ஈஸ்டர் ‘இந்த ஆண்டு வித்தியாசமாக இருக்க வேண்டும்’ யேர்மன் அதிபரின் புதிய அறிவிப்புக்கள்!
ஈஸ்ரர் விடுமுறையும் நாம் விலகிநிற்கவேண்டிய தூரமும்!
யேர்மன் அதிபரின் புதிய அறிவிப்புக்கள்!
ஈஸ்டர் ‘இந்த ஆண்டு வித்தியாசமாக இருக்க வேண்டும்’
யேர்மன் அதிபர் கடந்த (01.04.2020) புதன்கிழமை 16 மாநிலங்களின் தலைவர்களுடனும் conference call தொலைபேசி மாநாடு ஒன்றினை நிகழ்தினார். அதில் பின்வரும் முடிவுகள் எட்டப்பட்டன.
இந்த முடிவு யேர்மனியில் வாழும் 82 மில்லியன் மக்களுக்கும் பொருந்தும்.
யேர்மனியில் சமூக விலக்கல் (social distancing) சட்டம் ஏப்பிரல்; 05 திகதி வரை, என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இது தற்போது ஏப்பிரல் 19 வரை நீடிக்கப்பட்டுள்ளது. வரும் 06 ஆம் திகதி முதல் 19 திகதி வரை யேர்மனியில் பாடசாலைகள் ஈஸ்ரர் (Easter holidays) விடுமுறை விட உள்ளது.
அத்தருணத்தில் மக்கள் குடும்பம் குடும்பமாக ஒன்றுகூடி விருந்துண்பதும், விடுமுறையைக் கழிக் நீண்ட பயணங்களை மேற்கொள்வதும் நண்பர்கள் உறவினர்களுடன் கூடி மகிழ்வதும், வளமையானது. இதனை நான் நன்கு உணர்வேன். ஆனால் இம்முறை இந்த ஈஸ்ரர் விடுமுறை வித்தியாசமாக அமையும் என்கிறார் யேர்மன் அதிபர் (Angela Merkel) அங்கேலா.மேர்க்கல்
யேர்மனியில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்ட விதி முறைகள் நீடிக்கப்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நாம் எமது இயல்பு நிலை எனும் இலக்கை அடைய இன்னும் நீண்ட தூரம் பயணிக்கவேண்டியுள்ளது. எனவே இந்த ஈஸ்ரர் விடுமுறையில் ஒரே தொடர் மாடியில் இருப்பவர்கள், என்றாலும் ஒரு வீட்டில் இருப்பவர் என்றாலும் வெளியில் 1.5 மீ இடைவெளியை தொடர்ந்தும் பேணல் வேண்டும். அத்துடன் தன் குடும்பம் தவிர்ந்த உறவினர்களுடன் ஒன்றுபட்டு விருந்துண்பது, சுற்றுலாச் செல்வது இவற்றை முற்றாக நிறுத்த வேண்டும். உறவினர்களது நண்பர்களது,வருகைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.
இன்று இருக்கும் கொரோனா வைரசின் வேகம் மேலும் மோசமாகத் தொடருமானால், சமூகதொடர்பாடல் விதிமுறைகள் ஏப்பரில் 14ம் திகதி அன்று மீண்டும் புதிய நீடிப்புக்கான அறிவித்தல் வெளியிடப்படும். இதனால் ஈஸ்ரர் விடுமுறையைத் தாண்டியும் மக்கள் வீட்டுக்குள் முடங்கவேண்டி வரலாம்.
யேர்மனி ஏப்பிரில் 19 வரை என தற்போது வரையறுக்க, அதே நேரம் அமெரிக்காவில் நிலமை கட்டுக்;கடங்காது செல்வதால் ஜனாதிபதி Donald Trump மக்கள் தொடர்பாடல் விதிமுறைகளை ஒரேயடியாக ஏப்பிரில் 30 வரை நீடித்துள்ளார்.
