கொரோனாவா!!! முதலில் அச்சம் தவிர்!

கொரோனா மூன்றாவது உலகப் போருக்கு சமன்! அந்த அளவு உலகைத் தாக்குகின்றது.
இந்த வைரஸ் தொற்றிவிட்டது என்று தெரிந்து கொள்ள சில அறிகுறிகள்:
தொற்றாது உங்களைப் பாதுகாப்பது எப்படி! முதலில் அச்சம் தவிருங்கள். இது காற்றில் பரவும் நோய்யல்ல. தொட்டால் மட்டுமே தொற்றிக்கொள்ளும்,அதனையும் எதிர்கொள்ள பல வழிகள் உண்டு.

உலகத்தையே ஆட்டிப்படைக்கும் இந்த கொரோனா வைரஸ் அடுத்த 3வது உலக போருக்கு சமம். இந்த வைரஸ் முதல் முறையாக சீனாவில் உள்ள வூகான் நகரில் 2019 மார்கழி மாதம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் இந்த வியாதிக்கு காரணம் பாம்புகள் என்று தான் கூறப்பட்டு வந்தது. ஆனால் வேறு சில நிபுணர்கள் இதன் காரணம் வவ்வால்கள் என்று கூறியுள்ளார்கள்.

இந்த வைரசை இப்போது COVID-19 என்று பெயரிடப் பட்டுள்ளது. வூகானில் உள்ள அசைவ உணவுகளின் சந்தையில் பாதிக்கப்பட்ட உணவுகளிடம் இருந்து பரவி இருப்பதாக சீனா அதிகாரிகளால் நம்பப்படுகிறது. விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு இது சுலபமாகப் பரவ வாய்ப்பிருக்கிறது.

இந்த வைரஸ் தொற்றிவிட்டது என்று தெரிந்து கொள்ள சில அறிகுறிகள்:

அதாவது மூக்கால் நீர் வடிதல் இதன் அறிகுறி அல்ல பலர் அது அறிகுறி என்று தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

இதற்கு முக்கிய அறிகுறிகள் என்ன வென்றால், இந்த வைரஸ் தொற்றியபின் 3-4 நாட்களில் தொண்டையைத்தான் முதலில் தொற்றுகிறது. இதன் விளைவு தொண்டை வலி அதிகமாக இருக்கும். இதன் பின் நுரையீரலை சென்றடைந்து நிமோனியாவாக்குகிறது. இவை 5-6 வது நாள் நடைபெறுகிறது. நிமோனியாவுடன் உடல் வெப்பமும் அதிகமாகிறதோடு சுவாசிப்பதும் கடினமாகிறது. மூக்கடைத்தல் எமக்கு வரும் சதாரண மூக்கடைப்பு அல்ல, இது தண்ணீருக்குள் மூழ்கும் போது ஏற்படும் மூச்சுத்திணறல் போன்றது. இது போன்ற நிலை ஏற்படும் போது உடனடியாக மருத்துவரை தொலை பேசியில் தொடர்பு கொள்ளவும்.

இந்த வைரஸ் வெப்பத்தில் உயிர் வாழாது, இது 30-35 degreesசில் உயிர் இழந்துவிடும். ஆiகாயால் தான் சுடு நீர் அருந்துவது மிகவும் நன்மை தரும். இது வைரசை முடியும் வரையும் அழித்துவிடும்.

வைரஸ் metal (உலோகம்) மீது விழுந்தால் 12 மணித்தியாலங்கள் செயல்பாட்டுடன் இருக்கும். ஆகையால் இவற்றில் உங்கள் கைகள் பட்டால் 20 ளநஉழனௌ நன்றாக கைகளை கழுவுங்கள். இதே போல் வைரஸ் துணிகளில் பட்டால் 6-12 மணித்தியாலங்கள் செயல்பாட்டுடன் இருக்கும், துணிகளை நாம் வழமை போல தோய்த்து எடுத்து காயவிட்டால் செயல் இழந்துவிடும்.

Covid-19 என அழைக்கப்படும் இந்த வைரஸ் தொற்றுவது எப்படி என்றால் பொது இடங்களில் உள்ள பொருட்களை கைகளால் தொட்டுவிட்டு நாம் எமது கண்களை தொடுவது, கசக்குவது,மூக்கை தொடுவது அல்லது வாய்க்குள் விரலை வைப்பதன் மூலம் இந்த வைரஸ் எமக்குள் நுழைகிறது.

ஆகையால் கைகளை நன்கு அலசிக் கழுவவும். Covid-19 எமது கைகளில் 5-10 நிமிடங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும். ஆனால் அந்த 5-10 நிமிடங்களுக்குள் நீங்கள் உங்கள் முகத்தை தொடாமல் இருக்க வேண்டும்.

யாரேனும் தும்மினாலோ அல்லது இருமினாலோ 3அடி தள்ளியே நில்லுங்கள். இந்த வைரஸ் அதிகம் தாக்குவது 60 வயதிற்கு மேற்பட்டவர்களையும், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களையும் மற்றும் இதயநோய்கள், சக்கரைவியாதி,அதிக இரத்த அழுத்தம், புற்றுநோய், சிறுநீரக நோய்,சுவாசப்பை நோய்கள் என இன்னும் பலவிதமான நோய்கள்.

சிறுவர்களை இந்த வைரஸ் தாக்கியதாக ஒரு புள்ளிவிபரங்களும் தெரிவிக்கவில்லை. என்றாலும் அவர்களும் அடிக்கடி கைகளை கழுவுவது நல்லது ஏன் என்றால் அவர் காவிகளாக இருக்கலாம்.

மேலே குறிப்பிட்டோர் பொது இடங்களுக்கு போவதை தவிர்ப்பது நல்லது. அப்படி போக வேண்டிய நிலை ஏற்ப்ட்டால் கைகளை மேலே கூறியதைப் பின்பற்றவும்.

சுருங்கச் சொல்வதானால் நாம் தாயகத்தில் வாழ்ந்தபோது வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பினால், வீட்டுக்குள் வரும்போது கால் கை கழுவி உள்ளே வருவதும், ஒருவரைக் கண்டால் கைகொடுக்காது வணக்கம் சொன்ன மாண்பும், இதுபோன்ற எமது மூதாதையர் கடைப்பிடித்த பல சுகாதார வாழ்வை தொடர்ந்தால் போதும், அச்சம் தவிர்க்கலாம்.

— சிவஜெனனி BSc (Hons Pharmaceutical science)

1,888 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *