தமிழ் சினிமா 1

சகுந்தலையாக சமந்தா

சகுந்தலை புராண கதை, சினிமா படமாக தயாராகிறது. படத்துக்கு சகுந்தலம் என்று பெயரிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை குணசேகர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ருத்ரமா தேவி படத்தை இயக்கியவர். சகுந்தலம் படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக துஷ்யந்தன் கதாபாத்திரத்தில், மலையாள இளம் நடிகர் தேவ் மோகன் நடிக்கிறார்.

அஜித்தின் 50 இல் வலிமை

வலிமை படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால் முடியும் தருவாயில் உள்ள ‘வலிமை’ படத்தில் யாரெல்லாம் அஜித்குமாருடன் நடிக்கிறார்கள் என்ற தகவலைக் கூட படக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை. இந்நிலையில் முதன்முறையாக ‘வலிமை’ குறித்த தகவலைப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “அஜித்தின் 50ஆவது பிறந்தநாலான மே 1 வலிமை பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் விளம்பரங்களும் வெளியாகும்” என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.

சிம்ரனுக்கு வரும் வில்லி வாய்ப்புகள்

தமிழ் திரையுலகில் 1990 மற்றும் 2000-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த சிம்ரனுக்கு திருமணத்துக்கு பிறகு கதாநாயகி வாய்ப்புகள் இல்லை. இதனால் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார். அதன்பிறகு வில்லியாக மாறினார். சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தில் காளீஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக மிரட்டினார். இப்போது பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் அந்தகன் படத்திலும் வில்லி வேடம் ஏற்றுள்ளார். கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்யும் கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் இந்தியில் தபு நடித்துள்ளார். சிம்ரன் கள்ளக்காதல் கொலையாளியாக நடிப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சில படங்களில் வில்லியாக நடிக்கவும் அவருக்கு வாய்ப்புகள் வந்துள்ளன.

வெளிவர முடியாத பிரபுதேவா படங்கள்

நடன இயக்குனராக இருந்த பிரபுதேவா 1994 இ ல் வெளிவந்த இந்து படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இத்தனை வருடங்களாகவும் நாயகனாக நடித்துக் கொண்டிருப்பது வரவேற்க வேண்டிய ஒன்று தான். ஆனாலும், அவர் நடித்துள்ள மூன்று படங்கள் எப்போது வெளியாகும் என தடுமாறி நின்று கொண்டிருக்கின்றன. ஹிந்தியில் முன்னணி நட்சத்திரங்களை இயக்கும் இயக்குனராக இருந்தாலும் அவர் நடித்து முடித்துள்ள யங் மங் சங் படத்தின் பெயர் அறிமுகம் 2019ல் நடந்தது.. அதற்குப் பிறகு படம் பற்றிய எந்த அப்டேட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. அடுத்து பொன்மாணிக்கவேல் என்ற படத்தின் டீசர் 2019ஆம் ஆண்டிலும் டிரைலர் 2020ம் ஆண்டிலும் வெளியானது. மற்றொரு படமான தேள் என்ற படத்தின் படப்பிடிப்பும் ஏறக்குறைய முடிவடைந்து அப்படியே நிற்கிறது. இந்த மூன்று படங்கள் அல்லாமல் பாகீரா, ஊமை விழிகள்ரூ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பிரபுதேவா. எத்தனையோ படங்கள் வெளிவராமல் தவிப்பதற்கும் முன்னணி நடிகர், இயக்குனரான பிரபுதேவாவின் படங்கள் தவிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்கின்றனர் திரையுலகினர்.

ஜூலையில் ”கோப்ரா”

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் கோப்ரா.சமீபத்தில் ரஷ்யாவில் நடைபெற்ற கோப்ரா படப்பிடிப்புகள் முடிவடைந்தநிலையில், தற்போது போஸ்ட் புரொடெக்சன் வேலைகள் நடைபெற்று வருகின்றன . இப்படம் வரும் மே மாதம் ரம்ஜான் பண்டியையொட்டி வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில் பின்னணி வேலைகள் அதற்குள் முடியாது என்பதால் கோப்ரா படம் வரும் ஜூலை மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது .

1,557 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *