மலையகத்தின் பெண்கள்…
மலையகத்தில் ஆண்களைவிட பெண்களே அதிகம்!
–மாலினிமோகன்- நாவலப்பிட்டி- மலையகம் – இலங்கை
ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ம் திகதி பெண்களின் பெருமை பேசும் நாளாகும்.நியுயோர்க்க நகரில் 1857,ல் மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆயிரக்கணக்கான வேலைப்பார்க்கும் பெண்கள் ஆண்களுக்கா நிகரான சம்பளம் வேண்டி போராட்டம் செய்து பொலீசாரால் ஓட விடப்பட்டனர். இன்னாளே பிற்காலங்களில் மகளிர்தினமாக கொண்டாடப்பட்டதாக வரலாறுகள் கூறுகிறது. இதனையடுத்து 1921 உலக மகளிர்தினம் கொண்டாடப்பட்டது. 1975 ஆம் ஆண்டு இந்நாளை சர்வதேச மகளிர் தினமாக ஐ.நா.சபை அறிவித்திருந்தது. பெண்களின் உரிமைக்காக குரல் கொடுக்க ஒரு மாதம், நாள் தேவைப்படுகின்றது என்றால் பெண்களுக்கான உரிமைகள் பற்றி அறிந்திருக்க தவறுகிறோமா?.. ஆம் என்றால் அது தவறில்லை.
“உரிமை என்பது உறுதி செய்யப்பட்ட சுதந்திரமாகும்”. இவ்வாறு உறுதி செய்யப்பட்ட சுதந்திரம் பற்றி எம்மில் பலரும் அறிந்திருக்க தவறுகிறோம். சுதந்திரம் என்ற பெயரில் வேறு எதையோ சுட்டிக்காட்டிக்கொண்டிருக்கிறோம். உண்மையாக பெண்களின் உரிமைகள் பற்றி பெண்களை வலுப்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு மிகவும் கவனம் செலுத்தியுள்ளது. தேசிய மற்றும் சர்வதேச முன்னுரிமைகளுடன் பால்நிலை சமத்துவத்தை மேம்படுத்தவும் ஆவனசெய்கிறது. மேலும் அபிவிருத்தியில் ஆண்களும் பெண்களும் சம பங்காளராக இருப்பதை உறுதி செய்ய பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை நீக்க உழைக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை.
இயற்கையியல் அறிஞர் சார்ல்ஸ் டார்வின் தியரியின் படி இவ்வுலகம் குரங்கிலிருந்து மனிதனாக பரிணாம வளர்ச்சி பெற்றதாக குறிப்பிடப்படுகிறது. ஆனாலும் அவ்வாறு வளர்ச்சியடைந்த மனித இனம் இன்று உலகையே தன் உள்ளங்கை ரேகைக்குள் பதுக்கி கொண்டு விஞ்ஞான அறிவியல் புரட்சியில் தொழிநுட்பத்தை தன்வசப்படுத்தி விண்ணில் குடியேறி அங்கும் தன் தடம் பதிக்க நித்தம் தன்னை புதுப்பித்துக்கொண்டிருக்கிறான். இப்படியான இவ்வுலகில் உண்மையில் தன்னை ஓர் இயந்திரமாகவே மாற்றிக்கொண்டிக்கிறாள் பெண். ஆணாதிக்க சமூக கட்டமைக்குள் சிக்கி அடிமைப்படுத்தப்பட்ட பெண்ணினம் இன்று பேசுபொருளாக மாறி வருவதை மறுப்பாறில்லை. இது ஆணாதிக்க சமூகம் தான் ஆனாலும் பெண்களின் வளர்ச்சியில் முட்டுக்கட்டைகளாக பல பெண்களே காணப்படுவதும் கண்கூடு.. உதாரணமாக மாமியார்,நாத்தனார்.பெண் அதிகாரிகளுக்கு கீழ் வேலை செய்யும் ஏனைய பெண்களின் நிலமை என்பனவற்றைக் குறிப்பிடலாம். மனிதனை படைக்கும் பெண் தெய்வமே பெண்தான். இவ்வுலகுக்கு குழந்தைகளை புதுவரவுகளாக்கி மிளிரும் பெண்ணுக்கு ஈடிணை இல்லை என ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் அவசியம் அறிந்திருந்தல் வேண்டும்.
எப்போதும் எம் சமூகத்தில் பெண்கள் முதன்மையானவர்களாக காணப்படுகின்றனர். காரணம் உலக சனத்தொகையில் 49.5மூ மிக அதிகரித்துவரும் பெண்கள் தொகையாகும். இதில் இலங்கையில் ஆண்கள் 49.3மூ மும் பெண்கள் 50.7மூ வீதமுமாகும். ஆண்களை விட பெண்கள் 1.4மூ அதிகமாகும். இதிலும் குறிப்பாக மலையகத்தில் ஆண்கள் தொகை 47.8மூ ஆக பெண்கள் தொகை 52.2மூ ஆகும். இதுவே பெண்களின் முன்னேற்றத்திற்கான திறவுகோள்தான். இன்று உலகளவில் பெண்கள் விவசாயம், தொழிற்சாலை, ஏற்றுமதி, அழகியல்துறை, அரசியல், சமூகவலைதளம், விளையாட்டு, விண்வெளி, இராணுவம், சினிமா, காவல்துறை, கப்பல்துறை என எல்லா துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக நின்று ஈடுகொடுக்கின்றார்கள். மலையகத்தில் பெண்கள் பல துறைகளிலும் தனது பங்களிப்பை ஆற்ற தவறவில்லை அதற்கு பின்வருவன சான்று பகர்கின்றது.
மலையகத்தின் லபுக்கலையை சேர்ந்த சின்னக்கருப்பன் ஸ்ரீபவானி விளையாட்டுத்துறையில் சாதனை, அண்மையில் நடைபெற்ற மாகாணசபை தேர்தலில் அனுசியா சந்திரசேகரம் அரசியலில் தனி ஒரு பெண்ணாக 10000 வாக்குகளுக்கு மேல் பெற்று சாதனை, முன்னால் மத்தியமாகாண தமிழ்கல்வி அமைச்சரும், தற்போதய இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவருமான திருமதி. அனுசியா சிவராஜா அம்மையார் ஆண்களுக்கு நிகராக தன் பங்கை கல்வி, அரசியல் என இரு துறைகளிலும் தடம் பதித்துள்ளார். மேலும் தற்போதய மத்திய மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் திருமதி சத்யேந்திரா அம்மையார் , கல்வயமைச்சின் பெருந்தோட்டத்துறைக்கான முன்னாள் கல்விப்பணிப்பாளர் மகேஸ்வரி சபாரஞ்சன் றம்பொட அழகியல் கல்லூரியின் அதிபர் ஜே.டீ.வேதநாயகம் (ஆளுமை மிக்க வீரமங்கை) , காலஞ்சென்ற ஹட்டன் கல்வி வலயத்தின் முன்னாள் பணிப்பாளர் திருமதி .கணபதிபிள்ளை,கந்தப்பளை மெதடிஸ்ட் கல்லூரியின் முன்னாள் அதிபர் காலஞ்சென்ற திருமதி லக்ஷ்மி என பல மலையக பெண்மணிகள் கல்வித்துறையில் சாதித்தவர்கள். மேலும் கண்டியைச் சேர்ந்த நாகபூசணி கருப்பையா ஊடகவியல் துறையில் பல்வேறு பரிமாணங்களைப் பெற்ற பெண்மணியாக திகழ்கிறார்.
மேற்படி முக்கிய துறைகளில் பெண்கள் முன்னேறி இருப்பினும், பெண்களின் ஆற்றல்களை உச்சமாக பயன்படுத்துவதற்கு, தலைமைத்துவ பதவிகளில் பெண்களை அமர்த்துவதற்கு கலாசாரம் உட்பட பல்வேறு தடைகள் இன்னும் ,ருப்பதை தவிர்க்கமுடியாமல் உள்ளது. இதனாலேயே ஆண் தலைவர்களுக்கும், பெண் தலைவர்களுக்குமிடையே நடத்தையிலும், வினைதிறனிலும் வேறுபாடுகள் உள்ளனவா என மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வின் (Meta- Anatysis) அறிவு, திறன் , மனப்பாங்கு தொடர்பாக ஆண், பெண் தலைமைத்துவத்துக்கிடையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இல்லை என நிரூபிக்கப்பட்டது.எனவே மகளிர் தினத்தில் மட்டும் மகளிரை தூக்கி நிறுத்தி கொண்டாடாமல், தினமும் கொண்டாடுவோம்.
2,996 total views, 4 views today