எனது 2 ஆவது பக்கத்தை பார்க்க விரும்பினால் அதனையும் காட்டத் தயார்!

ஜனாதிபதி கோதபாய
பிரபாகரனை நாம் நாயை போல் நான்கு காலில் தவளவிட்டு முள்ளிவாய்க்காலில் இருந்து பிணமாக கொண்டு வந்தோம் ஜனாதிபதி கோதபாய தெரிவிப்பு
எனக்கு இரண்டு பக்கங்கள் உள்ளன ,தேவை என்றால் அந்த இரண்டாவது பக்கத்தையும் நான் காட்டத் தயார் என ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அன்று 1977 இனக்கலவரத்தின்போது அன்று ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவாதனா போர் என்றால் போர்!அமைதி என்றால் அமைதி என்று போரை ஆரம்பித்து வைத்தார்.
இன்று ஆட்சியாளர்கள் மாறினாலும் அதே குரல் ஒலிக்கிறது. இந்நிலை மாறினால் அன்றி நமது நாடு அமைதிப்பூங்காவாக ஒருநாளும் இருக்காது.
அரசாங்கத்தின் கிராமத்துடனான கலந்துரையாடல் திட்டத்தின் ஐந்தாவது கட்டம் அம்பாறை உஹன பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்றது.இந்த நிகழ்வில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே, ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸ இவாறு தெரிவித்ததுடன் மேலும் கூறுகையில்,
கடந்த நல்லாட்சி காலத்தில் எதிர்கட்சியினர் மீது மேற்கொள்ளப்பட்ட அரசியல் பழிவாங்கல்களை நாம் கண்கூடாக பார்த்தோம்.திட்டமிட்ட குழுக்கள் மூலம் எதிர்க்கட்சிகளை பழி தீர்க்கும் விடயங்கள் அரங்கேற்றப்பட்டன. அரசியலை முன்னிறுத்தி நாம் செயற்பட தயாரில்லை.
யாரேனும் தவறு செய்திருந்தால் சட்டத்தின்படி நடவடிக்கையெடுக்கப்படும். ஆனால் தேவையில்லாது அழுத்தங்களை பிரயோகித்து அரசியலை அடிப்படையாக கொண்டு செயற்படுவதற்கு நான் தயாராக இல்லை.எதிர்க்கட்சியினர் இன்னும் இதனை புரிந்துகொள்ளவில்லை. அவர்களின் மோசமான அரசியலையே செய்கின்றனர். ஹரீன் பெர்னாண்டோ எம்.பி. கதைக்கும் விதத்தை பார்த்தால் அதனை புரிந்துகொள்ள முடிகின்றது.
நான் நந்தசேன கோதாபயதான். நந்தசேன கோதாபயவுக்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. எமக்கு தேவை ஜனாதிபதி கோதாபய அல்ல முன்னர் இருந்த பாதுகாப்பு செயலாளர் கோதாபய எனவும் கொஞ்சம் கடினமாக இருக்க வேண்டும் எனவும் எமது பௌத்த தேரர்கள் என்னிடம் சில வேளைகளில் கூறுகிறார்கள்.அதனையும் என்னால் செய்ய முடியும்.அந்த முறையில் வந்தால் அதே முறையில் பதில் கொடுக்கவும் என்னால் முடியும்.
நான் பாதுகாப்பு செயலராக இருந்த போது பித்தளை சந்தியில் குண்டு வைத்து பிரபாகரன் வேலையை தொடங்கினார்.ஆனால் பிரபாகரனை நாம் நாயை போல் நான்கு காலில் தவளவிட்டு முள்ளி வாய்க்காலில் இருந்து பிணமாக கொண்டுவந்தோம்.தேவை என்றால் அந்த பக்கத்தையும் காட்ட தயார்.
எதற்கும் தயாராக இருக்கக் கூடிய கதாபாத்திரமே நான். எதிர்க்கட்சியினருக்கு அரசியல் செய்ய முடியும். ஆனால் மக்கள் எதிர்பார்க்கும் நியாயமான அரசியலை செய்ய முடியும். ஆனால் மக்களுக்கு சேவையாற்றுவற்கே எனக்கு தேவை என்றார். தமிழர் வாழ்வில் சில அறிவுப்புகள் பதிவுசெய்ப்படவேண்டும் என்பதனால் இச்செய்தி முக்கிய இடம் வகிக்கிறது. நன்றி:தினக்குரல்.
1,801 total views, 8 views today