கர்ணன்: கேள்வியும் பதிலும்
கர்ணன் திரைப்படம் பார்த்து விட்டீர்களா? இல்லை இனித் தான் பார்க்க போகுறீர்களா? எதுவாக இருந்தாலும், கர்ணன் திரைப்படம் பற்றிய ஒரு பரீட்சைக்கு நீங்கள் தயாரா?
கர்ணன்: கேள்வியும் பதிலும்
கர்ணன் படத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது?
அ. மாரி செல்வராஜின் இயக்கம்
ஆ. சந்தோஷ் நாராயணனின் இசை
இ. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு
ஈ. மேற்கூறிய யாவும்
கர்ணன் படத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த காட்சி எது?
அ. பொலிஸ் நிலைய தாக்குதல்
ஆ. தட்டான் தட்டான் பாடல் காட்சி
இ. க்ளைமாக்ஸ்
ஈ. தனுஷ் – தாத்தா காட்சிகள்
கர்ணன் படத்தில் மிகவும் திறமையாக நடித்திருப்பது யார்?
அ. கர்ணனாக தனுஷ்
ஆ. ஏமராஜாவாக லால்
இ. குட்டி பாத்திரங்களில் கிராம மக்கள்
ஈ. மேற்கூறிய யாவும்
கர்ணன் படத்தில் வரும் குறியீடுகளில் உங்களுக்கு எந்த குறியீடு புரிந்தது?
அ. முகமூடி அணிந்த சிறுமி
ஆ. முன்னங்கால்கள் கட்டப்பட்ட கழுதை
இ. கோழிக் குஞ்சை கொத்தும் பருந்து
ஈ. ஒன்றும் விளங்கேல்லயடாப்பா
கர்ணன் படப் பாடல்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தது?
அ. வுட்ராதீங்க யப்போ
ஆ. தட்டான் தட்டான்
இ. கண்டா வரச் சொல்லுங்க
ஈ. மஞ்சனத்தி புராணம்
கர்ணன் படம் முழுமையாக யாருக்கு புரிய அதிக வாய்ப்புள்ளது?
அ. மட்ஸ் மண்டைக்காரன்கள்
ஆ. மொக்கு கொமர்ஸ்காரன்கள்
இ. பயோ பிஸ்தாக்கள்
ஈ. மேற்கூறிய எல்லோரும்
கர்ணன் படம் பற்றிய விமர்சனம் எழுத திறமான ஆள் யார்?
அ. மைந்தன் சிவா
ஆ. கோபி மாஸ்டர்
இ. திருச்செந்தூரன்
ஈ. எழுத்தாளர் ஜேகே
கர்ணன் பட பாத்திர பெயர்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தது?
அ. மஞ்சனத்தி
ஆ. வடமலையன்
இ. ஏமராஜா
ஈ. கண்ணபிரான்
கர்ணன் படத்தை ஒரே வரியில் வர்ணிப்பது எப்படி?
அ. தமிழ் திரையுலகின் புதிய பரிமாணம்
ஆ. ஆஹா.. ஓஹோ…அருமை..அற்புதம்
இ. படத்தை பார்க்காமல் வுட்ராதீங்க யப்போ
ஈ. மேற்கூறிய யாவும்
கேள்விகளிற்கான விடையை அறிய, பாருங்கள் பாருங்கள் பார்த்து மகிழுங்கள்.. கர்ணன்.
வெற்றிநடை போடுகிறான்.. கர்ணன்..
1,393 total views, 2 views today