செயற்கைச் சூரியனை ஒளிர வைக்கும் முயற்சியில் சீன!

China’s Latest ‘Artificial Sun’ Fusion Reactor to Power On in 2020

தாங்கள் உருவாக்கிய செயற்கைச் சூரியனை ஒளிர வைக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.1999ம் ஆண்டு முதல், செயற்கைச் சூரியன் என்று அழைக்கப்படும், ‘சோதனைரீதியாக மேம்படுத்திய மீக்கடத்தி டோக்காமாக் ’ என்ற இயந்திரத்தை உருவாக்கும் பணியில் சீனா ஈடுபட்டு வருகிறது.
அணுக்கரு இணைவு மூலம் சூரிய சக்தி உருவாவதுபோல, இந்த இயந்திரத்தில் செயற்கையாக சூரியசக்தியை உருவாக்க முடியும். இதற்கான மீக்கடத்திப் பொருட்களை அமெரிக்கா தருவதாகக் கூறி பின்னர் பின்வாங்கியது. இதனையடுத்து சீன விஞ்ஞானிகளே சில ஆண்டுகால முயற்சிக்குப் பின், தரம் வாய்ந்த மீக்கடத்திப் பொருட்களை உருவாக்கி உள்ளனர். இவை அந்த இயந்திரத்தில் பொருத்தப்பட உள்ளன.2020 ம் வருட இறுதியில் சீனா செயற்கைச் சூரியனை வெற்றிகரமாக இயக்கிப்பார்த்துள்ளது.

இந்த இயந்திரம் வருகிற 2025ம் ஆண்டுக்குள் முழுமையாகத் தயாராகிவிடும் என்றும், 2050ம் ஆண்டு முதல் இதன் மூலமான சக்தி பயன்பாட்டுக்கு வரும் என்றும் எதிர்பாக்கப்படுகிறது. இதனால் செயற்கையான காலமாற்றங்களை உருவாக்கமுடியும் என்று நம்பப்படுகின்றது. இதனை இயக்க பெரும் சக்தி தேவைப்பட்டாலும் இயங்கிவிட்டால் அது பல மடங்கு சக்தியை பூமிக்கு கொடுக்கும் செயற்கைச் சூரியனாகிவிடும். இவை யாவும் முழுமை பெறும் போது சீனா உலகை ஆளும் முழுமுதற் கடவுள் போல் ஆகலாம். சீனா ஏற்கனவே செயற்கை சந்திரனையும் உருவாக்குவதில் வெற்றி கண்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

1,103 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *