உயிரே உயிரோவியமாகின்றது
ஓவியக்கலை மனித இனத்தின் பிறப்புடன் ஆரம்பமான ஒரு கலை. இன்று ஆதிமனிதனின் குணாதிசயங்களை அறிய, அவன் பதிவுசெய்த ஓவியமே உதவுகின்றது. இன்று கணனிபோல் அன்று உலகின் வரலாற்றை பதிவு செய்துவைத்த பெருமை இந்த ஓவியத்திற்கு உண்டு.
இன்று வராலற்றுப்பதிவுகளை ஒளிப்படம் தனதாக்கிக் கொண்டு விட்டதால் ஓவியம் அப்பணியில் இருந்து சற்று மாறியுள்ளது. ஒரு கலைஞனின் ஓய்வும், ஒரு கலையின் ஓய்வும் மற்றொரு பாச்சலுக்கான பதுங்கலாகவே கொள்ளவேண்டும். கால ஓட்டத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளாதவன் விரைவில் அழிந்துபோவான். அது மனிதனுக்கு மட்டுமல்ல கலைக்கும் பொருந்தும். சினிமாவாக இருக்கலாம். இசையாக இருக்கலாம். காலத்தை உள்வாங்கியபடியால்தான் இன்றும் நிலைத்து உள்ளது. பழமையை மறத்தலோ அழித்தலே என்று பொருள் அல்ல. புதுமையை உள்வாங்கல் என்பதே உண்மை.
உயிரோவியம் என்று முன்னர் ஒரு ஓவியத்தைக் குறிப்பிட்டால், அந்த ஓவியம் மூச்சுவிடும். எழுந்து நடக்கும். தனிமையில் எம்மோடு ஆயிரம் கதைபேசும். அத்தனை தத்துரூபமாக ஓவியம் இருக்கும். இன்றும் லியனோ டாவின்சி வரைந்த மொனலிசாவின் புன்னகையை அறிய ஆய்வுகள் ஆண்டுக்கணக்காக இடம் பெற்றுவருகின்றன. புன்னகையின் அர்த்தம் வருடம் ஒன்றுக்கு ஆயிரமாகிக்கொண்டே செல்கின்றது. எந்த மனோதத்துவ நிபுனராலும் ஒரு குறித்த அர்த்தத்தை சொல்ல முடியவில்லை. அன்று லியனோ டாவின்சி வரைந்த மோனலிசா Mona Lisa உயிர் ஓவியம்.(1507-1517) இன்று ஓவியம் ஓவியம் தீட்டுகிற காலம் எனலாம்.
அழியும் உடலில் அழியத ஓவியங்களை அன்று தொட்டு இன்றுவரை தீட்டிவருகின்றனர். அந்த ஓவியம் வேறு. இப்போ நீங்கள் இங்கு படத்தில் காணும் ஓவியம் வேறு.
முன்பு ஓவியம் கலைஞனால் உயிரோவியமானது.
இப்போ உயிர் ஒன்று ஓவியமாகிறது.
முன்பு ஓவியத்தை உயிர்பெறவைக்க வர்ணங்களையும், கோடுகளையும் பாவித்து அந்த வர்ணகளுக்கு இடையில் உயிரைச் சிறப்பிடித்து வெளிக்காட்டுவர்கள். இன்று உயிருக்கு வர்ணம் அடித்து, கோடுகள் இட்டு உடம்பை ஓவியமாக்கி மகிழ்கின்றனர்.
படத்தில் ஒரு பெண் ஓர் ஆணின் மேல் அமர்ந்து, அந்த ஆணை ஓவியமாக்குவதில் தன்னை மறந்து ஈடுபடுவதைக் காணலாம். முன்பு ஓவியம் உயிர்பெற உழைத்த தூரிகை, இப்போ உயிர் ஓவியமாக உழைக்கின்றது.
காலத்தின் மாற்றம் உயிர் ஓவியமாகும் காலம் ஆகிவிட்டது. இந்த ஓவியத்தை நேரே பார்ப்தைவிட அதனை ஓளிப்படம் எடுத்து அதனைப்பார்த்தால் அது அற்புதமான ஓவியமாகத் தெரியும். ஓவியரே ஓவியத்துடன் கைகொடுத்து படமும் எடுக்கமுடியும். இவை (3னு) அதாவது முப்பரிமாண ஓவியங்களாக தீட்டப்படுகின்றது.
இப்போது அதாவது இக்காலத்தில் நீங்களே ஓவியமும், ஆகலாம்,சிற்பமும் ஆகலாம்.
காலத்தின் கோலத்தில் கலை தலைகீழாக மாறி நின்றாலும். அதனையும் இரசிக்க ஆயிரம் போர் கூடாமல் இல்லை. நாம் கலைக்காக மாறுகிறோமே இல்லையோ, ஆனால் கலை நமக்காக தன்னை மாற்றிக்கொண்டு மேலே மேலே செல்கின்றது. எனவே மனிதனுக்கு அழிவுண்டு.காலத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் கலைக்கு அழிவு இல்லை.
1,648 total views, 2 views today