பத்மஸ்ரீ ‘சின்னக் கலைவாணர்’ விவேக்.. நம் மனங்களிலும் மரங்களிலும்; வாழ்வார்.
நடிகர் விவேக் குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது மயங்கி விழந்தார். இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அதிகாலை காலமானார் அதிகாலை காலமானார் இதையடுத்து அவரது இதயத்தின் செயல்பாடு குறைந்ததால், இதயத்தை முழுமையாக செயல்பட வைக்க எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் நேற்று செய்தி வெளிவந்த நிலையில். இன்று 17.04.2021 அதிகாலை 4.35 மணிக்கு நடிகர் விவேக் காலமானார்.
“சின்னக் கலைவாணர்” என அழைக்கப்படும் விவேக் அவர்கள், 1961 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மதுரையில் பிறந்தார். இவருடைய முழு பெயர் விவேகானந்தன் ஆகும்.
‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்’
1987 ஆம் ஆண்டு, இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் மூலம்; ‘மனதில் உறுதிவேண்டும்’ என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமா துறையில் கால்பதித்த விவேக் அவர்கள், அத்திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். அதன் பிறகு, 1989 ஆம் ஆண்டு வெளிவந்த கே.பாலச்சந்தரின் ‘புது புது அர்த்தங்கள்’ திரைப்படத்தில், இவர் பேசிய ‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்’ என்ற வசனம் இவரைப் பிரபலப்படுத்தியது.;. இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ரஜினி, விஜய், அஜித், மாதவன், தனுஷ், சூர்யா, விக்ரம், ஜெயம் ரவி என டாப் ஹீரோக்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார் நடிகர் விவேக்.
அப்துல் கலாம் மீது மிகுந்த பற்றுக்கொண்ட நடிகர் விவேக் சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் திகழ்ந்தார். அப்துல் கலாம் அவர்கள் சொன்ன பாதையில் தமிழ்நாட்டில் ஒரு கோடி மரம் நடப்புறப்பட்ட அவர் 37 இலட்சம் மரங்களை நட்டு முடித்தார். இவரது இறுதி ஊர்வலம் நடந்தபோது ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை அன்றையதினம் எடுத்துச்சென்று நட்டனர். நம் மனங்களிலும் மரங்களிலும் விவேக் வாழ்வார்.
1,152 total views, 3 views today