கிறது. தற்போதைய காலத்தில் உளநல மருத்துவர்களும் கலந்துரையாடல் மூலம் அல்லாமல் கூடுதலாக மருந்துகள் மூலமாகவே உளநல சிகிச்சையை வழங்குகிறார்கள். 1987ல் Pசழணயஉ என்ற மருந்து புழக்கத்துக்கு வந்தது.

உளச்சோர்வுக்கு மூளையில் Serotonin குறைபாடே காரணம் என்றொரு கருத்தை முன்வைத்த Serotonin xU neurotransmitter ஒரு
neurotransmitter – நரம்புக்கலன்களுக்கிடையில் அல்லது நரம்பு கலன்களுக்கும் தசைகளுக்கும் இடையில் இரசாயன தொடர்பாடலை ஏற்படுத்தும் மூலக்கூறுகள் தான்
neurotransmitter . Prozac இந்த Serotonin குறைபாட்டை நிவர்த்தி செய்கிறது என்ற எண்ணம் பரவலாக, அடுத்த 10 வருடத்தில் உளசோர்வுக்காக அமெரிக்காவில் மருந்து உட்கொள்பவர்கள் எண்ணிக்கை 3 மடங்காகியது. இப்பொழுது யதார்த்த பிறழ்வின் (psychosis) பாதிப்பை குறைப்பதற்கான மருந்துகள் பாவனை, அதிகூடிய விற்பனைக்குரிய முதல் இடத்தில் இருந்த கொலெஸ்டெரோல் மருந்துகள் பாவனையை விடவும் மிஞ்சி நிற்கிறது.

இத்தகைய தரவுகள் துறைசார் நிபுணர்களிடத்தில் பல கேள்விகளை எழுப்பி நிற்கிறது. உளநோய்களின் விகிதம் அதிகரித்து செல்கிறதா? இந்த உளநோய்களுக்கு உயிரியல் தான் காரணம், சூழல் காரணிகள் அல்ல என்றால், நோய் அடையாளம் காணலும் மருந்து பாவனையும் அதிகரித்துக்கொண்டு செல்வதென்பது சரிதானா? அல்லது எப்போதும் இருந்துவந்த நோய்களை இப்பொழுது தான் கூடுதலாக அடையாளம் காண்கிறோமா? அல்லது, முன் எப்பொழுதும் இல்லாத வகையில் சிறு பிரச்சனைகளையும் உளநோய்களாக அடையாளம் காண ஆரம்பித்து விட்டோமா? மருந்துகள் மக்களை குணப்படுத்துகிறதா? குணப்படுத்து கிறதென்றால், நோயின் விகிதாசாரம் குறைந்தல்லவா இருக்கவேண்டும்? அண்மையில் வெளிவந்திருக்கும் சர்ச்சைக்குரிய சில நூல்களின் ஆசிரியர்கள் எழுப்பும் கேள்விகள் தான் இவை. ஒருவர் உளநல நிபுணர் Irving Kirsch இன்னொருவர் நிருபர்ஃஎழுத்தாளர் Robert Whitaker மூன்றாமவர் உளநல வைத்தியர். Daniel Carlat. இவர்கள் மூவரும் பல விடயங்களில் ஒரே பார்வையை கொண்டிருக்கிறார்கள்.

ன்று – மருந்து நிறுவனங்களின் ஊழல் என்கிறார்கள். எதனை உளநோய் என அடையாளம் காண்பது, மற்றும் எப்படி இந்த உளநோய்களுக்கு சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்ற விடயங்களில் எடுக்கப்படும் தீர்மானங்களில் மருந்து நிறுவனங்கள் பெரும் பங்கை வகிக்கின்றன. Kirsch விளக்குகிறார்:
மருந்து நிறுவனங்கள் ஒரு புதிய மருந்தை சந்தைக்கு விடுமுன் US Food and Drug Administration (FDA) இடமிருந்து அதற்கான அங்கீகாரத்தை பெறவேண்டும். அதற்கு அவர்களால் பொறுப்பேற்கப்பட்ட அந்த மருந்து சம்பந்தப்பட்ட எல்லா ஆய்வுகளையும் (clinical trials) அந்த மருந்து நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும்.
மருந்து, நிவாரணம் கொடுப்பதற்கான அத்தாட்சியாக 2 ஆய்வுகள் இருந்தாலே போதுமானது.

