யேர்மனியில் சிகை அலங்கார நிலையங்கள் மிகவும் வேடிக்கையாக சிகை திருத்தும் நிலையமாகிவிட்டது.


“We’re doing mostly repair work today”

ஆறுவாரங்களின் பின் அழகுமையங்கள் திறக்கப்படுகின்றன!
ஜெர்மனி தனது கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை சமீபமாக தளர்த்திவருகிறது. அதாவது மார்ச் 23 அன்று டுழஉமனழறn பூட்டுதல் தொடங்கிய பின்னர் முதல் முறையாக அலங்கரிப்பு மையங்கள் திறக்கப்படலாம்.
பெரும்பாலன ஆண்களின் தலைமயிர்கள் சுனாமிபோல் இருப்பதாக வடிவேலு முதல் பேரக்குழந்தைகள் வரை அடிக்கும் கிண்டலுக்கு அளவில்லை.
பொதுவாக கணவன்மார் தங்கள் மனைவிமார் முன்பு வெளியே செல்லவாவிட்டால் பெரிய குழப்பம் வீட்டில்வரும்.ஆனால் தற்போது வெளியே போகச்சொன்னால் குழப்பமாக இருக்கிறது. காரணம் அழகுமையங்கள் பூட்டியுள்ளதே காரணம். பலர் ஒப்பனை இன்றி வாடிப்போய்யுள்ளனர்.
இந்த நேரத்தில் யேர்மன் அதிபர் ஒரு பெண் என்பதால் ஆண்கள் பெண்கள் நிலைமை நன்கு புரிந்துகொண்டு சிகை அலங்கார நிலையத்தை திறப்பதற்கு அனுமதிவழங்கியுள்ளார்.
எனவே பெரும்பாலான மக்களின் சிகை அலங்காரங்கள் இந்த நேரத்தில் எப்படி இருக்கும்? Pசநணெடயரநச டீநசப பெர்லின் மாவட்டத்தில் உள்ள ஹார்ம்ஸ் சிகையலங்கார நிலையத்தின் இணை உரிமையாளர் ரெனோ ஹார்ம்ஸிடம் கேட்டபோது அவர் அளித்தபதில் ஊடகங்களில் வந்துள்ளது.
“மிகவும் வேடிக்கையானது, ஏராளமான மக்கள் தங்கள் தலைமுடியை தாமே வெட்டிக் கொண்டுள்ளனர். வேறுசிலர் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் வெட்டி விளையாடியும் உள்ளனர்.வேறும் சிலர் அதைத் தாங்களே வண்ணமயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் இன்று பெரும்பாலும் தலைமுடிவெட்டவில்லை. அவர்கள் பிழையாக தாறுமாறக வெட்டியமுடியை பழுதுபார்க்கும் பணிகளைச் செய்கிறோம்” என்று அவர் சொல்லிச்சிரித்தார்.

ஆறு வார டழஉமனழறn மூடலின் போது, ​​அவரது வழக்கமான வாடிக்கையாளர்கள் பின்னர் மீட்டெடுக்க வவுச்சர்களை வாங்கினர், இது அவரது வணிகத்தை மிதக்க வைக்க உதவியது. ஆனால் ரெனோ இன்று பெரும்பாலும் இலவசமாக வேலை செய்து வருகிறது என்பதும் இதன் பொருள்.

இன்று அறிவிக்கப்பட்ட புதிய விதிமுறைளைக் கடைப்பிடித்தால் அவர் வழக்கமான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் பாதி மட்டுமே எடுக்க முடியும். எல்லா வாடிக்கையாளர்களிடையே கிருமி நீக்கம் செய்ய வேண்டும், மேலும் கடுமையான சமூக விலகல் விதிகள் உள்ளன. முடி அலங்காரம் செய்யவேண்டியவர் தனது விருப்பை முடிவெட்டுபவருக்கு முகத்திற்கு நேரே சொல்லப்படாது. கண்ணாடியைப் பார்த்தபடி கதைக்கவேண்டும. அவர் கண்ணாடியில் உங்களை அவதானித்து பரிந்துகொள்வார்.
சிகைஅலங்கார நிலையங்களில் ஒரே நேரத்தில் மக்கள் கூடுவதைத்தவிர்ப்பதற்கு முன்கூட்டியே நீங்கள் நேரம் ஒதுக்கிச்செல்லவேண்டும். இதற்கான காத்திருப்பை பார்த்தால் அது கொரோனோ பயத்தைவிடப்பெரியது என்கிறார் வாடிக்கையாளர்கள்.
ஜெர்மனியின் சிகை அலங்கார புதிய விதிமுறைகள்:
வரவேற்பறையில் வாடிக்கையாளர்கள் பலர் காத்திருப்பதைத் தவிர்ப்பதற்காக பதிவுசெய்தவர்கள்மட்டுமே (Appointment only) முடி வெட்டுவதற்கு அனுமதிக்கப்படுவர்.
வாடிக்கையாளர்கள் மற்றும் சிகையலங்கார நிபுணர்கள் (Haircut) ஹேர்கட் நடைபெறும் போது தவிர 1.5 மீ தூரத்தை வைத்திருக்க வேண்டும்
வாடிக்கையாளர்கள் மற்றும் சிகையலங்கார நிபுணர்கள் முகமூடி அணிய வேண்டும்
“நேரடி தொடர்பு” அனுமதிக்கப்படவில்லை – ஹேர் ஸ்டைல், கலர் போன்றவற்றைப் பற்றிய விவாதம் ஒரு கண்ணாடி வழியாகச் செய்யப்பட வேண்டும், குறைந்தபட்சம் கதிரைகள் தூரம் வைக்கப்பட வேண்டும்
புதிய காற்று புழக்கத்தில் இருக்க வேண்டும், இது ஒரு சிகையலங்கார நிபுணருக்கு 100m3/h per மணி இருக்க வேண்டும் என்று விதிகள் குறிப்பிடுகின்றன
கத்தரிக்கோல் மற்றும் பிற கருவிகள் பயன்பாடுகளுக்கும், சிகையலங்கார நாற்காலிகளுக்கும் இடையில் முழுமையாக கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும்
சிகையலங்கார ஆடைகளை ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு கழுவ வேண்டும், முடிந்தால், ஒரு தற்காலிக disposable ஆடை மேலே அணிய வேண்டும்
வரவேற்புரைக்குள் நுழையும்போது வாடிக்கையாளர்கள் கைகளை கழுவ வேண்டும்.
இவ்வளவும் செய்து தலைமுடிவெட்டுவதிலும் பார்க்க முடியை இறக்கிவைத்துவிட்டு மனைவியிடம் சரணடையலாம் அல்லவா:
முக்கியகுறிப்பு கொரோனோ அபாயம் முற்றக விலவில்லை. ஆனால் நாம் பயம்தெளிந்துவிட்டோம்.

2,045 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *