சிலைகள் உடைப்பதிலும் அகற்றுவதிலும் இலங்கையை வென்றது மேற்குலகம்!

அமெரிக்காவில் கொலம்பஸின் சிலைகள் அழிக்கப்பட்டன. இங்கிலாந்தில் பேடன்பவல் சிலை அகற்றப்பட்டது

சிலைகள் உடைத்தலும் அகற்றலும் ஈழத்தமிழர்களுக்கும் தமிழ்நாட்டவர்களுக்கும் புதியதொன்றல்ல. இலங்கையில் எப்ப எப்ப கலவரங்கள் வெடிக்குமோ அப்பப்ப முதல் தாக்கப்படுவது யாழ் ஆஸ்பத்தரி வீதியில் உள்ள ஒளவையார் சிலை, காந்தியடிகள் சிலை, மற்றும் நல்லூர் சங்கிலிய மன்னன்; சிலை, உரும்பிராய் தியாகி சிவகுமாரன் சிலை,என்று சிலவற்றைக் குறிப்பிடலாம்.

தமிழ்நாட்டில் ஒருபடி மேலாக சிலையகற்றல் சிலை உடைத்தல் என இருக்கும். அங்கும் தேர்தல் முடிவுகளின் பின் சிலையகற்றல் இடம்பெறும். தேர்தல் காலங்களில் சிலை உடைத்தல்கள் அதிகரிக்கும். அது மட்டுமன்றி சினிமா நடிகர்கள் பேச்சுவாக்கில் ஒரு தலைவரைப்பற்றி குறை சொன்னால் போதும், காலையில் பல தலைவர்களது சிலைகளில் தலையிருக்காது ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் கலைஞர் நிறுவிய கண்ணகி சிலையகற்றல் மற்றும் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் சிலைகள் அகற்றப்பட்டது மாற்றப்பட்டது.

உயிருடன் இருக்கும்போது அடிவாங்கிய சில தலைவர்கள் இறந்தபின்பும் அடிவாங்கும் கொடுமைகள் தொடரும். நாம் ஏதோ மேற்கு நாட்வர்கள் நாகரீகமானவர்கள் அவர்கள் சட்டம் ஒழுங்கு இவற்றை பெரிதும் மதிப்பவர்கள் என்று எண்ணுகிறோம். நம்புகிறோம். அவர்களும் ஆசிய நாட்வர்கள் எதிர்கொள்ளும் சாவால்களை எதிர்கொள்ளும் நேரத்தில் அவர்களும் ஆசியநாட்வர்களாகவே மாறிவிடுகிறார்கள். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என்றபோது மேற்கு நாட்டவர்கள் ஒழுங்காக இருப்பார்கள். முந்துபவர்களுக்குத்தான் என ஆசிய நாட்வர்களது நிலை வரும்போது அவர்கள் ஆசிய நாட்வர்களைவிட மோசமாக நடப்பார்கள். இதனைக் கொரோணா தீவிரமாகப் பரவுதல் ஆரம்பித் பங்குனி மாதத்தில் காணமுடிந்தது. உதாரணம்: ரொலைட்பேப்ருக்கு போட்ட போட்டியும் சண்டையும்.

தற்போது அமெரிக்காவில் மினியாபோலிஸில் போலீஸ் காவலில் இருந்த ஜார்ஜ் ஃபிலாய்ட் என்ற கறுப்பின மனிதனின் மரணம் தொடர்பாக போராட்டங்கள் தொடங்கியது. இந்தப்போராட்டங்களின் எதிர்ப்பலைகள் பல சிலைகளையும் தாக்கியது. அதனால் ஆசிய நாட்டவர்கள் போல் மேற்குலக நாடுகளிலும் சிலை அகற்றும் படலம் சிலை தகர்க்கும் படலங்கள் வேகமாக அரங்கேறியது.

