யேர்மனியில் சாதனை படைத்த புதுமைப் பெண்!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு புதுமைப்பெண்கள் 2020 என்னும் நிகழ்ச்சியினை வெற்றிமணி சிறப்புற யேர்மனியல் நடத்தியது. இளம் புதுமைப் பெண்களாக சாதனை படைத்த நால்வரை வெற்றிமணி மகளிர்தினத்தில் (08.03.2020) கௌரவித்தது.
அவர்களது விபரம். இவர்கள் கல்வி கலை என்பது மட்டுமன்றி தமிழில் சரளமாக பேசவும் தெரிந்தவர்கள் என்பது சிறப்பம்சமாகும்.

படைத்த திருமதி. ஜொஸ்லினி செல்வரெட்ணம், திருமதி.நிலக்ஷி அகல்யா.தயாநிதி, செல்வி.அபீரா வசந்தராஜா, செல்வி.கார்த்தனா தனபாலசிங்கம் ஆகியோரை வெற்றிமணி கௌரவித்தது.

  1. திருமதி. ஜொஸ்லின் செல்வரெட்ணம் போல்ட்ர்;:

இவர் தனது 16 வயதில் ஜேர்மனி அரசாங்க Scolorship இல் ஒரு வருடம் அமெரிக்கா சென்று வந்த பெருமைக்குரியவர். Bonn நகரில் சட்டப்படிப்பினைக் கற்க ஆரம்பித்தார். பின்பு Lüthich Belgien இல் அதனைத் தொடர்ந்தார். 4 மாதங்கள் Germen Consulate of LosAngels இல் வேலை செய்தார். 2009 இல் இருந்து சட்டத்தரணியாக டியூஸ்பேர்க் நகரில் பணியாற்றுகின்றார். இதனைவிட சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பண உதவிகள் செய்து வருகின்றார். Erkelenz für Srilanka என்ற அமைப்பின் மூலம் பலவிதமான உதவிகளைச் செய்து வருகின்றார். ZDFல் நடத்தப்பட்ட கோடீஸ்வரர் நிகழ்ச்சியில் பங்கேற்று அவருடைய அறிவுக்குப் பரிசாக பெரிய ஒரு பணத்தொகையைப் பெற்றுக் கொண்டார். இத்தொகையின் பெரும்பங்கினை இந்த Erkelenz für Srilanka அமைப்பின் மூலம் எமது தாயகத்திற்கு உதவிக்கரம் நீட்டினார்.

2.திருமதி. நிலக்ஷி அகல்யா தயாநிதி:

Lüdenscheid நகரைச் சேர்ந்த இவர் தொழில் கற்பதில் கொண்ட சந்தோசத்தினை விட பல நாடுகள் சென்று அந்த மொழி கலாசாரங்களைத் தெரிந்து கொள்வதில் ஈடுபாடு கொண்டவர். இவர் Spain, Irland, China, India, Brazil போன்ற நாடுகள் சென்று அந்நாட்டுக் கலாசாரங்களைத் தெரிந்து கொண்டது மட்டுமன்றி தமிழ், German, French, English, Spain, Japan மற்றும் ரஷ்யன் மொழிகளையும் நன்றாக சலனமின்றி பேசக்கூடியவர். இவர் Business Administration படிப்பினை ஐரோப்பாவிலும் Spain இலும் முன்னணியில் இருக்கும் 1E Business School இல் கற்று MBA பட்டம் பெற்று Kostal நிறுவனத்தில் Produkt Entwicklung தலைமை அதிகாரிக்கு அடுத்தபடியாக இருக்கிறார்.

3.செல்வி. அபீரா வசந்தராசன்:

இவர் வரிச்சட்டப் படிப்பினை Münster இல் கற்றுக் கொண்டு நிதி பொருளாதார நிபுணராக Wuppertal இல் உள்ள வரி அலுவலகத்தில் (Finanzamt) இல் 3 வருடங்கள் பணி புரிந்தார். இப்போது வரி ஆய்வாளராக köln வரி அலுவலகத்தில் வேலை செய்கிறார். இவர் ஒருவரே முதலாவதாக மாநிலத்தில் அரசாங்க வரி ஆய்வாளராக பணியாற்றும் தமிழ்பெண் என்ற பெருமைக்குரியவர். இதனை 2013 இல் WDR தொலைக்காட்சி பேட்டி வடிவில் ஒளிபரப்பு செய்தது. இவர் பற்றிய NSW என்ற சஞ்சிகையில் ஒரு கட்டுரையும் இடம் பெற்றது. மேலும் Finance ministry ல் இவர் வரிச்சட்டம் சம்பந்தமான பட்டறைகளையும் நடத்தி வருகிறார். வரி ஆலோசகருக்கான பரீட்சை வினாத்தாள்களை திருத்தும் பணியையும் செய்து வருகின்றார். அது மட்டுமல்லாது நிதி ஆலோசனை உதவியாளராகவும் செயற்படுகிறார். பள்ளிக்காலங்களில் சுனாமித் திட்டம் ஒன்று திறக்கப்பட்டது. இவர் மாணவர் பிரதிநிதியாகச் சர்வதேச ஐக்கிய நாடுகள் நெதர்லாந்து மற்றும் ருநௌஉழ வின் மாநாட்டில் கலந்து கொண்டு பாராட்டுக்களைப் பெற்றவர்.
அபீரா Weduki Project அதாவது எல்லா நாடுகளிலும் இருந்து இடம்பெயர்ந்து மொழி தெரியாத குழந்தைகளும் மொழி கற்பதற்கான வசதிகளைச் செய்து வருகிறார். தமிழ் பாடசாலையில் 12 ஆம் வகுப்பினைப் பூர்த்தி செய்து அங்கேயே ஒரு சில காலம் ஆசிரியராகப் பணிசெய்தார். பரத நாட்டியத்தினைக் கற்று கலாஜோதிப் பட்டத்தினையும் பெற்றுக் கொண்டார்.

4.செல்வி. கார்த்தனா தனபாலசிங்கம்:

இவர் தனது 5 வயதில் ஒரு மிருதங்கக் கச்சேரிக்குச் சென்றிருந்த போது ஏற்பட்ட கவர்ச்சியினால் அந்த தோல் வாத்தியத்தினை முறைப்படி பிரபல மிருதங்கச் சக்கரவர்த்தி திரு.பிரணவநாதன் அவர்களைக் குருவாகக் கொண்டு கற்கத் தொடங்கினார். மி;ருதங்கக் கலாஜோதி என்ற பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். மிருதங்க அரங்கேற்றத்தையும் செய்து கொண்ட பெண்மணி இவர். அத்துடன் வாய்ப்பாட்டு, வயலின், வீணை ஆகியவற்றையும் முறைப்படி பயின்று ழுசநைவெயட Oriental Fine Arts Acadamy London மூலம் நடத்திய பரீட்சைகளில் சித்தி பெற்று சங்கீதக் கலாஜோதி, விரலிசை வர்த்தினி, என்ற பட்டங்களையும் பெற்றுக் கொண்டார். தமிழ்க்கல்வியைப் பெற்று 12 ஆம் வகுப்பினை பூர்த்தி செய்துவிட்டு இப்போது பல மாணவிகளுக்கு இசைக்கருவிகளைக் கற்பித்துக் கொடுத்து வருகிறார். மேலும் ஹம் பல்கலைக்கழகத்தில் உயிர் மருத்துவப் பொறியியலாளராகப் படித்துக் கொண்டிருக்கிறார்.

2,197 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *