வெற்றுப் பெட்டியும் காசை புரட்டி அள்ளும்!
வியாபாரம் அது விசித்திரமானது. எந்த இடர் வந்தாலும் தந்திரமாக தப்பிக்கத் தெரிந்தவனுக்கும் லாபம்! மற்ற வர்கள் பாவம்!
சில பொருட்கள் விற்பனை செய்யும் போதுஇ அது எவ்வளவு தூரம் பயனற்றதாக இருந்தாலும்இ அப்பொருள் மீது ஒரு வகை போதை பாவனையாளர்களுக்கு இருந்தால்இ அதன் விற்பனையை எவராலும்இ ஏது செய்தாலும்இ தடுக்கமுடியாது. இதற்கு சிகரட் ஒரு உதாரணம்.
விருப்பம்! அது நல்லது கெட்டது பார்க்காது. தெரிந்து கொண்டே தப்பு செய்யவைப்பது!! எந்த அருவருக்கத்தக்க செயல்களையும் புரியவைப்பது இந்த விருப்பமேயாகும்.
யேர்மனியில் இருந்து சுவிஸ் நாட்டுக்கு காரில் பெருந் தெரிவில் ஓடிக்கொண்டு இருக்கின்றோம். அப்போது நாம் ஓடிக்கொண்டு இருக்கும் தெருவில் வேகக்கட்டுப்பாடு ஏதும் இல்லை. வாகன நெரிச்சலும் இல்லை. கண்மூடிக் கொண்டு பறக்கலாம்.
ஆனால் பெருந்தெருவில் நீங்கள் சுயமாக வேகக் கட்டுப்பாட்டுடன் ஓடஇ எதிரே சில அறிவிதல் பதாதைகள் கண்ணுக்கு தெரியும் படியாகவும்இ மனதைத் தொடும்படியான வாசகத்துடனும்இவைக்கப்பட்டிருக்கும்.
அதில் நீங்கள் விபத்தில் இறந்தால் உங்கள் குடும்பம் தனித்துவிடும். உங்கள் காதலி வருந்துவாள்இ என்பன போன்ற வசனங்களுடன் படங்களும் இணைத்துப் போடப்பட்டிருக்கும்.
ஆனால் நாம் அது நமக்கல்ல! என்பதுபோல் நினைத்தபடி ஆசையின் நிமித்தம் பறந்து கொண்டு இருப்போம். எனவே எமது அசை எதுவானாலும்இ அதனை கட்டுப்படுத்த எந்த வித பதாதைகளாலும் முடிவதில்லை. மனிதன் ஆசைக்கு அடிமையானவன். இதை உணர்ந்தவர்கள் வியாபரத்தில் எந்த விதமான தடைகள் வந்தாலும்இ அந்தத் தடயையே வியாபரமாக்கி பலமடங்கு இலாபத்தைப் பெற்றுவிடுவார்கள்.
புகைத்தல் உடலுக்கு தீங்குவிழைவிக்கும். இது சினிமாத் தியேட்டர் முதல் சிகரட்பெட்டி வரை இருக்கும் வாக்கியம். ஒரு பத்து வருடங்களுக்கு முன் இந்த வாக்கியம் சிகரட்பெட்டியில் மிகச் சிறு எழுத்தில் கண்ணுக்கு தெரியாதபடி ஏதோ சொல்லவேண்டியது தமது கடமை என்றவகையோடு மட்டும் சுகாதார அமச்சின் பணிப்புக்கு கட்டுப்பட்டு எழுதப்பட்டு இருந்தது.
ஆனால் இப்போ பலபடி மேலே சென்றுஇ புகைத்தல் தீங்கு விழைவிக்கும் என்ற சொல் மிகவும் பெரிதாகவும்இ புகைத்தலால் வரும் தீங்குஇ மற்றும்இ நோய் இவை படங்களாகவும்இ சிகரட் பெட்டியில் பொறிக்கப்பட்டு இருக்கும். புகைப்பதால் புற்று நோய்இ சுவாசப்பபை நோய்இ எனப் பலநோய்களும் வரும்இ என்பதனை படங்களுடன் போட்டு இருப்பார்கள். சில சிகரட்பெட்டிகளை பாரத்தாலேஇ அதில் உள்ள அழுகிய விரல்கள்இ புண்கள் என்பன சிகரட்டை தொடவிடாமல் பண்ணக்கூடிய வகையில் அமைந் திருக்கும்.
ஆனால் போதை ஆசை! அவர்களை விடாதுஇ துரத்தும். எனவே சிகரட்பெட்டியைப் பார்க்காமல் புகைப்பார்கள்.
சிலர் தடுமாறுவார்கள். இந்த தடுமாறும் பிரிவினர்கள் மீது இலக்கு வைத்த ஒரு வியாபார நிறுவனம்இ சிகரட் பெட்டி களைஇ அந்த பயங்கரமான நோய்களின் படங்கள் மறையும்படிஇ உள்ளே வைக்கக்கூடி முறையில் இன்னும் ஒரு சிகரட்பெட்டியை தயாரித்துஇ விற்பனைக்கு விட்டுள்ளது.
அது வெறும் பெட்டி. அதனுள் சிகரட் இல்லை.
அந்தப் பெட்டியினை விற்பதற்கு எந்த தடையும் இல்லை. எனவே சிகரட்பெட்டியில் இருக்கும் படம் மனதை உறுத்தாது இருக்கஇ புகைப்போர் அந்த வெற்று சிகரட் பெட்டியினை வாங்கி அதுனுள் சிகரட்பெட்டியை திணித்து விடுவார்கள்.
கவர்ச்சிப் படங்கள் பதித்த வெற்று சிகரட்பெட்டி அந்த வெற்றுப் பெட்டியில் இருக்கும் கவர்ச்சிப்படங்கள். சிகரட்பெட்டியில் இருந்த படங்களின் பயங்கரத்திற்கு எதிர்மறையாக இருக்கும்;. கவர்ச்சிப் பெண்கள்இ திறந்த மார்பகங்கள்இ மற்றும் சொக்கிளேட் துண்டுகள்இ முத்தமிடும் காதலர்கள்இ பூக்கள் என பல கவர்ச்சியான படங்கள் கொண்ட பெட்டிகளால் அந்த விகாரமான பயங்கரமான நோய்களின் படங்களை மூடிவிடுவார்கள்.
(இதனைப் படத்தில் காணலாம்.)
இங்கே வியாபரம் தந்திரமாகஇ மனிதனின் ஆசாபாசங்களை எடைபோட்டு வெற்றிநடை போடுகிறது.
ஒரு சிகரட் தயாரிப்பதற்கு தேவையான மூலதனத்தை விடஇ அற்பமான மூலதனத்துடன்இ வெறும் கவர்ச்சியான வெற்றுப் பெட்டிகள்இ காசை அள்ளிக்கொடுக்கும். வெற்றுப் பெட்டியும் காசை அள்ளிக் குவிக்கும் வித்தை தெரிந்தவன் வெல்வான்.! சுகாதாரத்தை முன்னிறுத்தி அரசு இந்த அறிவித்தல்களை பெரிதளவில் போட்டும் பயன் இல்லை.விலை கூட்டியாலும் ஒரு வாரம் இருவாரம் வியாபரம் மந்தநிலையில் இருக்கும். பின் பிச்சுக்கொண்டு சிகரட் வியாபாரம் உச்சத்தைதொடும். அரசு தெரிந்துகொண்டு சொல்வதைச் சொல்லிவிட்டேன் கேட்பதும் கேட்காததும் மக்கள் கடமை என்று எண்ணி நடக்கும்போதும். இப்படியான கவர்ச்சிப்பெட்டிகள் தந்திரமாக அவற்றை மூடிக்கொண்டு முதல் இல்லாத வியாபாரத்தில் உச்சத்தை தொடுகிறது அவ்வளவுதான்.
– மாதவி
2,133 total views, 3 views today