தமிழ்த் தேசியத் தரப்புக்களை ஒரே புள்ளியில் இணைத்த பொத்துவில் முதல் பொலிகண்டி வரை கவனயீர்ப்புப் பேரணி!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் பேரணி (Pழவவரஎடை வழ Pழடமையனெiஇ P2P) இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட வாகன மற்றும் நடைப்பயணப் போராட்டம் ஆகும். நீதிக்கான இப்பயணத்திற்கு ‘பொத்துவில் முதல் பொலிகண்டி’ செல்லும் பாதை பெயரிடப்பட்டது. இது பாரம்பரிய தமிழர் தாயகத்தின் இரண்டு தூர முனைகளையும், தெற்கே அம்பாறையில் பொத்துவில் முதல், வடக்கு முனையில் பருத்தித்துறையில், பொலிகண்டி வரையிலும் குறிக்கிறது.
இப்பேரணி கிழக்கிலங்கையின் தெற்கு முனையில் உள்ள பொத்துவில் நகரில் 2021 பெப்ரவரி 3 ஆம் நாளில் தொடங்கி வட மாகாணத்தின் வடமுனையில் அமைந்துள்ள பொலிகண்டியில் பெப்ரவரி 7 இல் நிறைவடைந்தது. வடகிழக்குத் தமிழ்-பேசும் குடிசார் சமூகங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டத்திற்கு அனைத்துத் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், மற்றும் முசுலிம் சமூகங்கள் தமது ஆதரவைத் தெரிவித்து பேரணியில் இணைந்து கொண்டன. தமிழ், முசுலிம் அரசியல் தலைவர்கள், சமயத் தலைவர்கள் உட்படப் பல்லாயிரக்கணக்கான மக்கள் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் பௌத்த மயமாக்கல், நில அபகரிப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாமை, ஈழப்போரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்களுக்குப் பதிலளிக்காமை, கோவிட்-19 பெருந்தொற்றினால் உயிரிழக்கும் இசுலாமியர்களின் உடல்கள் தகனம் செய்யப்படுதல், மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளப் பிரச்சினை அடங்கலான அரச அடக்குமுறைகள் போன்ற பல்வேறு விடயங்களுக்கு நீதி கோரியும், தீர்வு கேட்டும் இப்பேரணி ஒழுங்கு செய்யப்பட்டது. இப்பெரணியின் இறுதி நாளான ஏழாந்திகதி (07.02.2021) கிளிநொச்சியில் இருந்து ஆரம்பமான பேரணி பொலிகண்ண்டியைச் சென்றடைந்தது. போரணி நிறைவில் பத்து அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கிய எழுச்சிப்பிரகடனம் ஒன்று வெளியிடப்பட்டது.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணி, தமிழ்த் தேசியத் தரப்புக்களை ஒரே புள்ளியில் திரட்டியமை, ஜனநாயகப் போராட்டங்கள் மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியமை, முஸ்லிம் மக்களை போராட்டத்தின் பங்காளிகள் ஆக்கியமை என்று பல்வேறு முன்மாதிரிகளைக் காட்டியிருக்கின்றது. படங்கள் : ஊடகவியலாளர்கள் குமணன், ஸ்டாலின், தமிழ் மதி மற்றும் டுவிட்டரில் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகள்