உலகை வியக்க வைத்த தமிழ் விஞ்ஞானிகள்
உலகெங்கும் பரவி வாழ்ந்து வரும் நமது தமிழர்களில் ஒருவர் சாதனை ஒன்றைப் படைத்தால் அதை எண்ணி ஒட்டுமொத்த தமிழ் மக்களும் பெருமைப் படுவர். அது கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலரான சுந்தர் பிச்சையாக இருக்கட்டும் அல்லது பாக்கு நீரிணையை முதல் நீந்திக் கடந்த நவரத்தினசாமி ஆகட்டும்,கின்னஸ் உலக சாதனை படைத்த விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தனாகவும் இருக்கட்டும், இவர்களால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை நிச்சயம்.
அறிவியலில் மிகவும் ஆர்வம் கொண்ட நான் பெரும் ஆச்சரியத்துடன் அறிந்துகொண்ட விடயம் என்னவென்றால் நமது தமிழர்கள் பல்வேறு அறிவியல் துறைகளில் மாபெரும் சாதனைகளை படைத்திருக்கின்றனர் என்பது தான். அவ்வாறு வியப்பூட்டும் அந்த விஞ்ஞானிகள் யார் தெரியுமா?
22.12.1887 அன்று கணித மாமேதை ஒருவர் பிறந்தார். இன்று வரை பலரால் ஆங்கிலத்தில் கூட ஆயவாநஅயவiஉயட புநnரைள என்று அழைக்கப்படும் இவர், நமது தமிழர்களுக்கே பெருமை சேர்த்துத் தந்தவர் ஆவார். அது வேறு யாரும் இல்லை தமிழ் நாட்டைச் சேர்ந்த, தமிழர் ஆகிய சீனிவாச இராமானுஜன் அவர்கள் தான். இவரிலுள்ள வியப்பூட்டும் விடயம் என்ன தெரியுமா? 13 வயதிலேயே கணிதத்தின் அடிப்படையான ஆழ் உண்மைகளை யாருடைய உதவியும் பெறாமல் சுய முயற்சியில் கற்றுக்கொண்டார். தொடர்ந்து 15 வயதில் „Synopsis of Elementary Results in Pure and Applied Mathematics“ என்கின்ற புத்தகத்தைப் படித்ததிலிருந்து, இவர் 3000கும் மேலான புதிய கணிதத் தேற்றங்களை (mathematical theorems) கண்டுபிடித்தார். இவரது தேற்றங்கள் இன்று இயற்பியல் முதல் மின்தொடர்புப் பொறியியல் போன்ற பல துறைகளில் பயன்படுத்தப் படுகின்றது.
கவலைக்கிடமான விடயம் என்னவென்றால், சீனிவாச இராமானுஜன் அவர்கள் 26.04.1920 அன்று 33 வயதிற்கு முன்னரே இறந்துவிட்டார். அவர் தொடர்ந்து பல்லாண்டுகள் வாழ்ந்திருந்தால் இன்றைய கணிதத்தை மாற்றி அமைத்திருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. இன்று இந்த மாமேதையைக் கௌரவிப்பதற்காக „The Ramanujan Journal“> „Journal of the Ramanujan Mathematical Society“ kw;Wk; „ மற்றும் „
Hardy–Ramanujan Journal“ “ என்னும் கணித ஆய்விதழ்கள் வெளியிடப் படுகின்றது. அது மட்டும் இல்லாமல் அவர் பெயரில் சாஸ்த்ரா இராமானுஜன் பரிசு (SASTRA Ramanujan Prize), இன்று ஒவ்வொரு வருடமும் அவர் ஆர்வம் கொண்ட கணிதத் துறைகளில் சாதனைப் படைத்த கணிதவியலாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
உலக அளவில் சரித்திரத்தில் மிகவும் புகழ் பெற்ற இன்னுமொரு தமிழ் அறிவியல் அறிஞர் யார் என்று கேட்டால், அது நிச்சயமாக சந்திரசேகர வெங்கட ராமன் அல்லது பொதுவாக எல்லோராலும் சி. வி. ராமன் (ஊ.ஏ. சுயஅயn) என்று அழைக்கப்படும் இயற்பியலாளர் ஆவார். 07.11.1888 – 21.11.1970 வரை வாழ்ந்த இவருக்கு 1930ம் ஆண்டில் ராமன் விளைவு எனப்படும் அவரின் கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்தப் பரிசைப் பெற்ற முதல் தமிழர் என்கின்ற பெருமையும் இவரை சென்றடையும். இதில் உள்ள அதிசயம் என்ன தெரியுமா? ராமன் விளைவு பற்றிய அவரது ஆராய்ச்சியை செயலாக்கம் பண்ண அவர் உபயோகித்த பொருட்களின் மதிப்பு அந்நேரத்தின் 200 ரூபாய்கள் மட்டும் தான். இதுவே இன்று அவரது கண்டுபிடிப்பை மறுபரிசோதனை செய்வதற்குப் பல கோடிகள் செலவிடப்பட்டுள்ளது.
தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மற்றுமொரு நோபல் பரிசு வென்றவர் சுப்பிரமணியம் சந்திரசேகர் ஆவர். இதில் குறிப்பிடவேண்டிய விடயம் என்னவென்றால், இவர் C.V. ராமனின் உறவினர் என்பது தான். 19.10.1910இல் லாகூரில் (பாக்கிஸ்தான்) உதயமான இவர், தனது ஆரம்பக் கல்வியைத் தன் தந்தை மற்றும் தனிப்பட்ட ஆசிரியரின் உதவியோடு பெற்றுக் கொண்டார். பின்னர் 1918ஆம் ஆண்டு சென்னையில் இடைநிலைக் கல்வியையும், இயற்பியல் துறையில் மேற்கல்வியையும் தொடர்ந்தார். கொம்தன் சிதறுகை மற்றும் புதிய புள்ளிவிவரம் (Compton Scattering and New Statistics) பற்றி இவர் எழுதிய முதல் ஆராய்ச்சிக்கு கட்டுரை 1928ஆம் ஆண்டு “Proceedings of the Royal Society” எனும் அறிவியல் இதழில் பிரசுரிக்கப்பட்டது. இவரின் இந்த அபார ஆராய்ச்சியின் பலனாக கேம்பிரிட்ஸ் பல்கலைக்கழகத்தில் பயில இவருக்கு வாய்ப்புக் கிட்டியது. வெள்ளைக் குள்ள நட்சத்திரங்களின் கோட்பாட்டு தத்துவத்தை வழங்கிய இவர் தன்னுடைய டாக்டர் பட்டத்தை 1933ஆம் ஆண்டில் பெற்றார். இதனைத் தொடர்ந்து சிக்காகோ பல்கலைக்கழகத்தில் வானியல் விரிவுரையாளராகப் பணி புரிந்து வந்தார். பணியில் சேர்ந்த பின் பல உயர்தரப்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்ட இவர் 1958ஆம் ஆண்டு அமெரிக்காவின் குடியுரிமையைப் பெற்றார். 1983ஆம் ஆண்டு, தன்னுடைய 73 ஆவது வயதில் நட்சத்திரங்கள் மற்றும் அவைகளின் பரிணாம வளர்ச்சி குறித்த இவரின் ஆராய்ச்சிப் பணிக்காக இயற்பியல் துறைக்கான நோபல் பரிசை வென்றார். வயது முதிர்ந்தாலும் அறிவியல் துறையில் பல சாதனைகளை மேற்கொண்ட இவர், 50கும் மேற்பட்ட டாக்டர் பட்டதாரிகளை உருவாக்கியுள்ளார். இவரின் சில மாணவர்களும் நோபல் பரிசை வென்றுள்ளனர் என்பது மிகவும் வியப்பான விடயம் ஆகும். பல தலைப்புகளில் சுமார் 10கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்ட இவர், 21.08.1995 இல் தன்னுடைய 84-வது வயதில் சிக்காகோ நகரில் இயற்கை எய்தினார்.
அடுத்து வரும் விஞ்ஞானியைச் சுருக்கமாகத் தமிழ் விஞ்ஞானிகளில் சூப்பர் ஸ்டார் என்றே அழைக்கலாம். இவரைப் பற்றி அறியாத தமிழர் இருக்க மாட்டார். அப்படிப் புகழ் பெற்ற தமிழ் விஞ்ஞானி வேறு யாரும் இல்லை 15.10.1931இல் இராமேஸ்வரத்தில் உதயமான டாக்டர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (Avul Pakir Jainulabdeen Abdul Kalam) அவர்கள் தான். இவரில் உள்ள விசேஷம் என்னவென்றால், இவர் முதலில் இயற்பியலில் பட்டம் பெற்றதும், அதில் ஆர்வம் இல்லாமல் போனதால் அடுத்ததாக விண்வெளி பொறியியல் படித்த பின் சிறந்த அறிவியலாளராக பணிபுரிந்தார். இவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். வாழ்நாள் அறிவியலாளராகக் கருதப்படும் இவர், 1998ம் ஆண்டில் இவர் மேற்கொண்ட அணு ஆயுத சோதனையால் உலகமே போற்றும் மனிதராகத் திகழ்ந்தார். 2002ம் ஆண்டில், கோச்சேரில் ராமன் நாராயணன் அவர்களை எதிர்த்துத் தேர்தலில் வென்று, இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவரானார்.
இதில் வியப்பூட்டும் விடயம் என்ன தெரியுமா? அவருக்கு பத்ம பூசண், பத்ம விபூசண் மற்றும் இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகிய பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டது. இது எல்லாம் போதாது என்று 40கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் அவருக்குக் கௌரவ டாக்டர் பட்டங்களைக் கொடுத்துள்ளன. இவர் 27.07.2015 83-வது வயதில் காலமானார்.
தமிழர்களுக்குப் பெருமை சேர்த்து தந்த தமிழ் விஞ்ஞானிகளின் வரிசையில் இவர்கள் கண்டிப்பாக ஒரு முக்கிய இடத்தை பெற்றுள்ளனர் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. இவர்களைப் பின் தொடர்ந்து எதிர்காலத்திலும் நமது தமிழர்கள் அறிவியலில் மட்டுமில்லாமல் அனைத்து துறைகளிலும் உலக சாதனையைப் படைப்பர் என்பதிலும் எந்த வித அச்சமும் இருக்கப் போவதில்லை. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நண்பர்களே? இதற்குரிய பதிலை மட்டுமில்லாமல், எனது சிறு கட்டுரை பற்றிய அபிப்பிராயத்தையும் எனக்குக் கண்டிப்பாக எனது முகநூல் பக்கத்தில்…(www.facebook.com/scinirosh)
2,333 total views, 3 views today