உலகெங்கும் ‘மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்’ விவகாரம் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது.
செயற்கை முறையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை, பெரிய தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. குறிப்பிட்ட மரபணு மாற்றங்களுக்கு, அவை அறிவியல் ‘காப்புரிமை’ பெற்றுள்ளன. இதனால், ஒவ்வொரு முறையும், அவர்களிடம் இருந்து தான், அந்த விதைகளை வாங்க வேண்டும். பல நிறுவனங்கள், ஒரு படி மேலே சென்று, மரபணுவில் மேலும் பல மாற்றங்களைச் செய்து, மலட்டு விதைகளை உருவாக்கும் பயிர்களை விருத்தி செய்துள்ளன. இவைகள் வளர்ந்து நல்ல விளைச்சலைக் கொடுக்கும். ஆனால் இந்தப் பயிர்களின், விதைகளைச் சேகரித்து அவற்றை மீண்டும் விதைத்தால் அவை முளைக்காது. இதனால் விவசாயிகள், விதைகளுக்காக எப்போதும் அந்த நிறுவனத்தையே நம்பி இருக்க வேண்டும். அந்த நிறுவனம் முடிவு செய்வது தான் விலை, வைத்தது தான் சட்டம். இதனால் உலகின் உணவு உற்பத்தி ஒரு சில தனி நிறுவனங்களின் ஏகபோக உரிமையாகிவிடும்.
இலங்கையில் பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் மலட்டு விதைகள் பெருமளவில் விற்கப்படுவதாத் தெரியவில்லை. ஆனால் இலங்கை விவசாயத் திணக்களகம் கலப்பின விதைகளை (கு1, கு2 ர்லடிசனை ளநநனள) விற்பனை செய்கின்றது. இவை அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் பெறப்பட்டவை. இந்தப் பயிர்களின், விதைகளைச் சேகரித்து விதைத்தால் அவை முளைக்கும். ஆனால் முதல் சாகுபடி போல அடுத்த போகம் காய்க்காது. எனவே இலங்கையிலுள்ள விவசாயிகள், இப்பொழுது வழமையான விதை சேகரிப்பை விடுத்து விவசாய திணைக்களகத்திலும் விதை வியாபாரிகளிடமும் விதைகளை வாங்கியே நாத்து மேடை போடுகிறார்கள்.
இந்தியாவில் செயற்கை முறையில் மரபணுமாற்றம் செய்யப்பட்ட மலட்டு விதைகளை, இயற்கை விவசாயிகளின் பாரிய எதிர்ப்புக்கு மத்தியிலும் பன்னாட்டு விதை வியாபார நிறுவனங்கள் அறிமுகம் செய்து வெற்றி கண்டுள்ளார்கள். இதன் ஒரு வடிவம்தான் ‘பி.டி’ கத்தரிக்காய்!
விதைகளற்ற தார்பூசனி, பப்பாளி ஆகியனவும் மரபணு மாற்றத்தின் விளைவுகளே. இது பற்றிய விபரம் விரைவில்.
ஆ.சி.கந்தராஜா அவுஸ்திரேலியா
2,555 total views, 6 views today