யேர்மனியில்.கி.மு.13 இல் கட்டப்பட்ட மிக்பழமையான பாலம்.
Dr.சுபாஷினி.-யேர்மனி.
ஜெர்மனி மைன்ன்ஸ் நகரில் உள்ள ரோமானியர் காலத்து நீர் மேலாண்மை பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட ஒருவகை பாலத்தின் எஞ்சிய பகுதிகள். இது கட்டப்பட்ட ஆண்டு கிமு 13. ஏறக்குறைய இரண்டிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை இந்த பாலத்தின் எஞ்சிய பகுதிகள் வரிசையாக நிற்பதை இந்த மைன்ஸ் நகரில் காணலாம். ரோமானியப் பேரரசின் ஆட்சிக்கு கீழ் ஜெர்மனி இருந்த காலகட்டமான இன்றைக்கு ஏறக்குறைய 2000 ஆண்டுகள் காலகட்டத்தில் ரோமானிய படைவீரர்கள் கட்டிய கட்டுமானங்களில் எச்சங்களை இந்த நகரில் இன்றளவும் காண முடிகிறது. இந்த மைன்ன்ஸ் நகரம் பிராங்க்பர்ட் நகரிலிருந்து ஏறக்குறைய முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நகரம் ஆகும்.
1,487 total views, 2 views today