யேர்மனியில் நில் கவனி மருத்துவச் செய்திகள்
-வைரமுத்து சிவராசா-யேர்மனி
- யேர்மனியில் 65.5மூ நோயாளிகள் கூறுகிறார்கள்: தமது மருத்துவர் எப்போதும் பல்வேறு சிகிச்சை விருப்பங்களைக் காண்பிக்கிறார்களாம். ஆனால் நோயாளிகள் விரும்பும் ஒரு சிகிச்சை முறையைத்தான் செய்கிறார்கள்.
- அனைத்து ஜேர்மன் பெண்களில் 65மூ அதிகமானவர்கள் சுய மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் 35மூ ஆண்கள் மட்டுமே இந்த மருந்துகளை சுயமாக எடுத்துக்கொள்கிறார்கள். அதாவது வைத்தியர்களால் கொடுக்கப்படும் மருந்துகள் குளிசைகளை ஆண்கள் அக்கறையீனம் சோம்பேறித்தனத்தால் 35 வீதம்பேர்தான் தா
மாக எடுத்து மருந்து மற்றும் குளிசைகளைப் பாவிக்கிறார்களாம். - கண்புரை சிகிச்சைக்கு ஜெர்மனியில் ஒவ்வொரு ஆண்டும் 8,000,000 பேருக்கு செயற்கை லென்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.
- லேசான சுவாச நோய்த் தொற்றுகளின் சிகிச்சையின் அடிப்படையில் முந்தைய ஆண்டை விட 43மூ பேர் குறைவான நுண்ணுயிர் (Antibiotika) எதிர்ப்பிகள் 2020 வசந்த காலத்தில் எடுத்தவர்கள் எனவும் சுகாதாரப் பகுதியினர் தெரிவித்துள்ளனர்.Covid19 அச்சம் காரணமாக வைத்தியரை அணுகியது குறைவு.
- 28மூ பேர் கூறுகிறார்கள் சிகிச்சை முடிவுகளை கேள்வி கேட்கும்போது அல்லது மாற்று வழிகளைக் கேட்கும்போது பதில்கூற மருத்துவர்கள் விரும்பவில்லை என தெரியவந்துள்ளது.
- ஜெர்மனியில் மருத்துவரின் பரிந்துரைக்கு முரணானவற்றைச் சிலர் படித்தறிவதால் 19.8மூ நோயாளிகள் தமது சிகிச்சை பற்றி தங்கள் மருத்துவரிடம் தகராறு செய்கிறார்களாம்.
- 20மூ ஜேர்மனியர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது ஒரு கவலைக் கோளாறால் பாதிக்கப்படுகின்றார்கள் என சுகாதாரப் பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
- யேர்மனியிலுள்ள நோயாளிகளில் 56.6மூ பேர் மருத்துவரின் முடிவுகளை மட்டுமே நம்பி தமது சுகாதார தேவைகளை நிவர்த்தி செய்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 46.3மூ பேர் ஏற்கனவே நோய்கள், சிகிச்சை அல்லது மருந்துகள் பற்றி அறிந்து மருத்துவரிடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தடவைகள் வருகைதந்து சிகிச்சை பெற்றுவருகிறார்களாம்
- யேர்மனிய நோயாளர்களில் 19.9மூ பேர் தங்களுக்குடைய நோய்க்கு என்ன வேண்டும் என்று மருத்துவரிடம் கூறி, அவர்களுடன் இணைந்து மிகவும் பொருத்தமான சிகிச்சையை தீர்மானிக்கிறார்கள்.
- ஜெர்மனியில் ஒவ்வொரு ஆண்டும் 8,000 பேர் கல்லீரல் புற்றுநோயால் இறக்கின்றனர் என சுகாதாரப் பகுதியினர் அறிவித்துள்ளனர்.
- யேர்மனிய சுகாதாரத்துறையில் தற்போது 5.7 மில்லியன்பேர் கடமை புரிகிறார்களாம். இவர்களில் 360,000 மருத்துவர்கள் உட்பட ஜெர்மன் சுகாதார அமைப்பில் பணிபுரிகின்றனர்.
1,633 total views, 2 views today