யேர்மனியில் கொரோனாவையும் ஓரங்கட்டும் வேறு சில நோய்களும், மக்களின் போக்குகளும்!
இன்றைய வாழ்வியல் சூழல் மாறுபட்டுவிட்டது. எதிலும் அவசரம், பணம் சம்பாதிக்கும் முழுநோக்கம், கணனி உலகமாகியதால் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் இழந்துவருகின்றோம். இதனால் கட்டுக்கடங்காத அவசர உணவுகள், சீனிச்சத்து நிறைந்த குடிபானங்கள், தண்ணீர் குடிப்பதைக் குறைத்தல்,கொழுப்பு, புரத உணவுககளை அதிகமாகக் பாவித்தல் உடற்பயிற்சி, நடைப்பயிற்றி, கடும் உழைப்பு இல்லாமை போன்ற காரணங்களால் உலக நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தே வருகின்றன.
குறிப்பாக இதயநோய்கள், நீரழிவு, இரத்த அழுத்தம், மனஅழுத்தம் போன்ற வியாதிகள் இன்று உலகம் முழுவதும் அதிகரித்து வருவதை நாம் அறியும் வேளையில்.. இவற்றிலிருந்து விடுபடப் பல சுகாதார வழிமுறைகளைக் கையாள வேண்டும். தவறும் பட்சத்தில் பல நோய்களையும் அனுபவித்து விரைவாகவே இறப்பைத் தழுவிவிடுவோம் என்பதைப் புரிந்துகொள்வோம். யேர்மனியில் நாம் காணும் சில விடையங்கள் இதில் குறிப்பிடப்படுகின்றது. இவற்றையும் அறிந்துகொள்ளுங்கள்
1-யேர்மனியில் 14 வயதுக்கு உட்பட்டவர்களில் 1.06 சிறுவர்கள் தினமும் நாரிப்பிடிப்புக்கான மருந்துகளைப் பாவிக்கிறார்கள் என சுகாதாரப்பகுதி புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.
2-யேர்மனியிலுள்ள மக்கள் தொகையில் 43 வீதம் பேர் பொதுவானநோவு, முதுகுவலி போன்ற நோய்களுக்கு மருந்து பாவிக்கிறார்கள்.
3-யேர்மனியில் பல வகையான தொற்றுநோய்களுக்கு தடுப்பூசி போடுவது சரி என்று 41 வீதமான மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
4-யேர்மனியில் பல வகையான கிருமி தொற்று நோய்களுக்குத் தடுப்பூசிகள் பாவிப்பதால் புற்றுநோய் வரலாம் எனப் பலர் அச்சம் கொள்கிறார்கள். ஆனால் 70 வீதமான மக்கள் தடுப்பூசிகள் முக்கியமில்லை என்றும் கருதுகிறார்கள்.
5-யேர்மனியில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள நோயாளிகளில் சுமார் 80.000 பேர் நாளாந்தம் சிறுநீரகம் சுத்திகரிக்கும் மெசினைப் பாவிக்கிறார்கள் என சுகாதாரப் பகுதி அறிவித்துள்ளது.
6-யேர்மனியில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் 25 வீதம்பெருக்குத் தோள்ப்பட்டை வருத்தம் இருந்து வருகின்றதாம். இதனால் வருடாவருடம் சுமார் 25.000 பெருக்குத் தோள்பட்டைகளில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு கம்பிகள் பொருத்தப்படுவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
7-கொரோனா கோவிட் -19 தொற்றுக்குப்பின்பு தடுப்பூசிகள் போடுவதில் யேர்மனியிலுள்ள மக்களில் 27 வீதம்பேர் தேவையில்லை என்றும் 57 வீதம்பேர் தேவை என்றும் கருத்துக் கணிப்பு கூறியுள்ளது.
8-யேர்மனியில் அதிகமான மக்கள் இனிப்பு, பால், பாலுற்பத்திப் பொருட்களை உண்பதில் ஆர்வமுடையவர்கள். ஆனால் 15 வீதமான மக்களுக்கு இந்தப் உணவுவகைகள் ஒத்துவராததால் இவ் உணவுகளையும் பாலையும் குடிப்பதில்லையாம்.
9-மனிதருக்கு உணவு, தண்ணீர், உழைப்பு, ஓய்வு எவ்வளவு அவசியமோ அதே அளவு தூக்கமும் அவசியமானதாகும். இது குறைந்தாலும் கூடுவதாலும் பலருக்குப் பல நோய்களும் வந்து சேருகின்றன. யேர்மனியிலுள்ள மாகாணங்களில் முதல் 10 இடங்களைப் பிடிக்கும் மக்களில் குறைந்த தூக்கத்தை மேற்கொள்வோரைப் பார்ப்போம்.
Saarland -30%, Bayern -26%, Rheinland Pfalz-25%, Nordrhein Westfalen-24%,Berlin-23%,Bremen-22%,Brabdenburg-21%,BadenWürtenberg-20%
10-யேர்மனியில் ஏற்பட்ட கொரோனா தொற்று நோய்க்கு இறைச்சித்தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களாலும் ஏற்பட்டதாகக் கண்டு பிடிக்கப்பட்டது. இது இப்படி இருக்க யேர்மனியில் மிகக்கூடுதலான இறைச்சி வகைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களையும் இதனால் ஏற்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கைகளையும் பார்ப்போம்..
நிறுவனங்களின்பெயர்-அமைந்துள்ளஇடம்-எற்பத்தி ஏற்றுமதி -கொரோனா தொற்றாளர்கள்
1-Tönnies – Rheda-Wiederbrükck – 30.3% – 1.550 NgH
2-Westfleisch – Münster – 14.0% – 371 „
3-Vion – Hilden – 13.8% – 160 „
4-Danish Crown – Essen/Oldenburg – 06.0% – 00
5-Müller-Gruppe – Birkenfeld – 03.8% – 420 „
11-யேர்மனியிலுள்ள அதிகமான மக்கள் கோப்பி குடிக்கும் பழக்கமுடையவர்கள். யேர்மனியர் ஒருவர் ஒரு வருடத்தில் சராசரியாக 164 லீட்டர் கோப்பி குடிக்கிறார்கள் என அரச வர்த்தக புள்ளிவிபரம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
–வ.சிவராஜா
1,629 total views, 6 views today