இவர்கள் சொன்னவை
உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே…
“இவர்கள் சொன்னவை”
ஒருவர் நேதாஜியிடம் சொன்னார், ”ஆங்கிலேயர்களுடையது சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யம்.
”நேதாஜி சொன்னார், ”உண்மை. அவர்களை இருட்டில் நடமாடவிட இறைவனுக்கே பயம். அவ்வளவு பெரிய திருடர்கள்.”
“இவர்கள் சொன்னவை”
எது அழகு?
தத்துவ ஞானி சாக்ரடீஸிடம் ஒரு முறை, ”எது அழகு?” என்று கேட்கப்பட்டது.
இந்தக் கேள்விக்கு சாக்ரடீஸ் தந்த பதில்: ”பானையில் உணவு இருக்கிறது. அதை எடுக்க உதவுவது எது?
தங்கக் கரண்டியா… மர அகப்பையா? எது பயனுள்ளதாக இருக் கிறதோ, அதுவே அழகு!”
“இவர்கள் சொன்னவை”
திருமதி. அனுராதா ரமணன் அவர்கள் எழுதியது:
” உங்கள் மனைவியிடம் இல்லாதது எதுவும் பிற பெண்களிடம் இல்லை என்பதை உணருங்கள்.”
மனைவியின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள். இல்லாததை தேடிச் சென்று வாழ்க்கையை தொலைத்துவிடாதீர்கள்.
“இவர்கள் சொன்னவை”
சாக்ரட்டீஸ் ஒரு சிறிய வீட்டில் குடியிருந்தார். நண்பர் கேட்டார், ”அய்யா,உங்களுக்கு இந்த சிறிய வீடு போதுமா?”
அதற்கு சாக்ரட்டீஸ் சொன்னார்; இவ்வளவு சிறிய வீட்டை நிரப்புவதற்கே உண்மையான நண்பர்கள் கிடைப்பார்களா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது.”
“இவர்கள் சொன்னவை”
1977-ல் ஆ.பு.சு.முதலமைச்சர் ஆன அன்று அவரது இல்லத்தில் நிறையக் கூட்டம். அப்போது மாலை போட வந்த ,கவிஞர். கா. காமராசனிடம் மக்கள் திலகம் எம்.ஜி ஆர்.சொன்னது…
தம்பி, பார்த்தாயா நான் பதவிக்கு வரவேண்டும் என்று பாடு பட்ட தொண்டர்கள் என் வீட்டிற்கு வெளியே நிற்கிறார்கள். ஆனால் தங்களுக்குப் பதவி வேண்டும் என்று கேட்க வந்தவர்கள் எல்லாம் , என் வீட்டிற்குள், எனக்குப் பக்கத்தில் நிற்கிறார்கள். இதுதான் அரசியல்..
“இவர்கள் சொன்னவை”
ஆப்ரஹாம் லிங்கனின் நண்பர் சொன்னார், ”நீங்கள் ஏன் உங்கள் பகைவர்களிடம் கூட நட்பு பாராட்டுகிறீர்கள்? நீங்கள் நினைத்தால் அவர்களை ஒழித்து விடலாமே?”
லிங்கன் சொன்னார், ”நட்பு கொள்ளும் போதே பகைவன் ஒழிந்து விடுகிறானே!
“இவர்கள் சொன்னவை”
உன் கையில் என்ன ஆயுதம் இருக்கவேண்டும் என்பதை
உன் எதிரிதான் தீர்மானிக்கிறார் .
- காரல் மார்க்ஸ்.!
“இவர்கள் சொன்னவை”
“ஒரு அலுவலகத்தில் அல்லது ஒரு தொழிலில் ஈடுபட்டபோது தவறு செய்தால் தண்டனை தருவார்கள் அல்லது எச்சரிக்கையாவது செய்வார்கள். ஆனால் சினிமாவில் ஒரு காட்சியில் சரியாக நடிக்காவிட்டால் நாற்காலியில் அமரச் செய்து பேன் போட்டு ஆப்பிள் ஜூஸ் கொடுப்பார்கள் ! “
-நடிகவேள் எம்.ஆர்.ராதா.
“இவர்கள் சொன்னவை”
எதிர்ப்புகளை எதிர்கொள்ளுங்கள்,பாறைகளை எதிர்க்கவில்லையேல் ஓடைகளுக்குச் சங்கீதமில்லை ! துயரங்களை ஜீரணித்துவிடுங்கள் , தங்கள் மீது விழும் வெயிலை ஜீரணிப்பதால்தான் மண்ணுக்கு நிழல் தருகின்றன மரங்கள் ! தோல்விகள் எல்லாம் தோல்விகள் அல்ல , தென்னங்கீற்றின் வீழ்ச்சிதான் தென்னை மரத்தின் வளர்ச்சி !
- கவிஞர் வைரமுத்து
“இவர்கள் சொன்னவை”
போலிக்கு தான் பரிசும், பாராட்டும்..
உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே…
-சார்லி சாப்ளின்….
“இவர்கள் சொன்னவை”
உதவும் கரங்கள்
ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.
- அன்னை தெரஸா.
“இவர்கள் சொன்னவை”
நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன் ஆனால் அனுபவமோ
தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது.
- பில் கேட்ஸ் —
2,647 total views, 2 views today