யேர்மனிய சுகாதாரச் செய்திகள்….
1-
பெற்றோரின் கவலையீனத்தால் 54 வீதமான குழந்தைகள், சிறுவர்களின் கண்பார்வை குறைந்து வருவதாகத் தெரியவந்துள்ளது. அதாவது சிறுவயதிலே மிக அதிகநேரம் கணனி போன்ற சமூக ஊடகங்களை அளவுக்குமீறிப் பார்க்க விடுவதால் பண்பார்வையை சிறுவயதிலேயே பலர் இழப்பதாக சுகாதாரப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
2-
தற்போது யேர்மனியில் சுகாதாரப்பகுதியினரின் வேலைகள் அனைத்தும் 69 வீதமானவை கணனி மயப்படுத்தப் பட்டிருப்பதாகவும் இலகுவாகப் பல வேலைகளைச் செய்து முடிக்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3-
யேர்மனியில் நோயாளிகள் பலர் வைத்தியசாலைகளுக்குப் போகாமலே வைத்தியம் பார்க்கிறார்களாம். அதாவது 47 வீதமான நோயாளிகள் (online) இணைய ஊடகங்கள் ஊடாக நோய்கள் பற்றி அறிவதும், வைத்தியர்களிடம் ஆலோசனை கேட்பதுமாக மாற்றமடைந்துள்ளது.
4-
யேர்மனியில் பலவித நோய்களுக்குக் காரணமாகக் காணப்படுவது என்னவெனில் 70 வீதமான சிறுவர்கள் இளையோர் வயதானோர் அளவுக்குமீறிய நிறையைக் கொண்டிருப்பதுதான் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
5-
யேர்மனியிலுள்ள வைத்தியசாலைகளில் கட்டில்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் 1 லட்சம் பேருக்கு 606 கட்டில்கள் என்ற வீதத்தில் உள்ளதாம். ஐரோப்பாவில் யேர்மனியில்தான் கூடிய வைத்திய வசதிகளும் காணப்படுகின்றது.
6-
யேர்மனியில் 47 வீதமான மக்கள் தாம் வசிக்கும் கிராமங்களில் நகரங்களில் வைத்திய தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்கள். ஏனையவர்கள் பிற நகரங்களுக்குச் சென்று வைத்திம் பார்க்கிறார்களாம்.
7-
யேர்மனியில் ஒருவர் ஒரு வருடத்தில் 55 கிலோ உணவு வகைகளை உண்கிறார் என அரசஉணவுக் கட்டுப்பாட்டுப் பகுதியினர் அறிவித்துள்ளனர்.
8-
யேர்மனிய அரசு அண்மையில் எடுத்த புள்ளிவிபரத்தின்படி 14 – 17 வயது பால்ய வயதினர் 32 வீதமான ஆண்களும் 35 வீதமான பெண்களும் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களாம். இதனால் பல பிரச்சனைகளை அரசு சந்தித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9-
உடற்பருமனையும் உணவையும் குறைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் பல நோய்களை இல்லாமல் ஆக்கலாம் என வைத்தியத்துறையினர் தெரிவிக்கின்றனர். (Diaten) உடற்பருமனை குறைப்பதற்காக 60 வீதமானோர் சைவ உணவுகளை நாடியுள்ளனர். 12 வீதமான ஆண்கள் பட்டினி கிடக்கிறார்களாம். 28 வீதமான பெண்கள் நிரந்தர உணவுக்கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
10-
(Depression) மனிதருக்கு ஏற்படும் வியாதிகளில் மனஅழுத்தமும் ஒன்றுதான். இன்றைய கணனி உலகில் அதிவேகமாக உலகமயமாக்கலுடன் ஒவ்வொருவரும் ஓடவேண்டிய சூழலில் வாழ்வு ஓடிக்கொண்டிருக்கையில் நோய்களும் பல வந்து சேருகின்றன. இந்த நோய் யேர்மனியில் தற்போது 11 வீதமான பெண்களுக்கும் 5 வீதமான ஆண்களுக்கும் காணப்படுவதாக வைத்தியத் துறையினர் அறிவித்துள்ளனர்.
11-
யேர்மனியில் குழந்தைகளின் பிறப்பு வீதம் குறைவடைந்து வருவதாகத் தெரியவந்துள்ளது. அதாவது 2017ம் ஆண்டில் 1.59 வீதமாகக்காணப்பட்டது 2018ம் ஆண்டில் 1.57 வீமாகக் குறைவடைந்துள்ளது. அதே வேளை குழந்தைகளின் வைத்தியச் செலவு 2.49 வீதத்திலிருந்து 2.54 வீதமாக உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
12-
சிறுநீர் கழித்தலில் பலர் அசட்டையீனம் காட்டுவதால் பல நோய்கள் வந்து சேருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிலருக்குப் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களும் வந்து சேருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. யேர்மனியில் 38 வீதமான பெண்களுக்கும் 12 வீதமான ஆண்களுக்கும் இதனால் பல வியாதிகள் வந்துள்ளதாகச் சுகாதாரப் பகுதியினர் அறிவித்துள்ளனர்.
13-
தானங்களில் சிறந்த தானம் உடற்தானமாகும். அந்தவகையில் யேர்மனியில் 2015ம் ஆண்டில் 877 பேரும் 2017ம் ஆண்டில் 797 பேரும் 2018ம் ஆண்டில் 955 பேரும் தமது உடல் உறுப்புக்களைத் தானம் செய்திருக்கிறார்கள். இதேவேளை 2018ம் ஆண்டில் மாற்று உடலுறுப்புக்கள் இல்லாமல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைளைப் பார்த்தால்..
ஈரல் – 1607 பேர்
நுரையீரல் – 779 “
சுவாசப்பை – 338 “
இதயம் – 295 “
ஏனைய உறுப்புக்கள் – 94 “
14-
சுற்றாடல் சூழல் விரைவாக மாசுபட்டு வருவதால் பல நோய்களும் அதிகரித்து வருவதாகத் தெரியவந்துள்ளது. இதன் பாதிப்பால் யேர்மனியில் 30 வீதமான சிறுவர்கள் குழந்தைகள் அஸ்த்மா, ஒவ்வாமை போன்ற நோய்களினால் பீடிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரப்பகுதியினர் அறிவித்துள்ளனர். இத்துடன் 80 – 90 வீதமான பெற்றோர் சுற்றாடலைப் பாதுகாப்பதில் அக்கறை காட்டுவதில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
15-
இன்று உலகில் பல புதுப்புது நோய்கள் தொற்றிக்கொள்வதற்கு நமது உணவும் உணவுப் பழக்கங்களும் காரணமாம். இதன் காரணமாக யேர்மனிய மக்களில் 37 வீதமானோர் சுகாதாரத்திற்கு உகந்த உணவுப்பொருட்களைத் தேடி வேண்டித் தமது தேவைகளைப் பூர்த்திசெய்கிறார்களாம்.
“உணவே மருந்து” உணவைக் குறைத்தால் ஆரோக்கிய வாழ்வு கிட்டும்….
வ.சிவராசா – 09-10-2019
1,438 total views, 3 views today