குப்பையும் அவரவர் கருத்துக்களும்
குப்பை என்றவுடன் தமிழருக்கு உடனடியாக ஞாபகம் வருவது. வீடுகளிலும் வீட்டு வளவுகளிலும் தேவையற்றவையென கூட்டி எடுத்து வளவின் ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் சுத்திவர ஓலைகளால் கூடுகட்டி அதற்குள் போட்டு வைக்கும் குப்பையைத்தான்;.இலங்கைத்தமிழரிடத்தில் பேச்சு வழக்காகவும் வட்டார வழக்காகவும் குப்பைக்குச் சமனான சொல்லாக இருந்து வருகின்ற இன்னொரு சொல் கஞ்சல் என்ற சொல்லுமாகும்.
தமிழர் சமூகத்தைக் கடந்து உலக மக்களின் அன்றாட வாழ்க்கையாயினும் சரி அல்லது அவர்களோடு தொடர்புடைய பொருட்களாயினும் சரி தேவையற்றவை என வரும் போது அவை குப்பை கஞ்சல் எனப் பெயர் கொண்டு அவை வேண்டற்ற பொருட்களாகிவிடுகின்றன.
மனிதர்களால் தேவையற்ற என ஓதுக்கப்பட்டவை நவீனத்துவ உலகினால் தேவையானவை என உருமாறி தேவையான பொருளாக மாறியுள்ளன.
எனவே குப்பை என்று எதையுமே ஓதுக்கவிட முடியாது.அனைத்து உலகளாவிய மக்களின் வாழ்வு உணவோடும் அந்த உணவைத் தருகின்ற விவசாயத்தோடும் பின்iனிப் பிணைந்திருப்பதை தவிர்க்கவோ நீக்கவோ முடியாது.உயிர் வாழ்தலுக்கு விவவாயம் இன்றியமையாதது.பயிர்களுக்கு உணவாவது குப்பைகளும் கஞ்சல்களுமேயாகும்.
விவசாயத்திற்கு மனிதர்களால் குப்பை கஞ்சல் என்று ஒதுக்கிவிடப்படும் இலைகுளைகளும்,வீட்டுக் கஞ்சல்களும் ஆடு மாடுகள் பறவையினங்களின் கழிவுபப்பொருட்கள் எனவும் மனிதர்களின் மலம் சிறுநீரு; போன்றவைகூட நவீன இயந்திரங்களினால் வடித்தெடுக்கப்பட்டு பலபடிமுறை சுத்தகிரிப்புக்குப் பின் விவசாயத்திற்கு பன்படுத்தப்படுகின்றன.
எனவே குப்பை என்ற பொதுச் சொல் மனிதர்களினால் தேவையற்றவை என கழிவுப் பெர்ருட்களாக ஒதுக்கப்படுபவை எனச் சுட்டி நிற்பவை குப்பைகளே என நாம் நினைக்கிறோம்.ஆனால் அவை தேவையானவையே.
அதே போல் அது குப்பை இது குப்பை என நூல்களையும்,பத்திரிகைகளையும், சஞசிகைகளையும், ஆக்கங்களையும்,தொலைக்காட்சிகளையும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ஒதுக்கிவிடும் நிலையையும் பார்க்க்கூடியதாகவிருக்கின்றது.
ஒவ்வொரு எழுத்தாளனும் அல்லது ஒவ்வொரு வாசகனும் ஏதோ ஒருவிதத்தில் தனக்கான ஒரு பார்வையைவைத்துக் கொண்டே இன்னொரு எழுத்தாளனுடைய ஆக்கங்களையோ நூல்களையோ விமர்ச்சிக்கிறான். சிலவேளைகளில் ஒன்றுக்கும் உதவாத குப்பையென்று சொல்லி விடுவார்கள்.அதே போல மேடை நிகழ்ச்சிகளாகட்டும் தொலைக்காட்சிகளாகட்டும் அவற்றைக் குப்பையென்று சொல்பவர்களும் உண்டு. ஆகா இதுவல்லவா உண்மையான வரலாறு என்று விதந்த புகழ்துரைக்கப்படும் வரலாற்று நூல்களைக்கூட ஒட்டுமொத்த வரலாற்று நூலாசிரிய உலகமும் ஏற்றுக் கொள்வதில்லை.கடுமையாக கண்டித்து விமர்சிக்கப்படுவதும் உண்டு, குப்பை என்ற சொல்லாடல் மூலம் நிராகரித்துவிடுவதும் உண்டு.பெரும் இதிகாச நூல்களும் சரித்திர இலக்கிய நூல்களும்கூட பொய் புனைந்த குப்பை என விமர்சிக்கப்படுகின்றன.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக்கூட ஆகா அருமைளயான நிகழ்ச்சி என ஒரு புறத்தினர் மகிழ்ந்து கொண்டாட, இன்னொரு புறத்தினர் அதுவெல்லாம் ஒரு நிகழ்ச்சியா எனக் புறக்கணித்து குப்பை என ஓதுக்குவதும் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கின்றது.
மேடை நிகழ்ச்சிகளைக்கூட பலர் இது ஒரு தரமான நிகழ்ச்சியா என ஒதுக்க, சிலரோ ஆகா அற்புதம் எனப் பாராட்டுபவர்களும் உண்டு.
மக்கள் அனைவரும் அவர்களோடு சூழ்ந்து நிற்கும் அனைத்து கலை இலக்கியச் செயல்பாடுகளாக இருக்கட்டும்.சமூகம,; பொருளாதாரம், அரசியல்; என இன்னோரென்ன கட்;டமைப்புகளாக இருக்கட்டும் ஒட்டுமொத்தமாக அவற்றை ஏற்றுக் கொண்டது இல்லை.ஒரு சாரார் ஒன்றுக்குமே பிரயோசனமற்ற குப்பை என்று ஒதுக்கும் போது இன்னொரு சாரார் அவற்றை ஏற்றுக் கொள்வார்கள் அங்கீகரிப்பார்கள்.இதுதான் உலக இயல்பு.குப்பை என்று எதுவுமே இல்லை.
— ஏலையா க.முருகதாசன்
1,371 total views, 3 views today