தொல்லியல் ஆய்வுகளின் வலிமை.
— கிரி நாகா – கனடா
உண்மை தேடி உயிராகும் உலகவலம்
தொல்லியல் ஆய்வுகளின் வலிமை.
சங்ககால பண்பாட்டு ஆய்வுகள், வரலாற்று திருப்புமுனை செய்யக்கூடிய பகுப்பாய்வு ஆராய்ச்சி ஆவணங்கள் சான்றுகள் மூலம்,மனிதகுலத்தின் தோற்ற அறிவை வலுவாக்கும்முயற்சிகள் தேடப்பட வேண்டியவை. கிமு 6ம் நூற்றாண்டு முன்னரே தமிழ்சமுதாயம் எழுத்தறிவு பெற்ற சமுதாயமாக விளங்கியது என்பதற்கு சிந்துவெளி தமிழ் பிராமி எழுத்துகள் ஆதாரமாக உள்ளன. சங்ககாலத்தின் கால நிர்ணயத்தை பிரமி எழுத்துக்கள் பிரமூட்டும் வகையில் புடம்போட்டு காட்டுகிறது. உலகின் தொன்மையான நாகரிகம் என ஐரோப்பிய உலகம் கருதும் கிரேக்க சமூகத்துடன் குறிப்பாக ரோம் நகருடன் தமிழ் நாகரிகம் கொண்டிருந்த தொடர்பை பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆயினும் மனிதகுல எழுத்தறிவு, எழுதிவைத்த வரலாற்றை சீரமைக்க சிந்திக்க விரைகிறது. உண்மைகளை தோண்டியெடுத்து மனித குலத்தின் சிந்தனையை தூண்டிவிட்டுஆவண சேர்ப்புடன் அடுத்த கட்ட தேடலை நோக்கி நகர்கிறது. தொல்லியல் ஆய்வுகள். நாம் இதுதான் வரலாறு என்று நம்பும் ஒன்றை புதிய கண்டுபிடிப்புகள் மறுபரிசீலனை செய்ய வைத்துவிடும். எழுதிவைத்த வரலாற்றை எதிர்பார்க்காத காலத்தை நோக்கி நகர்த்திவிடும். சிலநேரம் நாம் இதுதான் வரலாறு என்று நம்பிக்கொண்டிருக்கும் ஒன்றை புரட்டி போட்டுவிடும். அகழ்வாராச்சி, தொல்லியல்துறை, போன்றவற்றால் கீழடி தமிழர்களிடம் ஆழமாகப் பதிந்துள்ள ஒரு இடமாக உள்ளது. உலகத் தமிழர்களால் இவ்இடம் அதிகளவு பேசப்பட்டு வருகிறது. கீழடி வைகை நதி அண்மித்து, சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட மதுரையில் இருந்து தென்கிழக்காக 14 மஅ தூரத்தில் அமைந்துள்ளது.
இந்திய தொல்லியல்துறை, தமிழக தொல்லியல்துறை ஆகியவையால் கீழடி அகழாய்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் இலக்கியத்தின் முகவரி தேடுவோர்க்கு, வைகை நதி பரவும், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம்,தேனீ,திண்டுக்கல் என 5 மாவட்டங்கள் ஊடாக கடலில் கலக்கும் அழகர்குளம் வரை ஆய்வுகள் நடைபெறுகின்றன.
2013 இல் தொல்லியல் துறைஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணர், மற்றும் 2 உதவி தொல்லிய லாளார்கள்,6ஆய்வு மாணவர்கள் கொண்ட ஒரு சிறிய ஆய்வு குழு மிகபெரிய அளவில் அகழ்வாராய்ச்சியின் அறிக்கை முறைமைக்கு வழிவகுத்தது.
வைகை சார்ந்த அகழாய்வின் தேடுதல்கள் தமிழ் நாகரிகத்தை கொண்டாடப்படும் ஒன்றாக அமைந்துள்ளது.
கட்டுமானம்
நெசவுத்துறை
உலோக பயன்பாடு
தங்க அணிகலன்கள்
செப்பு பொருட்கள்
இரும்பு கருவிகள்
செங்கல் கட்டுமானங்கள்
சுடுமண் உறை கிணறுகள்
மழைநீர்வடி கூரை ஓடுகள்
கண்ணாடி
தூதுபவளம்
சுடுமண் காதணிகள்
கறுப்பு சிவப்பு மண்பாண்டங்கள்
போன்ற ஆதார ஆவணங்கள், தமிழ் சமுதாயம், பொழுதுபோக்கு பாண்டி தாயம் போன்ற விளையாட்டுகளும், ஆபரண அலங்கார செல்வ செழிப்பும் கொண்ட மகிழ்ச்சியான வாழ்கை முறையை கொண்டிருந்ததை வெளிப்படுத்துகின்றது,
இதுபோன்ற ஆய்வுகளும், உலகின் மற்றைய சமுதாயங்களின் ஆவணங்களும், பலசமுதாயங்கள் எப்படி தொடர்புபட்டு மனிதகுலத்தின் ஒற்றுமை மேம்பாட்டை மெருகூட்டின என்பதை ஆய்வதில் மனிதகுலம் மேம்படும். மகிழ்ச்சியாய் வாழும் வழிவகைகளை தேடும். தமிழினம் தொன்மையான நாகரீகம் கொண்ட இனம் என்பதனை கீழடி ஆய்வுகள் சொல்வது தமிழர் என்பதற்காக மட்டும் மகிழவில்லை. கி.மு.6ம் நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்த மனிதகுலத்தின் பேராற்றல் ஆச்சரியப்படத்தக்கது. அந்த ஆச்சரியத்தின் ஊற்றில் பிறந்த மகிழ்ச்சியே நமது என்பது உண்மை.
1,929 total views, 6 views today