அரசியலில் யேர்மனியின்; காவிய நாயகி அஞ்சலோ அம்மையார்
அஞ்சலோ அம்மையார் தனக்கு முன்னைய தலைவர்களை
ஒரு போதும் இகழ்ந்ததோ! திட்டியதோ கிடையாது.
விமல் சொக்கநாதன்- இங்கிலாந்து
யேர்மனி என்ற நாடு. அந்த எண்பது மில்லியன் பொதுமக்களை கடந்த 18 ஆண்டுகளாக தலைமை தாங்கி வழி நடத்தி வந்தவர் ஆட்சித்தலைவி, காவிய நாயகி அஞ்சலா மேர்க்கல் அம்மையார். ஐரோப்பிய கண்ட நாடுகளில் உறுதியான பொருளாதார வளம் மிக்க யேர்மனி நாட்டின் அதி அற்புதமான இந்த ஆட்சித்தலைவியின் அர்ப்பணிப்பு மிக்க சேவையைப் பாராட்டி நன்றி உணர்வு மிக்க யேர்மனியின் குடி மக்கள் தெருவில், வீடுகளில், மாடிகளில் என்று எல்லா இடங்களிலும் இணைந்து கடந்த மாசிமாதம் முதலாம் திகதி 6 நிமிட நேரம் தொடர்ச்சியாக கரகோஷம் எழுப்பி தமது நன்றி மலர்களை கண்ணீருடன் சமர்ப்பித்தார்கள்.
அஞ்சலா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் பொதுமக்கள் எவருமே அவர் மீது எதுவித குற்றச்சாட்டுக்களும் எழுப்பியது கிடையாது. தன் குடும்பத்து உறவினர்கள் எவருக்குமே அவர் அரசாங்கப்பதவி வழங்கியது கிடையாது. ஜேர்மன் அரசின் எந்தச் சாதனைக்கும் தாமே பொறுப்பு என்று அவர் உரிமை பாராட்டியது கிடையாது தமது ஆட்சிக்கு முன் தலைமைப் பொறுப்பு வகித்த ஆட்சித்தலைவரை. அஞ்சலோ அம்மையார் ஒரு போதும் இகழ்ந்ததோ திட்டியதோ கிடையாது.
கட்சியின் தலைமைப் பதவியை இவர் கடந்த வாரம் கையளித்த போது முன்னரை விட மிக உயர்வான இடத்திலேயே ஜேர்மனி நாடு இப்போது இருப்பது குறிப்பிடத்தக்கது. அஞ்சலோ அம்மைiயார் அணியும் ஆடைகளை நீங்கள் தொலைக்காட்சியிலும் புகைப்படங்களிலும் பார்த்திருப்பீரக்ள். பிரிட்டனின் மேனாள் ஆட்சித்தலைவி மார்கிரட் தட்சர் அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் அவரைப் போல மிக நவ நாகரிகமாக ஆடைகளை எவரும் அணிந்ததில்லை .
பிரதமர் மார்கிரட்டின் ஆடைகளை அமெரிக்க அரசியலின் முன்னணி அமைச்சர்கள் சின்னத்திரையின் புகழ்பெற்ற நடிகைகள், வெள்ளித்திரை நடிகைகள் பெருமளவில் பின்பற்றத் தொடங்கினார்கள். ‘அஞ்சலாவின் ஆடைகள் ஏன் இவ்வளவு மிக மிக சாதாரணமானவையாக இருக்கின்றன ’என்று ஒரு ஜேர்மன் செய்தியாளர் கேட்டபோது அஞ்சலா அம்மையார் வழங்கிய பதில்;
‘நான் ஒரு அரச ஊழியர் . விதம் விதமாக புதிய ஆடைகளை அணிய நான் ஒன்றும் FASHION MODEL அல்லவே.. இன்னொரு சந்தர்ப்பத்தில் ‘ உங்கள் வீட்டைத் துடைத்து, பெருக்கி, சமையல் உதவிக்கு பெண்கள் யாரும் இருக்கிறார்களா..?’ என்று நிருபர் ஒருவர் கேட்ட போது அஞ்சலா அம்மையார் வழங்கிய பதில் ‘இல்லவே இல்லை என் வீட்டில் பணியாட்கள் யாருமே இல்லை எனக்கு அவர்கள் தேவையில்லை. என் கணவரும் நானுமே தினமும் வீட்டு வேலைகளை செய்து வருகிறோம்’. வியப்படைந்த நிருபர் மேலும் இப்படி கேட்டார் ‘உங்கள் வீட்டின் அழுக்கான உடைகளை துவைபப்து நீங்களா..? அல்லது உங்கள் கணவரா..?’ இதற்கு அஞ்சலா அம்மையாரன் பதில்: ‘துணிகளை தெரிவு செய்து எடுத்து வைப்பது நான் ஆனால் வொஷிங்; மெஷினை இயக்குவது என் கணவர் தான். பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் அவர் அதனை இயக்குவார். இதற்கு காரணம் இரவு நேரங்களில் மின்சாரத்தின் மூலம் பயன்படுத்தும் சாதனங்களின் மீது அழுத்தம் குறைவு. இதை விட முக்கியம் துணி துவைக்கும் இயந்திரம் எழுப்பும் பெரிய ஒலி பக்கத்து வீட்டார்களின் தூக்கத்தை குழப்பி அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தாமலிருப்பதற்கு பார்த்துக் கொள்கிறோம்’.
மிகவும் சாமான்யமான வீட்டில் தான் அஞ்சலா அம்மையார் இன்னும் வாழ்ந்து வருகிறார். பக்கத்து வீட்டுக்காரருடன் பகிர்ந்து கொள்ளப்படும் பொதுவான ஒரு சுவர் நடுவில் இருக்கும்,. இவர் பதவிக்கு வரும் முன்னர் மேற்கு ஜேர்மனி என்றும் வசதிகள் குன்றிய கிழக்கு யேர்மனி என்றும் பனிப்போர் காலத்தில் இரண்டு யேர்மனிகள் இருந்தன.
தாம் வசதிகள் குறைந்த கிழக்கு யேர்மனியிலிருந்து வந்தவர் என்பதை அஞ்சலா அம்மையார் ஒருபோதும் மறந்தது கிடையாது. இதனால் தானோ என்னவோ பள பளக்கும் கார், அரண்மனை போன்ற இருப்பிடம் சொந்த விமானம் என்று எதுவுமே அவருக்கு இருக்கவில்லை. ஆட்சித்தலைவியாக முன்னர் அவர் வாழ்ந்த வீட்டிலேயே தொடர்ந்தும் வாழ்ந்து வருகிறார். ஒரு நீச்சல் குளமோ ,வனப்பு மிகுந்த பூந்தோட்டங்களோ அங்கு கிடையாது. ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கட்டிய எழுப்பியதில் பெரும் பங்கு இவருக்குண்டு. எவரும் கைக் கூப்பி தொழக்கூடிய பண்புகள் நிறைந்த தலைவி மேர்கெல்லை கௌரவிக்க யேர்மனிய மக்கள் ஆறு நிமிடங்கள் வரை கரகோஷம் செய்ததில் ஆச்சரியம் எதுவுமே இல்லை. நாட்கள் கடந்தாலும் இச்செய்தி ஆறு நிமிடம் அல்ல! ஆண்டாண்டு காலம் அவை நினைவில் இருக்கும்.
1,466 total views, 2 views today