விண்வெளியில் ஒரு சின்ன மின்மினி.
விண்வெளி என்பது, அன்னையின் மடியில் படுத்து அம்புலி பார்த்த காலம் முதல் அனைவரின் மனதிலும் ஒரு அளவற்ற ஆனந்தத்தைக் கொடுக்கும் இன்பமான இடம் தான் இந்த விண்வெளி. ஆனால் இந்த விண்வெளியில் ஒரு ஆச்சரியமான புதுமை ஒன்று ஏற்படவுள்ளது, என்று சொன்னாலே நம்புவீர்களா? மனிதன் 1600 ஆம் ஆண்டுகளில் விண்ணைப் பார்த்தான், விண்ணில் மின்னும் பொருட்கள், மின்னாப் பொருட்கள் இருப்பதைக் கண்டான், ஆராய்ந்தான். மின்னும் பொருட்கள் நட்சத்திரம், மின்னாப் பொருட்கள் கோள்கள் என்று கண்டறிந்தான்.
2000 ஆண்டுகளில் நான் விண்ணைப் பார்த்தேன் மின்னும் பொருட்கள் மின்னாப் பொருட்கள் கண்டேன். மின்னாப் பொருட்கள் கோள்கள், மின்னும் பொருட்கள் நட்சத்திரம் அல்லது செய்மதி என்று கற்றுக் கொண்டேன். ஆனால் 3000 ஆண்டுகளில் வானில் இன்னுமொரு பொருள் மிகையாக அதிகரிக்கவுள்ளது. அதாவது 3000க்குப் பின் உள்ள குழந்தைகள் விண்ணைப் பார்க்கும் போது விண்ணில் மின்னும் பொருட்கள், மின்னாப் பொருட்கள் இருக்கும். அவை எவை என்று ஆராய்ந்தால் மின்னும் பொருட்கள் நட்சத்திரமும், செய்மதியும். மின்னாப் பொருட்கள் கோள்களும் குவள் உலகமும் ஆகும். அது என்ன குவள் உலகம்? இதோ ஒரு புதிய பயணத்திற்குத் தயாராகுங்கள்.
மனிதன் அறிவில் விருத்தி கண்டு வருகின்றான். அதே நேரம் உயிர்வாழும் காலத்தையும் அதிகரித்து வருகின்றான். இவை இரண்டும் இயற்கைக்கு சற்று முரண்பாடாகும் வேளையில், இயற்கை சமநிலையைத் தேடி, இயற்கை அனர்த்தங்களை உண்டுபண்ணி மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருகின்றது. இதை எதிர்வுகொள்ளவே மனிதன் வேறு கிரகங்களிற்குச் சென்று வாழலாமா என்று சிந்தித்து செயல்பட்டும் வருகின்றான். ஆனால் ஒவ்வொரு கோள்களிலும் ஒவ்வொரு குறைபாடுள்ளது. பூமியில் வாழ்ந்து பழகிய மனிதனிற்கு பிற கோள்கள் குறையாக உள்ளது. இதை நிவர்த்தி செய்ய ஒரு புதிய முயற்சி செய்யவுள்ளான். எப்படித் தெரியுமா?
வளமான மண்ணில்லா நாடுகள் கடலில் கப்பல் விட்டு அதிலே வளமான மண்ணை பிற நாட்டில் இருந்து பெற்று விவசாயம் செய்து வருவது எத்தனை பெருக்குத் தெரியும்? பாலை வன நாடுகள், அணு குண்டு துளைத்த ஆசிய நாடு என்று பல நாடுகள் இந்த கடல் மேல் விவசாயம் செய்துவருகின்றது. இதேபோலத் தான் பூமி போன்றே உருளை வடிவில் பெரிய குவளை செய்து அதை சிறிது சிறிதாக பகுதி பகுதியாக விண்ணுக்கு அனுப்பி விண்ணில் ஒரு குவளை உலகை உருவாக்கி, அதை குவள் வீடு (புயடயஒல ழுசடி ர்ழரளந) என்று அழைப்பார்கள். உலகில் நாம் உலகிற்கு வெளியில் நடப்பது போல, அந்த குவள் உலகில் உலகிற்கு உள்ளே நாங்கள், மரம் வளர்த்து வீடு கட்டி வாழ்வோம். அதிலே பண முதலைகள் தங்கள் பரம்பரையை பரப்பவுள்ளது. இதைக் கேட்கும் போது, பார்த்தியா வெள்ளைக் காரனின் அறிவின் விருத்தி! தமிழரால் இதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்று சொல்லும் நபர்களிற்கு ஒரு சிறிய அறிவிப்பு.
எம் தமிழ் வரலாற்றில் விசுவாமித்திரர் என்ற முனிவர் திரிசங்கு என்ற அரசனிற்காக பூமிக்கு வெளியில் அந்தரத்தில் மிதக்கும் தனி சொர்க்க இராச்சியத்தையே செய்து கொடுத்தார் என்ற வரலாற்றை. எடுத்துக் காட்டினால். இன்று விஞ்ஞானிகள் செய்யும் கண்டுபிடிப்புக்கள் ஒன்றும் பெரிதல்ல மற்றும் புதிதல்ல என்று ஆதாரபூர்வமாக கூறலாம்.
எதிர்காலம் என்றோ அகழ்வாகும். – அன்றும்,
நிகழ்காலம் ஒன்றே இடைக்கூறும்.
சிந்தனை சிவவினோபன்.
1,404 total views, 3 views today