இங்கிலாந்தில் பூலில் சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் ராபர்ட் பேடன்-பவல் சிலை கடந்தமாதம் (11.6.2020) அகற்றப்பட உள்ளது. “தாக்குதலுக்கான இலக்கு வைக்கப்பட்ட பட்டியலில்” இச்சிலை உள்ளது என்ற பொலிஸ் தகவல்களைத் தொடர்ந்து 12 ஆண்டுகள் பழமையான பேடன்-பவலின் சிலை அதைப் பாதுகாக்க “தற்காலிகமாக” அகற்றப்பட உள்ளது என்று போர்ன்மவுத் கிறிஸ்ட்சர்ச் மற்றும் பூல் (பிசிபி) கவுன்சில் தெரிவித்துள்ளது. சிலையை அகற்றப்படாது என ஆதரவைக் காட்ட எதிர்ப்பாளர்கள் சிலரும் குவேசைடில் கூடினர்.
1941 இல் 83 வயதில் இறந்த பேடன்-பவல் பிரச்சாரகர்களால் இனவெறி ஓரினச்சேர்க்கை மற்றும் அடோல்ஃப் ஹிட்லருக்கு ஆதரவு என்று எதிர்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
“லார்ட் பேடன்-பவல் மற்றும் பூல் உடனான சாரணர் இயக்கத்தின் தொடர்புகள் குறித்து உள்ளூர் மக்கள் பெருமிதம் கொள்கிறார்கள் என்பதையும் சிலையை தற்காலிகமாக அகற்றுவதன் மூலம் எதிர்ப்பாளர்களுக்கு நாங்கள் அடிபணிகிறோம் எனச் சிலர் நினைக்கிறார்கள் என்பதையும் நாங்கள் அறிவோம். இருப்பினும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமது என்று நாங்கள் கருதுகிறோம். வருங்கால சந்ததியினருக்கு ரசிக்கவும் மதிக்கவும் இச்சிலை தேவை. எந்தவொரு அகற்றலும் தற்காலிகமானது என்றும் அது “அச்சுறுத்தல் நிலை குறைந்தவுடன்” திருப்பித் தரப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் ஃபிலாய்டின் காவலில் இருந்தவர் மினியாபோலிஸில் அவரது மரணம் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் பொலிஸ் மிருகத்தனத்திற்கும் இன சமத்துவமின்மைக்கும் எதிராக ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுத்தது. வர்ஜீனியாவின் ரிச்மண்டில் புதன்கிழமை (03.06.2020) இரவு கூட்டமைப்புத் தலைவர் ஜெபர்சன் டேவிஸின் சிலை கவிழ்ந்தது. பாஸ்டன், மியாமி மற்றும் வர்ஜீனியாவில் உள்ள கொலம்பஸின் சிலைகள் அழிக்கப்பட்டன.
ஆர்ப்பாட்டங்களை குறிவைத்த சிலைகளுக்கு பின்னால் உள்ள கதைகள்

1861-65 அமெரிக்க உள்நாட்டுப் போரில் கறுப்பின மக்களை அடிமைகளாக வைத்திருக்க போராடிய தென் மாநிலங்களின் ஒரு குழுவான கூட்டமைப்பிற்கான நினைவுச் சின்னங்கள் இலக்கு வைக்கப்பட்டவர்களில் அடங்கும்.
ரிச்மண்டில் உள்ள நினைவுச்சின்ன அவென்யூவில் உள்ள பல கூட்டமைப்பு சிலைகள் போராட்டங்களின் போது கிராஃபிட்டியால் குறிக்கப்பட்டுள்ளன. இந்த வார தொடக்கத்தில் இத்தாலிய ஆய்வாளர் கொலம்பஸின் சிலை ஒன்றை ரிச்மண்ட் கண்டார், கீழே இறக்கி, ஒரு ஏரியில் வீசினார். காலம்பஸின் மூன்று மீட்டர் உயர (10 அடி) வெண்கல சிலை மினசோட்டாவின் செயிண்ட் பால் நகரில் கவிழ்ந்தது.

நகரத்தின் மையப்பகுதியில் ஒரு அஸ்திவாரத்தில் நிற்கும் பாஸ்டனில் உள்ள கொலம்பஸ் சிலை தலை துண்டிக்கப்பட்டது. 15 ஆம் நூற்றாண்டில், “புதிய உலகம்”, அமெரிக்காவைக் கண்டுபிடித்த பெருமைக்குரிய பள்ளி பாடப்புத்தகங்களில் பெருமை பெற்ற கொலம்பஸின் நினைவை அமெரிக்காவில் பலர் கொண்டாடுகிறார்கள். ஆனால் பூர்வீக அமெரிக்க ஆர்வலர்கள் கொலம்பஸை நீண்டகாலமாக எதிர்த்தனர், அமெரிக்காவிற்கு அவர் மேற்கொண்ட பயணங்கள் தங்கள் முன்னோர்களின் காலனித்துவம் மற்றும் இனப்படுகொலைக்கு வழிவகுத்தன என்று கூறிகிறார்கள்.

-மாதவி

1,680 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *