இந்தக் காதல் இல்லை என்றால்…

காதல் இருப்பதனால் மட்டுமே இவ்வுலகம் அழகாக உள்ளது.
காதல் இல்லாமல் எவருமே இல்லை. மனிதன் என்றாலே காதலிப்பவர்களாக மட்டுமே இருப்பார்கள்.
ஆண் பெண் காதல், தாய் குழந்தை காதல், வேலை மீது உள்ள காதல், கல்வி மீது உள்ள காதல், கணவன் மனைவி மீது உள்ள காதல் அனைத்தும் அழகானவை.
காதல் என்பது புனிதமானது. அதனை சிலர் தவறாகப் பயன்படுத்துவது கவலைக்குரிய விடயம்.
ஆண் பெண் காதல் உணர்வு மனதுக்கு சந்தோசத்தைத் தருகிறது. ஒருவர் மீது ஒருவர் செலுத்தும் அன்பைப் பற்றி கூறுவதுக்கு வார்த்தைகளே இல்லை.
உண்மைக் காதல் சேராது விட்டால்
சிலர் தற்கொலை கூட செய்து கொள்வார்கள். கவலைக்குரிய விடயம். பிரிவு வந்து விட்டால் மன அழுத்தத்துக்கு உள்ளாகி விடுவார்கள்.
காதல் இருந்தும் கடினம் இல்லாவிடினும் கடினம்.
காதலி சிரிப்பது அழகு காதலன் திட்டுவதும் அழகு. மொத்தத்தில் காதல் என்றாலே அழகு அல்லவா.
தாய் இல்லாமல் நாம் எவருமே இல்லை. ஆகவே இவ்வன்பானது மிகவும் தூய்மையானது.
தன் குழந்தையிடம் தாய் என்பவர் காட்டும் அன்புக்கு எல்லையே இல்லை.
நாம் செய்கின்ற வேலை மீது அன்பு மற்றும் விருப்பமில்லை என்றால் என்ன நடக்கும்? வாழ்க்கையே வெறுப்பாக இருக்கும். ஆகவே நீங்கள் காதலிக்கும் வேலையைச் செய்யுங்கள்.
கல்வியும் அதே போலவே.
கணவன் மனைவி காதல் மிகவும் தூய்மயானது புனிதமானது அழகானது. இவர்களின் அன்புக்கு எல்லையே இல்லை.
ஆகவே காதல் இல்லை இவ்வுலகம் இல்லை