யேர்மனியில் ஈஸ்ரர் விடுமுறையை பெரியவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு குழந்தைகளும் பெரிதும் கொண்டாடுவர். முட்டைகளுக்கு வர்ணம் பூசுதல். வீட்டுக்வெளியே, உள்ளே முட்டைகளை தொங்கவிடல். முயல் பொம்மைகள் செய்தல், விதம், விதமான முட்டை சாக்ளேட், முயல்,சாக்ளேட் என குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கு அன்பளிப்பு செய்வார்கள். கடைகள் எல்லாம் முயலும், முட்டையுமாக அலங்கரித்து இருக்கும். நத்தாருக்கு பிறகு வரும் பெரிய கொண்டாட்டமா இது அமையும். தேவாலயங்களில் பூசையும், பெரிதாக இடம்பெறும். இந்தவருடம் கொரோனாவால் கடைகள் களை இழந்துபோய்க்கிடக்கின்றன. தேவாலயங்களில் மணிஓசை மட்டும் ஒலிக்கின்றன.
குடும்ப வன்முறைகள்
பெரியவர்களை விட மாணவர்கள், குழந்தைகள் மன நிலை வீட்டுக்குள் முடக்குவதால் பெரிதும் பாதிக்கப்படும் என மனோ தத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றார்கள். பெற்றோர் பிள்ளைகள் உறவு, கணவன் மனைவி உறவுகள், இந்த காலகட்டத்தில் பேணப்பட வேண்டும். அதற்கான வழிமுறைகள்பற்றி தொடர்பாடல்களை ஊடகங்கள் செய்வேண்டும். மக்கள் மன உழைச்சலுக்குள்ளாகாது இருப்பதற்கான திட்டங்கள் அடுத்தகட்ட நடவடிக்கையாக அமையும், அதற்கான ஆலோசனகளும் யேர்மனியில் இடம் பெறுகின்றன. இதற்கான காரணம் குடும்ப வன்முறைகள், பாலியல் குற்றங்கள்,களவு,குடும்ப விரிசல்கள் ஏற்பட நிறையவே வாய்ப்புக்கள் உண்டு. இந்த வன்முறைகள் ஆசிய நாட்டவருக்கு மட்டுமல்ல. இந்தச் சுழலில் இந்த வன்முறைகள் யாவருக்கும் பொதுவானதாகவே அமையும்.
யேர்மனியில் Masks முகமூடி அணியவேண்டிய கட்டாயம் இல்லை.
யேர்மனியில் Masks முகமூடி அணியவேண்டிய கட்டாயம் இல்லை.யேர்மன் அதிபர் மேற்கொண்ட தொலைபேசி மாநாட்டில் வைரஸ் பரவுவதைத் தடுக்க, மக்கள் முகமூடிகளை அணியத் தேவையில்லை என்பதை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒப்புக் கொண்டன.
இருப்பினும், முகமூடியை அணிந்துகொள்வது, அந்த நபர் மற்ற சமூக தொலைதூர கட்டுப்பாடுகளை கவனிப்பதில் இருந்து விடுபட்டவர் என்று அர்த்தமல்ல. மஸ்க் அணிபவரும் 1.5.மீ இடைவெளியை கட்டாயம் பின்பற்றவே வேண்டும். தற்போதைய நடவடிக்கைகள் இரண்டுக்கும் மேற்பட்ட நபர்களின் சந்திக்கும் பொதுக் கூட்டங்களைத் தடைசெய்கின்றன, குடும்பங்கள் மற்றும் ஒரே குடியிருப்பில் அல்லது வீட்டில் வசிக்கும் நபர்களுக்கு விதிவிலக்கு. குடியிருப்பாளர்கள் பொதுவில் வெளியே இருக்கும்போது மற்றவர்களுக்கு குறைந்தபட்சம் 1.5 (4.9 அடி) தூரத்தை வைத்திருக்க வேண்டும்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் நர்சிங் ஹோம்களுக்கு கிடைக்கும் முகமூடிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுக்காகவும் செயல்பட்டு வருவதாக மேர்க்கெல் கூறினார்.
இதே நேரம் அண்டை நாடான ஆஸ்திரியா, (Austria) மளிகைக் கடைகளுக்குள் நுழையும் அனைவருக்கும் கடந்த புதன்கிழமை (01.04.2020) மஸ்க் (Masks) தேவையை கட்டாயம் என அமல்படுத்தியது.
-வெற்றிமணி மு.க.சு.சிவகுமாரன்
1,713 total views, 6 views today