யேர்மனியில் அறுவடைக்கு 300,000 தொழிலாளர்கள் தேவை!
கிழக்கு ஐரோப்பாவிலிருந்து தொழிலாளர்கள் வருகை!
நாட்டிற்குள் நுழைவதற்கான தடை அவர்களுக்கு தளர்த்தப்பட்டது
யேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் 2 இலட்சத்தை நெருக்கிக்கொண்டு இருக்கும் வேளை தனிமைப்படுத்தல், மனிதர்களுக்கான இடைவெளி, அத்தியாவசியமற்ற வேலைத்தலங்கள் மூடல், மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து. என பல விதிமுறைகள் இன்றும் அமுலில் உள்ளது.
ஆனால் நாட்டின் முதுகெலும்பு விவசாயிகள். எதோ நாம் ஆசிய நாட்டவர்களுக்குத்தான் விவசாயிகள் அவர்களின் முதுகெலும்பு என்பதுபோலவும், ஐரோப்பியர்களுக்கு காரும் இரும்பும் இருந்தால் போதும் என்பதுபோலவுமே எண்ணம் இருக்கவே செய்கின்றது.
ஐரோப்பாவில் விவசாயம் நவீனமயபட்டு பெரும் கணக்கில் நடைபெறுகின்றது. நமது தாய் நாட்டில் விவசாயம் வெகுவாகக் குறைந்துவிட்டது. எப்படி நமக்கு அரிசியோ அதுபோல் ஐரோப்பியருக்கு உருளைக்கிழங்கு.
எமக்கு மரவள்ளி சீனிவத்தாளங்கிழங்கு,இராசவள்ளிக்கிழங்கு என பல அங்கு எமது வாழ்வோடு கலந்தே உள்ளதோ, அதுபோல் ஸ்பாகிள் சோளம் கோவா கரட் என்பன அவர்கள் வாழ்வோடு கலந்தே உள்ளது.
இன்று கொரோனோ வைரஸ் தொற்று உச்சத்தில் உள்ள இந்த நேரம் யேர்மனியில் விவசாயத்தின் அறுவடைக்காலம் நெருங்குகிறது. இதனை சரியாக கையாளாவிட்டால் உணவுப்பஞ்சம் விவசாயிகளின் பொருளாதாரம், என்பன நெருக்கடிக்கு உள்ளாகலாம். இதற்கு தீர்வு காண அறுவடைக்கு உடன் தொழிலாளர்கள் தேவை.
தேவை: 300,000 தொழிலாளர்கள்
யேர்;மன் விவசாயிகள் 2020 அறுவடைக்கு சுமார் 300,000 பருவகால தொழிலாளர்கள் தேவை என்று கூறுகிறார்கள். ஆனால், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில், யேர்மனியின் அரசாங்கம் சமீபத்தில் வெளிநாட்டு அறுவடை செய்பவர்களை – பிற வெளிநாட்டினரைப் போலவே – நாட்டிற்குள் நுழைவதைத் தடைசெய்தது.
ஏற்கனவே யேர்மனியில் வேலைக்கு அமர்த்துவதன் மூலம் தொழிலாளர்கள்; பற்றாக்குறையை நிரப்ப முயன்றனர். இயந்திர வளையங்களின் பி.எம்.ஆர் சங்கம் மற்றும் உணவு வேளாண்மை அமைச்சகம் இணைந்து விவசாயிகளுக்கு வேலைகளை விரைவாக விளம்பரப்படுத்த ஒரு ஆன்லைன் தளத்தை உருவாக்கின. வேளாண்மை மந்திரி ஜூலியா (Agriculture Minister Julia Klöckner) இந்த தளம் விரைவாக ஆர்வத்தை ஈர்த்தது, சுமார் 16,000 யேர்மனியர்கள் – ஒரு சில கால்பந்து வீரர்கள் உட்பட கையெழுத்திட்டனர். எவ்வாறாயினும், அவர்களில் பலர் தொழில் அனுபவம் குறைந்த அல்லது அனுபவம் இல்லாதவர்களே விண்ணப்பித்திருந்தனர். இதனால் தமக்கு சிறிய உதவி கிடைக்கும் என்று விவசாயிகள் கூறினர், குறிப்பாக அஸ்பாரகஸை (Asparagus) அறுவடை செய்யும்போது.
இந்த இக்கட்டான நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களால் பயணத்திற்கு கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், உருமேனியா குடிமக்களை பருவகால அறுவடை வேலைக்கு செல்ல உருமேனிய உள்துறை மந்திரி (Ion Marcel) அயன் மார்செல் வேலா அனுமதிகொடுத்தார். மேலும் யேர்மனியில் இருந்து அழைப்பு வந்தது. கொரோனா வைரஸ் தொற்று குறித்த கவலைகள் இருந்தபோதிலும் தொழிலாளர்கள் நேரடியாக யேர்மனிக்கு விமானத்தில் பறக்க அனுமதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
இது யேர்மன் விவசாயிகளுக்கு ஒரு நல்ல செய்தி, ஆனால் வரும் தொழிலாளர்களுக்கு அது நல்ல செய்திதானோ என்ற ஐயம் இல்லாமல் இல்லை.
