Second wave
முதலாவது அலையை விட இரண்டாவது
அலைக்கு ஏன் இந்த வீரியம்!
100 ஆண்டுகளுக்கு முன்னரும் இதே சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது.
மு.க.சு.சிவகுமாரன்.
ஸ்பானிஷ் காய்ச்சல் 1918 இல் சொன்ன பாடம்!
நாளைய நடப்புக்கு நேற்றைய நடப்புகளே பாடம். வாழ்கையில் நாளை நடக்க இருக்கும் இழப்புகளில் இருந்து, நம்மை பாதுகாக்க பழைய பாடங்களைத் திரும்பிப்பார்த்தல் அவசியம். இற்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்னர் (1918-1919) ஆண்டுகளில் ஸ்பானிஷ் புளு ( Spanish flu) த ஸ்பானிஷ் புளு, 1918 முதல் ஐரோப்பாவை உலுக்கியது.
ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் தொடங்கியதாக கருதப்பட்டதால் ஸ்பானிஷ் காய்ச்சல் என குறிப்பிடப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளையும் தாக்கியது. கடந்தகால வரலாற்றில் மிகக் கடுமையான தொற்று நோயாகும். பறவை வம்சாவளியைச் சேர்ந்த மரபணுக்களைக் கொண்ட எச் 1 என் 1 வைரஸால் இது ஏற்பட்டது.
வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பது குறித்து உலகளாவிய ஒருமித்த கருத்து இல்லை என்றாலும், இது 1918-1919 காலப்பகுதியில் உலகளவில் பரவியது.
United states இல் இது முதன்முதலில் 1918 வசந்த காலத்தில் இராணுவ வீரர்களில் அடையாளம் காணப்பட்டது. (ஸ்பானிஷ் காய்ச்சல் ) சுமார் 500 மில்லியன் மக்கள் அல்லது உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இறப்புகளின் எண்ணிக்கை உலகளவில் குறைந்தது 50 மில்லியனாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, அமெரிக்காவில் 675,000 பேர் மரணித்துள்ளனர்.
100 ஆண்டுகளுக்கு முன்வந்த இக்கொடிய தொற்றுநேய்க்கும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதேபோல் கொரோனா covid 19 இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் இதனைக் கட்டுப்படுத்த எடுத்த முதல் நடவடிக்கை தனிமைப்படுத்தல், சமூக இடைவெளி (1.5 மீ.யேர்மனி. இங்கிலாந்து 2.மீ) ஆகும்.
இதனையே 100 வருடங்களுக்கு முன்னரும் இன்று யேர்மனி இத்தாலி ஸ்பெயின் இங்கிலாந்து நாடுகளில், கடைப்பிடிக்கப்பட்டது போல், ஸ்பானிஷ் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தேவாலயங்கள், தியேட்டர்கள், பொதுகளியாடங்கள், உடனடியாக நிறுத்தப்பட்டன. பொது இடங்களில் துப்புதல் முற்றாகத் தடைசெய்தனர். பொதுவான போக்குவரத்து குறப்பிட்ட சில நிபந்தனைகளுடன் நடத்தப்பட்டது. முகக்கவசம் கட்டயாமாக்கப்பட்டது.
இதன் மூலம் மருந்தில்லாத இந்த தொற்று நோய்யை சிறிது கட்டுககுள் கொண்டுவந்தனர். பின்னர் இன்று ஐரோப்பாவில் தொற்று குறைந்தபோது கடைப்பிடிக்கப்பட்ட விதிமுறைகள் தளர்த்தப்பட்டதுபோல் அன்றும் தளர்த்தப்பட்டது.
1918 ஆண்டு இலையுதிர்காலத்தில் மீண்டும் 2 வது அலையாக வெடித்தது.
முடங்கிப்போய் இருந்த சமூகத்தொடர்பாடல்கள் தளர்த்தப்பட்டதால், உடனடியாக ஒன்றுகூடலும் தியேட்டர்களும் போக்குவரத்துகளும் இயங்க ஆரம்பித்தன. தேவாலயங்கள் கதவைத் திறந்தன. ஒரு முறை தொற்றுக்கு பயந்த மக்கள் மெல்ல மெல்ல அந்த பயம் நீங்கி வீறுகொண்டு உலாவந்தனர். சமூக இடைவெளி மெல்ல மெல்லக் குறைய ஆரம்பித்தது. தனிமைப்படுத்தல் மற்றும் சமூக தூரத்தைப் பற்றி மக்கள் மிகவும் மோசமாக உணர்ந்தனர்.
வைரஸ்சோ நான் ஒழியவில்லை. நீங்கள் ஒழிந்து இருந்துவிட்டு வெளியில் வந்து வலிய மாட்டிக்கொள்கிறீர்கள் என அது முதல் முறையை விட 2 வது தடவை வீறுகொண்டு தாக்கியது.
இரண்டாம் நிலை பாக்டீரியா தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க (Vaccine) நுண்ணுயிர் எதிர்ப்பிகள் இல்லாததால், அன்று ஸ்பானிஷ் காய்ச்சல் உலகளாவிய கட்டுப்பாட்டு முயற்சிகள் தோல்விகண்டன. 5 வயதுக்கு குறைவானவர்கள், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் இறப்பு அதிகமாக இருந்தது. 20-40 வயதுடையவர்கள் உட்பட ஆரோக்கியமான மக்களில் அதிக இறப்பு இந்த தொற்றுநோயின் ஒரு தனித்துவமான அம்சமாகும். உலகளவில் குறைந்தது 50 மில்லியனாக உயர்வடைய இந்த 2 ஆம் சுற்று வந்த தொற்றுநோய் காரணமாகியது. உலக அளவில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் இத்தொற்றுக்குள்ளானார்கள். இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. அங்கும் 1918 இல் இந்த சமூக இடைவெளி பின்பற்றினார்கள். அதற்கான ஆதரமாக அவர்கள் போட்ட இரு வட்டங்களை இங்கு காணலாம்.
இன்று covid 19 மறைய குறைந்தது இன்னும் 2 வருடங்கள் ஆகும் என உலக சுகாதார மையம் எச்சரிகை விடுத்துள்ளது. ஒவ்வொரு தனிமனிதரும் எழுதாத சட்டமாக இந்த சமூக இடைவெளியைப் பேணுதல் அவசியம். எப்படி இந்த covid 19 ஒரு அளவு கட்டுக்கு கொண்டுவர முடிந்ததோ அதற்கு நமது அர்பணிப்பான செயற்பாடுகள் இன்னும் தொடர வேண்டும். ஆண்டவன் அறிவைத்தந்துள்ளான். அந்த அறிவை உணர்ந்து நடப்போம். நாம் நலமாக இருந்தால்தான் எம்மால்; பிறரையும் நலமாக காக்கமுடியும். குறைந்த பட்சம் எங்கள் குடும்பத்தையாவது காக்கமுடியும்.
இந்த அபாயகரமான காலம் முடிந்தபின் இன்னுமொரு நெருக்கடிக்கு மனிதகுலம் முகம்கொடுக்கவேண்டும் ஒன்று உணவு, மற்றது வேலைவாய்ப்புகள். பொருளாதாரத்தை எவ்வளவு இந்த வைரஸ் தாக்கியது என்பது பின்னரே உணரமுடியும்..
துப்புதல் மரணத்தை பரப்புகிறது! போக்குவரத்து வாகனங்கள் புகையிரதம் எங்கும் இதற்கான பதாதைகள் வைக்கப்பட்டு இருந்தன.
இந்தியாவிலும் 1918 ஆம் ஆண்டு இந்த சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது. அதற்கான வட்டங்கள் தெருவில் இருந்ததை படங்கள் காட்டுகின்றன.
1918 இலையுதிர்காலத்தில், வைரஸின் “இரண்டாவது அலை” உலகத்தை வீழ்த்தியபோது, இறப்புக்கள் வியத்தகு முறையில் அதிகரித்ததைக் காட்டும் விளக்கப்படம்.
யு.எஸ். இராணுவத் தளத்திலுள்ள ஆண்கள் உப்பு நீரால் வாய்யை ஆலம்பினார்கள். வைரஸ் “தடுப்பு நடவடிக்கைகளில்” இது பரவுவதை நிறுத்துவதாக அறிவுறுத்தப்பட்டது.
முதலாம் உலகப் போரின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு வீரர்கள் வடக்கு பிரான்சில் எட்டாபில்ஸில் ஒரு சிகரெட்டை ஏற்றி வைத்தனர். 1918-1920 வரை உலகை பேரழிவிற்கு உட்படுத்திய காய்ச்சல் பாதிப்பு சர்ச்சைக்குரியது என்றாலும், இந்த பிரெஞ்சு இராணுவ முகாமில் தொற்றுநோய் தொடங்கியது இது போன்ற நிகழ்வுகளால் என்று பலர் நம்புகிறார்கள்.
1,590 total views, 2 views today