யேர்மனியில் மிகப்பெரிய விண்கல்! முகவரி விரைவில் தெரியவரும்!
இந்த உலகத்திற்கு வெளியே ஒரு விண் கல் கண்டுபிடிப்பு. ஒரு தோட்டத்தைத் தோண்டப்பட்டபொழுது பல தசாப்தங்களாக உறங்கிக்கிடந்த விண்கல் ஒன்று முதன்முதலில் (1989 இல் ) கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டு தோட்ட உரிமையாளர் அந்த அசாதாரண பாறையை, ஆராய்ச்சியாளர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன்பு வரை, அது வெறும் கல்லாகவே கருதப்பட்டது.
யேர்மனியில் தரையிறங்கிய மிகப்பெரிய விண்கல் இது எனக்கண்டுபிடிக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் (16.07.2020) புதன்கிழமை அறிவித்தனர்.
யேர்;மனி விண்வெளி மையத்தின் (டி.எல்.ஆர்) அறிக்கையின்படி, இந்த விண்கல் யேர்மனி தென்மேற்கு நகரமான (Blaubeuren) இல் ஒரு வீட்டுத் தோட்டத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது.
“இந்த கண்டுபிடிப்பு 30.26 கிலோகிராம் 66.7 பவுண்டுகள் கொண்டது, இது யேர்;மனியில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய விண்கல் ஆகும்” என்று விண்கல் நிபுணர் டைட்டர் ஹெய்ன்லின் கூறினார்.
Blaubeuren நகரினில் வசிக்கும் அவரது தோட்டத்தில் அசைக்க முடியாத, ஆனால் அசாதாரணமான பாறை தோண்டப்பட்டது. பாறையைத் தோண்டும்போது, அக்கற்பாறை நம்பமுடியாத அளவிற்கு கனமானது என்பதைக் கவனித்தார், மேலும் அதனில் (high iron content) இரும்புச் செறிவு கூடியதாக இருந்ததைக்கவனித்தார்.
ஆனால் அதற்கு மேல் எதுவும் செய்யவில்லை. பின்னர் விண்கல் கவனிக்கப்படாமல் தோட்டத்தில் பல தசாப்தங்களாக அங்கேயே இருந்தது.
“ஒரு தொழில்முறை நிபுணர் இக்கல்லை அன்று கண்டிருந்தால்கூட இது ஒரு விண்கல் என்று யூகித்திருக்க மாட்டார்” என்று டி.எல்.ஆர் ஒரு அறிக்கையில் கூறினார்.
2015 ஆம் ஆண்டில், வீட்டு உரிமையாளர் விண்கற்களை மற்ற தோட்டக் கழிவுகளுடன் தூக்கி எறிந்தார், ஆனால் கடைசி நொடியில் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டார். இந்த ஆண்டு 2020 ஜனவரியில் டி.எல்.ஆரைத் தொடர்புகொளும் வரை அவர் அக்கல்லை பல ஆண்டுகளாக ஒரு இடத்தில் கவனமாகவைத்திருந்தார்.
மூன்று ஆய்வகங்களில் நடந்த சோதனைகளின் பின்னர்,தோட்டப் பாறை உண்மையில் ஒரு விண்கல் என்பதை உறுதிப்படுத்தியது. விஞ்ஞானிகள் இப்போது பூமியில் எப்போது அக்கல் விழுந்திருக்கும் என்பதைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இக்கல் கண்டுபிடிப்பதற்கு முன்வரை, “பெந்துல்லன்” என்று அழைக்கப்படும் ஒரு விண்கல் யேர்மனியில் 17.25 கிலோகிராம் (38 பவுண்டுகள்- pounds) எடையுள்ளதாக ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட விண்கல் அந்த நகரத்தின் பெயரால் Blaubeuren”ப்ளூபூரன்” என்று அழைக்கப்படுகிறது. விரைவில் எங்கிருந்து வந்தது என அக்கல்லின் முகவரி அறியவரும்.
— சிவப்பிரியன்
1,433 total views, 3 views today