2019 ஆம் ஆண்டில், உருமேனியர்கள் தமது கடின உழைப்பால் அஸ்பாரகஸை முதல் முறையாக அறுவடை செய்தாரகள்;. ஏறக்குறைய மூன்று மாத வேலைகளுக்குப் பிறகு – ஒரு நாளைக்கு 10 மணிநேரம், வாரத்தில் ஏழு நாட்கள் – என வேலைசெய்து 1,800 டாலர்களுடன் வீடு திரும்பினார். ஏனென்றால், அவரது ஊதியத்தில் 1,000 டாலருக்கும் அதிகமானவை யேர்மனியில் உணவு, உறைவிடம் மற்றும் பிற செலவுகளை ஈடுகட்டவே சாரியாக இருந்ததாம்.
“இது ஒரு இனிமையான அனுபவம் அல்ல” என்று அவர்கள் கூறினார்கள். அவர் சுமார் 120 பருவகால தொழிலாளர்களுடன் – பெரும்பாலும் உருமேனியர்கள் மற்றும் ஒரு சில பல்கேரியர்களுடன் இணைந்து பணியாற்றினார் – அவர்கள் கிட்டத்தட்ட யேர்;மன் மொழி பேசவில்லை, அனைவருக்கும் தரகர்கள் மூலம் வேலை கிடைத்தது.
அதே இடைத்தரகரகள்; இந்த ஆண்டு யேர்மனியில் அவர்களுக்கு வேலை வழங்க உள்ளனர். இந்த முறை சிறந்த வேலை நிலைமைகளுடன்: “அவர்கள் எங்களுக்கு மிகவும் தேவை, அவர்கள் எங்களுக்காக விமானங்களை கூட ஏற்பாடு செய்கிறார்கள்.”.
“கிழக்கு ஐரோப்பாவிலிருந்து கூடுதல் பருவகால தொழிலாளர்களை நாட்டிற்குள் அனுமதிக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்று யேர்மன் விவசாயிகள் சங்கத்தின் Joachim Rukwied, (DBV) (டிபிவி) தலைவர் ஜோச்சிம் ருக்விட் கூறினார். இந்த ஒப்பந்தம் டிபிவி உறுப்பினர்களின் தேவைகளையும், யேர்மனியின் விவசாய மற்றும் வனத்துறை முதலாளி சங்கங்களின் குடை அமைப்பான ஜி.எல்.எஃப்.ஏ உறுப்பினர்களின் தேவைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டது என்றார்.
“எங்கள் வணிகங்கள் தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட (Robert Koch) ராபர்ட் கோச் நிறுவனம் வகுத்துள்ள தற்போதைய சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்கும்” என்று ருக்வீட் கூறினார். “இந்த முடிவு எங்களுக்கு தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்கும்.”
இப்போது, லுஃப்தான்சா துணை நிறுவனமான யூரோவிங்ஸ், வசந்தகால அறுவடைக்காக பல்லாயிரக்கணக்கான பருவகால தொழிலாளர்களை ஏற்றிவர டிபிவியுடன் இணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளது. உருமேனியாவிலிருந்து யேர்மனிக்கு தொழிலாளர்கள் செல்ல யூரோவிங்ஸ் ஏற்கனவே ஒரு வலைத்தளத்தை அமைத்துள்ளது.
அவர்கள் யேர்மனிக்கு வரும்போது, தொழிலாளர்கள் 14 நாட்கள் மற்றவர்களிடமிருந்து தனித்தனியாக வாழ வேண்டும், வேலை செய்ய வேண்டும், மேலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பண்ணைகளை விட்டு வெளியேற யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. ராபர்ட் கோச் நிறுவனத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் கடுமையான வீட்டு விதிமுறைகளுக்கு ஏற்ப முதலாளிகள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
அறைகள் அவற்றின் வழக்கமான திறனில் பாதி மட்டுமே வசிக்க அனுமதிக்கப்படுகின்றன, மேலும் ஆடை மற்றும் உணவுகள் சூடாகக் கழுவப்பட வேண்டும். அரசாங்கம் இதை “நடைமுறை வேலை தனிமைப்படுத்தல்” என்று அழைக்கிறது.
யேர்மனியில் வசந்தகால அறுவடை வளமைக்கு மாறாக ஒருவித பூட்டுதலின் கீழ் நடைபெறும்.
-வெற்றிமணி .மு.க.சு.சிவகுமாரன்
1,781 total views, 3 views today