தொற்றுநிலை நெருக்கடியும் பணக்கவலையும்
நீண்டுகொண்டு செல்லும் தொற்றுநிலை கட்டுப்பாடுகளால், பலரும் வேலை இழந்திருக்கிறார்கள். பல வியாபாரங்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. ஆரோக்கியம் சார்ந்த கவலைக்கும் மேலாக பொருளாதார கவலையும் அதிகரித்துக்கொண்டு செல்கிறது.
பொருளாதாரத் துறையை சார்ந்த வல்லுநர்கள் மக்கள் பழக்கவழக்கங்களை வைத்து முக்கியமான 3 ஆலோசனைகளை தெரிவிக்கிறார்கள்.
- திடுதிப்பென முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
இந்த COVID-19 தொற்றுநிலை பாரதூரமானதாக இருக்கிறதென்றாலும், இதற்கு ஒரு முடிவு இருக்கத்தான் போகிறது என்கிறார் பொருளாதார உளவியலில் பேராசிரியராக இருக்கும் Dr. Brad Klontz. உங்கள் பொருளாதார நிலை சார்ந்த அச்சத்தைப் போக்க பரந்த கண்ணோட்டம் தேவை என்கிறார் முடழவெண. காலப்போக்கில் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு இருக்கும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும், அதோடு, அனாவசிய பீதி உங்கள் பொருளாதார நிலைமையை மேலும் மோசமாக்க வாய்ப்பிருக்கிறது என்றும் எச்சரிக்கிறார். முன்னோருபோதும் இப்படியான பொருளாதார நெருக்கடி ஏற்படவில்லை என்று நாங்கள் எண்ணலாம். ஆனால் பின்னோக்கி பார்த்தோமானால், நம் இப்படியான நெருக்கடிகளை காலம் காலமாக அனுபவித்து தான் வந்திருக்கிறோம் என்பது புரியும். 2008 ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது, பலரும் உலகம் முடிவுக்கு வரப்போகிறது என்பது போல் உணர்ந்தார்கள். பீதியால் பல தற்கொலைகள் கூட நிகழ்ந்தன. ஆனால் அந்த நெருக்கடிக்குள் இருந்து மீண்டு வந்தவர்கள் பலர். ஆரோக்கியம் சார்ந்த கவலையோடு பணக்கவலையும் சேர்ந்துகொண்டால், அச்சம் இரட்டிப்பாகிவிடும். அந்த பீதியோடு நாம் போடும் மனக்கணக்கு ஒரு அபாயமான பாதைக்குள் எம்மை தள்ளிவிடும் என்கிறார் முடழவெண. ஊயவயளவசழிhiஉ வாiமெiபெ, அதாவது பேரழிவுச் சிந்தனை, எம்மை பாரதூரமான முடிவுகளுக்கு தள்ளிவிடும். சிலர் பங்குச்சந்தையில் தம் பங்கினை எல்லாம் அவசரமாக விற்பதில் இறங்கிவிடுவார்கள். இதே சிந்தனை தான் இன்னொருவரை ஒரு வருடத்திற்கு தேவையான toilet paper இனை வேண்டி அடுக்கத் தூண்டுவது. லண்டன் business school பேராசிரியர் Dr. Alex Edmans இதே கருத்தை முன்வைக்கிறார். எங்கள் உணர்வுக் குழப்பங்கள் எம் பொருளாதார நிலைமையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்கிறார்.
பொதுவாகவே, பொருளாதார உலகத்தில், நேர்மறையான நிகழ்வுகளை விடவும், எதிர்மறையான நிகழ்வுகளுக்கு நாம் அதிக முக்கியம் கொடுக்கிறோம், என்கிறார் நுனஅயளெ. தன் ஆய்வுக்கட்டுரை ஒன்றை மேற்கோள் காட்டி அவர் சொல்லும் ஒரு உதாரணம் என்னவென்றால், ஒரு நாட்டின் கால்பந்தாட்ட அணி உலக கோப்பைக்கான ஆட்டத்தில் தோற்ற பொழுது, அவர்கள் பங்குச்சந்தை அடுத்த நாளே பெரும் வீழ்ச்சி கண்டது. ஆனால் ஒரு அணி வெற்றி பெற்ற பொழுது, எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கவில்லை. அணியின் வெற்றியினால் பங்குச்சந்தையில் ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. ஆகவே, உங்கள் உணர்வுகள் உங்களை பிழையான முடிவுகளுக்கு இட்டுச்செல்வதை நீங்கள் தவிர்க்க வேண்டும். அதீதமான செய்தி நுகர்வை தவிர்த்தல், அவசர கதியில் முடிவுகள் எடுத்தலை தவிர்த்தல் முக்கியம். நம்பிக்கையான தகவல் தளங்களை வாசியுங்கள். புதிய வழிகளில் பணம் கொண்டுவர எத்தனிக்கலாம். அத்தியாவசியமற்ற செலவுகளை குறைக்கலாம். உங்கள் வரவு செலவுகளை மீளாய்வு செய்ய இந்த காலகட்டத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.
- சாத்தியப்படக்கூடிய மிக மோசமான ஒரு பொருளாதார நிலையை கற்பனை செய்து பாருங்கள். அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில், நீங்கள் என்ன செய்யலாம் என திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
இந்த COVID-19 க்கு முன்பே பணம் பலருக்கும் ஒரு மன உளைச்சலை தரும் விடயமாகத்தான் இருந்திருக்கிறது. ஏனென்றால், ஒரு பண நெருக்கடி வரும் போது, அது எம்மை உச்சக்கட்ட நிலைக்கு தயாராக்கிவிடும். இதனை உளவியலில், fight-or-flight response மூலமாக விளக்கலாம். அதாவது, எம் முன்னோர்கள், வேட்டையாடி வாழ்ந்த காலம் ஒன்று இருந்தது. அப்பொழுது, காட்டுக்குள் போனால், ஒரு சிங்கத்தை கண்டால், உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்ள, ஒன்று நீங்கள் தப்பி ஓட வேண்டும் அல்லது நின்று சண்டையிட வேண்டும். அதற்கு உங்கள் உடலையும் மனதையும் தயாராக்க, உங்கள் இதயம் படபடவென அடிக்கும். அது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து உங்களை சுறுசுறுப்பாக்கும். தசைகள் இறுகும். உடல் வியர்க்கும். நீங்கள் சிங்கத்தோடு சண்டையிடவோ, அல்லது தப்பி ஓடவோ இந்த தயார் நிலை முக்கியம். இது இயல்பாகவே எம்மை நாம் காப்பாற்றிக்கொள்ள உதவுகிறது.
இப்படி சிங்கத்தை பார்த்து பீதி கொள்வது போல், பண கஷ்டம் வரும்போதும் எம் உடலும் மனமும் தயார் நிலைக்கு செல்கிறது. சில பணச்சிக்கல்கள் உயிராபத்தான நிலைக்கு எம்மை இட்டுச்செல்லலாம். அப்படியான சந்தர்ப்பங்கள் எம்மில் அந்த fight-or-flight response இனை தூண்டுவது நியாயமானதே. ஆனால், இந்த ஒரு மனிதரோடு கூடப்பிறந்த இயல்புநிலை, பணச்சிக்கல் வரும்போது, வாழ்வா சாவா என்ற மனநிலைக்கு எம்மை தள்ளி, அவசர முடிவுகளை எடுக்க தூண்டிவிடுகிறது.
உங்களை ஒரு சிங்கம் துரத்துகிறதென்றால் அந்த மனித-மிருக உள்ளுணர்வு மிக முக்கியம். ஆனால், பல சந்தர்ப்பங்களில், சிக்கலான பணம் சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கு இந்த உள்ளுணர்வு ஒரு பிரச்சனையாகி விடுகிறது என்கிறார் Klontz. உணர்வுகள் எல்லைமீறும் போது, மனம் விவேகமாக சிந்திப்பதை மறந்துவிடுகிறது. இந்த உணர்வுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர என்ன செய்யலாம்? எதிர்காலம் பற்றிய பயங்களை தவிர்க்காமல், நீங்கள் கற்பனையில் அப்படியான சந்தர்ப்பங்களை எப்படி அணுகுவீர்கள் என்று திட்டமிட்டு பார்க்கலாம். உதாரணமாக, வேலையை இழந்தால் என்ன செய்யலாம்? வீட்டு அழசவபயபந இனை கட்ட முடியாமல் போனால், என்ன செய்யலாம்? சில தீர்வுகளை ஆராய்ந்து பார்ப்பது, உங்கள் நிகழ்கால நிம்மதிக்கு உதவியாக இருக்கும்.
- மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் ஒரு புதிய கண்ணோட்டத்தை பெறுங்கள்
தற்பொழுது பொருளாதார நிலை மோசமாக இருந்தாலும், நாளடைவில் அது பழைய நிலைக்கு திரும்பும் என்பது நிபுணர்கள் நம்பிக்கை. அதே வேளை, பணக்கவலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது எங்கள் உடல் மற்றும் உள ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. சமூகத்தில் சிறு சிறு உதவிகளை செய்வதும் உங்கள் தயாள குணத்தை நடைமுறைப்படுத்துவதும், உங்களுக்குள் ஒரு மன நிறைவையும், பணக் கவலை சார்ந்த ஒரு புதிய கண்ணோட்டத்தையும் கொடுக்கும். கொடுக்கல் வாங்கலில் நாம் எப்பொழுதும் சரிக்கு சரி இருக்கவேண்டும் என எதிர்பார்ப்போம். ஆனால், மற்றவர்களுக்கு நீங்கள் செய்யும் சிறு சிறு உதவிகள் கூட பெரிய அளவிலான மாற்றங்களை கொண்டுவரும் என்பது தான் உண்மை. Food bank இற்கு நன்கொடை வழங்குவதாக இருக்கட்டும், அல்லது வயது முதிர்ந்த ஒரு அயலவருக்கு பலசரக்கு வேண்டிக்கொடுப்பதாக இருக்கட்டும், “சிறு துளி பெரு வெள்ளம்” ஆகும்.
இந்த தொற்றுநிலை பலரையும் பல்வேறு விதத்தில் பாதித்துக்கொண்டிருக்கிறது. எல்லோருக்கும் பொதுவான ஒரு நெருக்கடியாக இருக்கிறது. எப்படி இன்னொருவருக்கு நாம் உதவ முடியும் என்று நாம் சிந்திக்கவேண்டிய ஒரு காலமாக இது இருக்கிறது.
இந்த பேராசிரியர்கள் மனித மனங்களின் பேராற்றலை பற்றி சொல்கிறார்கள். தற்போதைய நெருக்கடி நிலை அச்சத்தை கொடுத்தாலும், அமைதி கொள்ளுங்கள். மனிதர்களால் எந்த ஒரு இடரில் இருந்தும் மீண்டு வரக்கூடிய வலிமை இருக்கிறது என்கிறார்கள். மனிதர்களுக்கு இருக்கும் ஒரு அற்புத சக்தி இது – தாக்கப்படுகிறோம். நொருங்கிப்போகிறோம். பின் மீள எழுகிறோம். ஒரு புதிய யதார்த்தத்துக்கு இசைவாக்கப்படுத்தி கொள்கிறோம். இது நிச்சயம் நடக்கத்தான் போகிறது என்கிறார் Klontz. அதுவே பின் எங்கள் புதிய இயல்பு நிலை என ஆகிவிடும்.
— Dr.Pushpa.kanagaratnam
1,876 total views, 2 views today