யேர்மனியில் தெரிந்தும் தெரியாமலும் சேர்ந்த பணம் 5 மில்லியன்
யேர்மனியில் பிளாஸ்டிக் போத்தலில் தண்ணீர்வாங்கினால் அந்தப் போத்தலுக்கு 25 சென்ஸ் தனியாக எடுப்பார்கள். அதனைத் திருப்பிக்கொடுத்து அந்த வெறும் போத்தலுக்கு 25 சென்சைப் பெற்றுக்கொள்ளலாம். இது பிளாஸ்ரிக் போத்தல்கள் உலகை மாசுபடுத்துவதை தவிர்ப்தற்கான ஒரு வழிமுறை. இதனை யேர்மனி பின்பற்றுகின்றது.
லிடில் அல்லது அல்டி கடைகளில் நாளாந்தம் இந்த போத்தல்களை திருப்பிக்கொடுத்து விட்டு அந்தப் பணத் திற்கும் சேர்த்துப் பொருட்கள் வாங்கிச் செல்வார்கள்.
நானும் அந்த வரிசையில் வெறும்போத்தல்களுடன் நின்றேன். ஒரு இளம் குடும்பம் தனது சிறு மகளுடன் வந்து வெறும் போத்தல்களைப் போட்டுக்கொண்டு நின்றனர். மகள் தான் போடவேண்டும் என்று அடம்பிடிக்க அந்தப் பெண் தான் போட்டு முடிந்தவற்றுக்கான பணத்தை பொத்தானை அமத்தி எடுத்தக்கொண்டாள்.
சிறுபிள்ளையின் ஆசைக்கு ஒரு போத்தலைக் கொடுத் தார். மகள் போட்டுவிட்டு பட்டிணை அமத்தினாள். அது காசுக்கான துண்டு வர வில்லை, அது மாறாக தர்மத்திற்கு சென்றுவிட்டது. பிள்ளை (Spende) தர்மத்திற்குரிய பட்டிணை எங்கோ பார்த்துக்கொண்டு அமத்திவிட்டது.
தாய்க்கு கோவம் தாங்க முயடிவயில்லை. அது போட்டுது! தர்மத்திற்குப் போட்டுது. என்ன வேலை செய்தாய் என முகம் கடுகடுக்க, மகளைப் பேசினாள். மகள் அம்மா! போனது வெறும் 25 சென்ஸ்தானே! ஏன் அதுக்கு கத்துகின்றாய் என்று ஆவேசமாக கேட்டது.
தாய் நிதானமாச் சொன்னாள் ‘போனது 25 சென்ஸ்தான் ஆனால் அதை தெரிந்து தர்மத்திற்கு நீ போட்டிருந்தால் நான் மகிழ்ந்திருப்பேன், தெரியாமல் போட்டதும், அது வெறும் 25 சென்ஸ் தானே என்றதும் தான் பிழையான கருத்து” என்றாள்.. எப்பவுமே நன்மை என்றாலும் தெரிந்துதான் செய்வேண்டும். அந்த யேர்மன் பெண்மணி சொன்ன வார்த்தைதான் இந்த விரிவான கட்டுரை. உயில் எழுதுவதாக இருந்தால் உணர்வோடு எழுதவேண்டும் என்று ஒரு விதிமுறை உண்டல்லவா!
தீமையைச் செய்து விட்டு அட அதற்கு நாம் என் செய்வது, ஆண்டவன் நமது வடிவில் அவர்களைத் தண்டித்துள்ளான். அல்லது அவர்கள் வினைப்பயன் அப்படியக இருக்கலாம். தம்;மால் தீமை அவர்களுக்கு ஏற்பட்டது என்று எண்ணி தமது நின்மதியைக் கலைக்கமாட்டார்கள்.
அதிகமாக பிச்சைக்காரர்கள் பிச்iசாக்காரர்களுடன் நின்று பிச்சை எடுப்பதில்லை. காரணம் பணக்காரனுக்கு முன்பு தான் சில பணக்கார்கள் அவர்கள் பார்க்கப் பிச்சை போடுவான்.
அதுவும் அதிகமாகப் போடுவான். பணக்காரர்களது மனநிலையை நன்குபடித்தவர்கள் இந்தப் பிச்சைக்காரர்கள்.
நம்மில் பலருக்கு இப்படியான சந்தர்ப்பம் வந்திருக்கலாம். நன்கொடைக்கு வருபவர்களுக்கு, அள்ளிக் கொடுத்துவிட்டு ( முகத்திற்காக) பின் முகம் மறைந்த பின், அட அதிகமாகக் கொடுத்து விட்டோமோ?
அல்லது விடுமுறைக்கு ஊருக்குசென்று அட இனபந்துகளுக்கு நீங்கள் அதிகமாகவே அள்ளிக்கொடுத்திட்டீர்கள்.
கொஞ்சம் எண்ணிப் பார்த்தீர்களா? நாம் இங்கு அவர்களைவிடக் கீழாக அல்லவா இருக்கின்றோம்.
இப்படி கலங்கி நிற்கின்றது மனசு.
தெரிந்து செய்யும் நன்மையே இப்படி என்றால்? தெரியாமல் நன்மை செய்துவிட்டால் எப்படி இருக்கும். நமது குணம் தெரிந்த ஒரு பிரபல நிறுவனம் இப்படிச் செய்துள்ளது. இனி முன்னுள் செய்திக்கு வருவோம்.
யேர்மனியில் லிடில். அங்கு வாங்கும் பிலாஸ்ரிக் போத்தல்களை (தண்ணீர், யூஸ்போத்தல்) பாவனைக்குபின் திரும்பிக் கொடுத்தால் போத்தலுக்கு 25 சென்ஸ் கிடைக்கும். அதற்கு என பிரத்தி யேகமாக போத்தல் போட (தன்னியக்க இயந் திரம் உண்டு).அதன் வாயிலில் போத் தலை நுளைத்து விட்டால் அது போத்தலை உள் இழுத்துவிட்டு அதற்குரிய பணம் எவ்வளவு என்று காட்டும். நாம் அதில் உள்ள ஒரு பட்டிணை அமத்தினால் அதற்குரிய ஒரு பில்போல் அச்சடித்து தரும். அதனை கடையில் கொடுத்தால் காசு தருவார்கள். சிலசமயங்களில் 15 யூரோவிற்கு மேலும் வரும்.
இதில் முக்கியமானது என்ன வென்றால் நீங்கள் இந்தப்பணத்தை எடுக்காது அப்படியே அதனை உலகில் உள்ள வறிய மக்களுக்கு நன்கொடை யாகவும் வழங்க முடியும். ஆனால் அதனை அறியாது எங்கோ பார்தபடி காசு க்குரிய பட்டிணை அமைத்துவதற்குப் பதிலாக, காசை நன் கொடைக்குரிய பட்டிணை அமத்தி விடாமல் இருக்க, அந்த நன்கொடை பட்டிணை, நமது விரல் தெரியாமல் அமத்துவதை தவிர்க்க, ஒரு கவசம் உண்டு. அது ஒரு பாதிக்குடைபோல் அந்த பட்டிணை முன்பக்கமா மறைத்து இருக்கும். எனவே நீங்கள் உண்மையில் போத்தலுக்குரிய பணத்தை வறிவர்களுக்கு நன்கொடையாக வழங்க விரும்பினால் மட்டும், உங்கள் விரலை அந்த பாதுகாப்பு கவசத்திற்கு உள்பக்கமாக விட்டு சிரமத்தின் மத்தியில் அந்த பட்டினை அமத்தி அந்த நன்கொடையை வழங்கலாம்.(சிறுபிள்ளைகளது விரல் இலகுவாக அதனுள் சென்றுவிடும்.)
இவ்வளவு தூரம் நீங்கள் தவறுதலாக, விரும்பாமல் நன்கொடை வழங்குவதை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை யாக அந்தக்கவசம் விளங்குகின்றது. உண்மைதான் கொடுக்கும் போது தெரிந்தே கொடுங்கள்.
பி.குறிப்பு: தெரிந்தும் தெரியாமலும் பொத்தானை அமத்தி யேர்மனியில் தர்மம் செய்தவர்களது பணம் கடந்த 4 ஆண்டில் 5 மில்லியன் யூரோவாகும்.
1,154 total views, 3 views today