தைமாதம் முதல் நாம் சரியாக நடக்கவேண்டும் என பலரும் நினைப்போம்.
நடக்குமா நடக்க என்ன செய்யலாம்?
புது வருடம் பிறக்கும் பொழுது நாம் அனைவரும் நினைப்பது என்ன? இந்த வருடமாவது நினைத்த விடயங்களை நிறைவேற்ற வேண்டும் என்று. ஆனால் அப்படி எவரும் முழுமையாக நிறைவு செய்வதில்லை.
கூடுதலாக நாங்கள் நினைத்ததை ஆறு மாதங்களுக்குப் பிறகு விட்டுவிடுவோம். களைப்பு வந்துவிடும்.
அதற்கு காரணம் என்ன? சிந்தித்துப் பாருங்கள்.
தொடர்ந்து செய்வது எப்படி?
முதலில் நாங்கள் எடுத்த விடயத்தில் உறுதியாக இருத்தல் வேண்டும். இல்லாவிடில் எல்லா முயற்சிகளும் சோர்வடைந்து விடும்.
நாங்கள் ஆரம்ப மாதத்தில் மட்டும் அல்ல ஒவ்வொரு நாளுமே மனவுறுதியுடன் நாளைத் தொடங்க வேண்டும். முக்கியமாக எங்களைச் சுற்றி
இருப்பவர்களும் எங்களை ஊக்கப்
படுத்த வேண்டும்.
அவர்கள் செய்யா விடின் நாங்கள் மீண்டும் கீழே விழுந்து விடுவோம்.
கல்வி, உடற்பயிற்சி, வேலை விடயங்கள் மற்றும் தீய பழக்கங்களில் இருந்து விடைபெறுதல் போன்றவற்றை நிறைவேற்ற முடிவு செய்தால் அம்முடிவை மாற்றவே வேண்டாம்.
நாம் ஒவ்வொருவரும் அடுத்த வருடம் செய்ய நினைப்பதை ஒரு தாளில் எழுதுங்கள். பின்பு ஒவ்வொரு நாளும் நாங்கள் அதற்காக என்ன செய்தோம் என்பதையும் எழுதி வந்தோம் என்றால் நாங்கள் நினைப்பதை சாதிக்கலாம்.
ஆகவே நாமும் எங்களைச் சுற்றி இருப்பவர்களும் நன்றாக வாழ வேண்டும்! புதிய வருடம் நன்றாக அமையட்டும்!
நீங்கள் ஒவ்வொரு வருடமும் கண்ட கனவு நிறைவு பெறவில்லை என்றால் சோர்வடைந்து விடக்கூடாது. விடாமுயற்சி என்பது கட்டாயம் பலன் தரும்.
அன்பு காட்ட தவறியிருந்தால் அன்பு காட்டுங்கள்.
கல்வி கற்கவில்லை என்றால் கற்றுக் கொள்ளுங்கள்.
வேலை செய்யவில்லை என்றால் வேலை செய்து பணம் சேமியுங்கள். மற்றும் செலவும் செய்யுங்கள்.
ஆகவே நான் கூற வருவது என்னவென்றால், நண்பர்களே, நீங்கள் செய்ய நினைப்பதை சாதித்துக் காட்டி சாதனையாளர் ஆகுங்கள்!
— றஜினா தருமராஜா
1,889 total views, 3 views today