தமக்கு சாதகமான கண்டுபிடிப்புகளை கொடுக்கும் ஆய்வுகளை மருந்து நிறுவனங்கள் மருத்துவ ஆய்விதழ்களில் பிரசுரிப்பதோடு, மருத்துவர் களுக்கும் அறியத்தருவார்கள். சாதகமற்ற கண்டுபிடிப்புகளை தரும் ஆய்வுகள் எல்லாம் முடக்கப்பட்டுவிடும். ஆக, இந்த வழக்கமானது மருத்துவ நூல்கள், மருத்துவ கல்வி மற்றும் சிகிச்சை முடிவுகள் எல்லாவற்றையுமே ஒருபக்க சார்பாக்கிவிடும்.

இரண்டாவது – மூளையின் இரசாயன சமமின்மை தான் உளநோய்களுக்கு காரணம் என்ற கருத்தை இவர்கள் (Kirsch, Whitaker & Carlat) ஏற்றுக்கொள்வதாக இல்லை. ஐம்பதுகளில் Thorazine, Miltown மற்றும் Marsilid என்ற மூன்று மருந்துகள் சந்தைக்கு வந்தன. ஆரம்பத்தில் இவை உளநோய்களுக்கென தயாரிக்கப்படவில்லை.

தொற்றுக்களுக்கென பாவிக்கப்பட்ட இந்த மருந்துகள் பாவனையாளர்கள் மனநிலையை அமைதிப்படுத்தியதை அவதானித்ததை அடுத்து, ஆய்வாளர்கள் இந்த மருந்துகள் மூளையின் சில இரசாயன மட்டங்களை மாற்றக்கூடிய தன்மையை கொண்டிருந்ததையும் அவதானித்தனர்.

உளநோய்க்கான மருந்துகள் மூளையின் neurotransmitter அளவுகளை மாற்றுவதை கண்டறிந்ததும், உதயமானது தான் இரசாயன சமமின்மை கொள்கை. அதாவது, உளநோயின் காரணம் உடலில் neurotransmitter அளவுகளின் மாற்றம் தான் என்பதும், மருந்துகள் இந்த neurotransmitter அளவுகளை மாற்றுகிறது என்பதுமான தர்க்கமுரணான கருத்து முன்வைக்கப்பட்டது. உதாரணமாக, thorazine என்ற மருந்து மூளையில் dopamin என்ற neurotransmitter அளவை குறைப்பது கண்டறியப்பட்டது. இதனை காரணமாக கொண்டு, schizophrenia போன்ற யதார்த்த பிறழ்வு நோய்களுக்கு உடலில் அதிக அளவு dopamin இருப்பதே காரணம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. ஆக, ஒரு அசாதாரண நிலையை மாற்றுவதற்கு மருந்து கண்டுபிடிப்பதை விடுத்து, ஒரு மருந்திற்கு பொருந்தக்கூடிய வகையில் ஒரு அசாதாரண தன்மை நிர்ணயிக்கப்பட்டது. இதனை தான், இந்த மூன்று நிபுணர்களும் உளமருத்துவத்தின் தர்க்கமுரணான பெரும் பாய்ச்சல் என்கிறார்கள். உடலில் Aspirin(அல்லது Tylenol) குறைபாட்டால் தான் காய்ச்சல் வருகிறது என்பதற்கு ஒப்பானது இவர்கள் வாதம் என்கிறார் உளநல மருத்துவர் ஊயசடயவ.

உளநோய்களை இரசாயன சமமின்மையுடன் தொடர்பு படுத்தும் கொள்கையை உறுதிப்படுத்த ஆய்வாளர்கள் பல்லாண்டு காலமாக முயற்சி செய்தும், இதுவரை கையில் ஒரு பலனும் இல்லை. இந்த கொள்கை வெறும் ஆதாரமற்ற ஒன்று என்கிறார் carlet. உளசோர்வு மூளையின் இரசாயன சமமின்மை சார்ந்தது என்ற கொள்கை முழுக்க முழுக்க பிழையானது என்கிறார் Kirsch. Whitaker சொல்வது – schizophrenia (யதார்த்த பிறழ்வு நோய்), உளசோர்வு போன்ற நோய்நிலைகளுக்கு சிகிச்சை பெறுமுன் மனிதர்கள் neurotransmitter தொழிற்பாடு சாதாரணமாகவே இருக்கிறது. ஒரு இரசாயன சமமின்மையும் அவர்கள் மூளையில் அடையாளம் காணப்படுவதில்லை. ஆனால் மருந்துகள் எடுக்க ஆரம்பிக்கும் போது தான் அவர்கள் நரம்பு கலன்களில், மூளையில், அசாதாரண விடயங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன என்கிறார். அவர் வாதப்படி, மருந்துகளின் பாவனை அதிகரிக்க அதிகரிக்க, அது தரும் பக்க விளைவுகள் இன்னும் பல சிக்கல்களை கொண்டுவர, காலப்போக்கில் நோயின் தன்மையே மாறிக்கொண்டுவருகிறது என்பது தான். இதனை மேலும் விளக்குகையில், உளநோய்களின் தீவிரம் காலத்தோடு அதிகரித்துக்கொண்டு வருவது பற்றியும் அவர் கூறுகிறார்.

யதார்த்த பிறழ்வு நோயோ, உளச்சோர்வோ, நோயின் தன்மையும் தாக்கத்தின் நீடிப்பும் இப்பொழுது அதிகரித் திருக்கிறது என்றால், நாம் உட்கொள்ளும் மருந்துகள் எமக்கு குறுகிய கால நன்மையை கொடுத்தாலும் காலப்போக்கில் வேறு பாதிப்புகளை கொண்டுவருகிறது போல் தெரிகிறது என்கிறார். Whitaker கருத்துப்படி, உளநோய்களால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித் திருக்கிறது. அதே வேளை உளநோய்க்காண மருந்துகளின் பரிந்துரைப்பும் அதிவேகமாக அதிகரித் திருக்கிறது. அப்படியானால், மருந்துகளின் அடிப்படையில் நாம் வழங்கும் சிகிச்சை, எமக்கே தெரியாத விதத்தில் பரந்த அளவிலான இந்த பெரும் உளநோய் உபாதையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறதா என வினவுகிறார்.

மேலும், உளநோய்க்கான உயிரியல் காரணிகள் என்று பார்க்கும்பொழுது, குறிப்பிட்ட உளநோய்களுக்கு உரிய குறிப்பிட்ட மரபணுக்களை அடையாளம் காண பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்திருக்கின்றன. அப்படி அடையாளம் காண முடிந்தால் மரபணு பரிசோதனை செய்து உளநோய்களை வராமல் தடுக்க சில வழிமுறைகளை உருவாக்கலாம் என்பது தான் இந்த ஆய்வுகளின் நோக்கம். ஆனால், University of Colorado Boulder தற்பொழுது American Journal of Psychiatry யில் பிரசுரித்திருக்கும் ஒரு பரந்தளவிலான ஆய்வின்படி, உளச்சோர்வுக்கான மரபணுக்கள் என்று எம் உடலில் அடையாளம் காணக்கூடியதாக ஒன்றும் இல்லை.

620,000 பேர்களின் தரவுகள் இந்த ஆய்வில் உள்ளடக்கப் பட்டிருந்தது. இந்த ஆய்வாளர்கள் கருத்துப்படி, தனிப்பட்ட மரபணுக்கள் பல்கூட்டான மனித வெளிப்பாடுகளுக்கு காரணமாக இருக்கமுடியாது. உளவியலில் நோய்க்கான காரணத்தை தனி மரபணுக்கள் தீர்மானிக்காவிட்டாலும், அதற்கு பொறுப்பாக பல்லாயிரம் மரபணுக்களின் கூட்டு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் இவர்கள். அதாவது, உளநோய்களின் தோற்றம் இலகுவில் அடையாளம் காணும்வகையில் எளிதானதாக இல்லை. ஆக, தனிப்பட்ட மரபணுக்களோ இரசாயன சமமின்மையோ, உயிரியலுக்குள் உளநோய்க்கான காரணத்தை அறிய நாம் மேற் கொண்டிருக்கும் பல்லாண்டு கால தேடல், இதுவரை ஒரு தெளிவான விடையை எமக்கு தரவில்லை என்பது தான் தெளிவாக தெரிகிறது.

— Dr.புஷ்பா கனகரட்ணம்Ph.D., C. Psych.

2,129 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *