தலைவி
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு!
முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட படம் தான் “தலைவி “. இந்த மாதிரி வாழ்க்கை வரலாற்று படத்திற்கு எப்போதுமே ஒரு தனி ரசிகர்களும் ,எதிர்பார்ப்பும் இருக்கத்தான் செய்கின்றனர்.
மற்ற படங்களை விட இந்த வரலாற்று படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கின்றன.அதற்கு தேர்தல்; நெருங்குவதும் ஒரு முக்கிய காரணம்.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட படம் தான் தலைவி. வரலாற்று படம் என்றாலே இருக்கும் எதிர்பார்ப்பை விட இந்த படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கின்றது. காரணம் முதலமைச்சரின் வாழ்க்கை என்பதால் தான். அப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார் கங்கனா. ஏற்கனவே இப்படத்தின் பல புகைப்படங்கள் வெளிவந்து அனைவரையும் அதிக எதிர்பார்ப்பை தூண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் பலம்
அரசியல் மட்டும் இல்லாமல் ஜெயலலிதாவிடம் இருக்கும் அறிய பொக்கிஷமான விஷயங்களையும் இப்படத்தில் கொண்டுவந்துள்ளார் இயக்குனர் விஜய். பரதநாட்டியம், தமிழ் மொழியைக் கற்றுக்கொள்வதிலிருந்து ஜெயலலிதாவின் பழக்கவழக்கங்களை சரியாகப் பெறுவதற்கு பல மணிநேரம் செலவழிப்பதில் இருந்து, கங்கனா இப்படத்திற்காக உழைத்து வருகிறார்.
எம்.ஜி.ராமசந்திரன்
கங்கனா மற்றும் அரவிந்த் சுவாமியின் கதாபாத்திரத்தின் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோரின் வினோதமான ஒற்றுமை ஒரு முக்கிய பேசும் இடமாக இருந்து வருகிறது, மேலும் வாழ்க்கை வரலாற்றின் தோற்றம் மற்றும் உணர்வைச் சுற்றி நிறைய எதிர்பார்ப்பு உள்ளது.
மற்றும் பிரபல நடிகரின் வாழ்க்கையிலிருந்து எப்படிச் சின்ன நிகழ்வுகள் அரசியல்வாதியாக மாறியது என்பதை தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் புகழ் பெற்ற முக்கியமான நபரின் கதை என்பதாலும்,அதில் இருக்கும் முக்கிய நட்சத்திர பட்டாளங்களாலும் இப்படம் பெரிய அளவில் வெற்றி பெரும் என்று தயாரிப்பாளர்களின் தரப்பில் கூறுகின்றனர்.சமீபத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று , இப்படத்தை தயாரிப்பாளர்கள் பான் இந்தியாவில் திரையரங்குகளில் 2021 ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்தனர். இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகளவில் வெளியிடப்பட உள்ளது. இப்படத்தின் நாயகியான கங்கனா பிறந்தநாள் மார்ச் 23 ஆம் தேதி அன்று ட்ரைலரை வெளியிட திட்டமிட்டு உள்ளனர். இதில் கூடுதல் கவனம் என்னவென்றால், எலெக்ஷன் நெருங்கும் வேளையில் வெளியிடுவதால் ரசிகர்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் தொண்டர்களின் மத்தியிலும் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக நிலவி வருகின்றது. இந்த தேர்தலிலும் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா இந்த வடிவத்தில் பிரச்சாரம் செய்கிறார்கள்.
1,245 total views, 2 views today