வெற்றிமணி வெள்ளிவிழா அரங்கில் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர்கள் விருது 2019
01.தமிழாலயத் தந்தை அமரர் இரா.நாகலிங்கம். தமிழ்ச் சிறார்களுக்கு ஆற்றிய அரும்பணிக்கு வெற்றிமணி வாழ்நாள் சாதனையாளர் விருதை அன்னாருக்கு சமர்ப்பணம் செய்து வழங்குகியது. அவ் விருதினை அவரது புதல்வன் திரு.நிர்மலன் நாகலிங்கம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
02.கம்.காமாட்சி அம்பாள் ஆலய குரு.சிவஸ்ரீ ஆறுமுக பாஸ்கரகுருக்கள்.
ஈழத்தமிழர் புலம்பெயர் நாட்டில் பிரமிக்கத்தக்க ஆலயங்களை அமைத்து வழிபட முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தவர். தவிர்கமுடியாத காரணங்களால் சமூகம் தரமுடியாமையால், அவரது பாரியார் ஸ்ரீமதி மதிவாணி பாஸ்கரகுருக்கள் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
03.ஈழத்தின் மெல்லிசை மன்னன் எம்.பி.பரமேஷ்.
உனக்கு தெரியுமா நான் உன்னை நினைப்பது என்ற பாடலை பட்டிதொட்டி எல்லாம் சினிமாப்பாடல்களை முறியடித்து இதயங்களைத் தொட்டவர். முதல் றைக்கோட்டாக வெளியிட்டு றைக்கோட் அடித்தவரும் இவர். அவர்கள் விருதினைப் பெற்றுக்கொண்டார்.
04.நூலகவியலாளர் என்.செல்வராஜா
தனது ஆயராத முயற்சியால் பல நூல்தேட்டங்களை தொகுத்து பல எழுத்தாளர்களது படைப்புக்களை ஒழுங்கு படுத்தி நூல்தேட்டமாக அவற்றைப்பதிவு செய்து வைத்துள்ளவர், நூலகவியலாளர் திரு. என். செல்வராஜா அவர்கள்.
04.நூலகவியலாளர் என்.செல்வராஜா
ஈழத்துத் தமிழ் நூல்களை ஆவணப்படுத்தும் பணியை 1990இல் தொடங்கி இன்று வரை 2000 நூல்களை ஒருதொகுத்து உள்ளார். பிறரது படைப்புகளுக்காக தனது நேரத்தை அற்பணிக்கும் பெருமகன் விருதினைப் பெற்றுக்கொண்டார்.
05.;சங்கீதரத்தினம் ச.பிரணவநாதன்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனத்தின் அதிவி;சேடப் பிரிவில், 13 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றியவரும், யேர்மனி கலை பண்பாட்டுக் கழகத்தின் மூத்த தாள வாத்தியக் கலைஞரும், இளைய தலைமுறை யினருக்கு, மென்முளவு வாத்திய இசையை அயராது போதித்து எம்மினத்திற்கு பெருமைசேர்த்து வருகின்ற மூத்த கலைஞர்களில் ஒருவருமான மிருதங்க வித்துவான், லயகுமாரன் சங்கீதரத்தினம் பிரணவ நாதன் அவர்கள் விருதினைப் பெற்றுக்கொண்டார்.
06.சிம்மக்குரலோன் வலன்ரையின்
500க்கும் அதிகமான, பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கியவரும் 1000 கணக்கான நிகழ்ச்சிகைளை தொகுத்து சிறப்பித்தவரும் கலைபண்பாட்டுக்கழகத்தின் அறிவிப்பாளராக பணிபுரிந்த சிறந்த அறிவுப்புக் கலைஞர் இவர்.சிம்மக்குரலோன் என அழைக்கப்படும் அறிவிப்பாளர் வலன்ரை யின் அவர்கள் விருதினைப் பெற்றுக்கொண்டார்.
07.அகரம் பிரதம ஆசிரியர் த.இரவீந்திரன்.
2004 சேர்மனியில் முதல் தமிழ் 24 மணிநேர வானொலி ஆரம்பித்தது 2011 மே அகரம் ( 100 இதழ்கள்) நிறைவு செய்து 2014 ஏப்ரல் அகர தீபம் சஞ்சிகை ஆரம்பித்து அனைத்திலும் சிறப்புற்று திகழும் முயற்சியாளர் திரு.த. இரவீந்திரன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
08.வானதி நர்த்தனாய அதிபர்.கலாநிதி திருமதி.வானதி தேசிங்குராஜா
யேர்மனியில் முதல் பரத நாட்டிய அரங்கேற்றத்தை செய்தவர். இன்று 47 அரங்கேற்றங்களை செய்து மகிழ்ந்தவர். பரத நூல் ஒன்றை மாணவர்களுக்கு ஆங்கிலம், தமிழ், என இருமொழிகளில் தந்தவர். சிறந்த பண்பாளரான கலாநிதி வானதி தேசிங்குராஜா அவர்கள் தவிர்க்கமுடியாத காரணங்களால் வரமுடியவில்லை. அவரது விருதை அவர்கள் சார்பாக திரு.திருமதி. சிவனேசலிங்கம் தம்பதிகள் பெற்றுக்கொண்டனர்.
படங்கள்: முழநௌளகழவழள.னந
2,368 total views, 2 views today