இங்கிலாந்தில் மீண்டும் கல்யாணம், கச்சேரி, கொண்டாட்டங்கள் ஜூனில் தொடங்குமா?

இது திகதிகள் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல
சம்பவங்கள் சம்பந்தப்பட்டது!
விமல் சொக்கநாதன்-இங்கிலாந்து.
பிரிட்டனின் தேசிய விளையாட்டு கிரிக்கெட் அல்ல. இங்கு உதைபந்தாட்டம்-கழழவடியடட தான். சனி, ஞாயிற்றுக்கிழமைகள் என்றால் ஊரிலுள்ள இளவட்டங்கள் எல்லாம் நிறைய சோமபானம் அருந்திவிட்டு மேலதிகமாக கேன்களிலும் ஊற்றி எடுத்துக் கொண்டு நகர்வலம் புறப்பட்டு தங்களது அபிமான உதைபந்தாட்ட போட்டிகளுக்குச் செல்கின்றனர். போகும் வழியில் ஆபாச பேச்சுக்களோடு வீதியில் போகும் கார்களுக்கும் கறுப்பின மற்றும் ஆசியர்களுக்கும் கலாட்டா செய்து கோபத்தில் குரைத்தபடி மைதானத்திற்குள் நுழைவார்கள். மைதானத்தில் போட்டியின் போது, இரண்டு அணிகள் விளையாடும். ஒரு அணியில் மிகப் பிரபலமான கறுப்பின வீரர் ஒருவர் விளையாடுவார். அவரைப் பார்த்த இந்தக் குடிகார விஷமிகள் நிறவெறி கோஷங்களை எழுப்புவார்கள். இந்தக் கோஷங்களினாலும் மனமுடைந்து போன கறுப்பின வீரர்கள் சிலர் மன நோயாளிகளாகி விளையாட்டைவிட்டே விரட்டியடிக்கப்பட்ட கதைகளும் உண்டு. உதைபந்தாட்ட போட்டி நடைபெறும் தினங்களில் ஊடகங்களுக்கு இதுவே முக்கியச் செய்தி.
காலையில் எழுந்ததும் பெற்றோரின் ஊதியத்தை நம்பி தின்று, குடித்து, ஊதாரித்தனம் செய்யும் இந்த இளவட்டங்கள் இலங்கையில், இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறார்கள் என்றில்லை. நாகரீக நாடுகளும் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் இந்திய இலங்கை இளசுகளுக்கும் மேல்நாட்டு இளசுகளுக்கும் ஒரு மிகப்பெரும் வித்தியாசம். மேல்நாட்டு இளசுகளுக்கு கைச்செலவுக்கென வாராவாரம் அரசாங்கமே பணம் கொடுக்கிறது. இதற்கு Income support/Social security இப்படி பல்வேறு பெயர்கள். அடிமட்ட ஆங்கிலத்தில் dole என்றும் சொல்வார்கள்.
இலங்கையில் எங்கள் மூத்த தமிழ் குடியினர் இதை பிச்சை சம்பளம் என்றும் குறிப்பிடுவார்கள். உதாரணமாக பிரிட்டனில் ஒருவர் 100 பவுண்ட்ஸ் உழைத்துச் சம்பாதித்தால் அதிலே 40 பவுண்ட்சை அரசாங்கம் வருமான வரியாகப் பிடித்துக் கொண்டு மீதமுள்ள 60 பவுண்ட்ஸை மட்டுமே ஒருவருக்கு கொடுக்கிறது. ஹபிச்சை சம்பளம்ஹ போன்ற அரசாங்க செலவினங்களுக்கு இந்த வருமான வரியே செலவிடப்படுகிறது.
சரி, இனி விஷயத்திற்கு வருவோம்! வாராவாரம் இப்படி அரசிடமிருந்து ஓசிப் பணம்ஹ பெறும் விசிலடிச்சான் குஞ்சுகள் நாள் முழுக்க pubs-மது சாவடிகளில் கூட்டம் போட்டு வார இறுதியில் உதைபந்தாட்டப் போட்டிக்கு போய் அவ்வப்போது போதை வஸ்துக்களை உட்கொண்டு நிறத்தவர் (வெள்ளையர் அல்லாதோர்) மீதும் அதிகாரிகள் மீதும் கலவரம் நிகழ்த்துவார்கள். பிரிட்டிஷ் பொலிசாரும் ஊடகங்களும் இந்த football இளசுகளுக்கு வைத்துள்ள பெயர் `football hooligans’ -கால்பந்து காவாலிகள் ஃ காடையர்கள். கடந்தாண்டு மார்ச் மாதத்தில் பிரிட்டனை கொரோனா அரக்கன் தாக்கிய போது அரசு மேற்கொண்ட முதல் நடவடிக்கை இந்த கள்ளுக்கடைகளைப் பூட்டுதல், உதைபந்தாட்ட போட்டிகளை நிறுத்துதல் இவைதான்.
கொழும்பு போன்ற நகரங்களில் சில கடைகளிலும், சில வீடுகளில் பழக்கடையிலும் சாராயத்தைக் காய்ச்சி பல்வேறு சட்ட விரோதப் பொருட்களையும் சேர்த்து ஹகசிப்புஹ என்ற பெயரில் விற்பார்கள். ஆனால் இங்கு பிரிட்டனில் அசல் மதுவே விலை மலிவு என்பதால், சட்டவிரோத கசிப்புக்கு தேவையில்லை.
ஐக்கிய இராஜ்ஜியம் என்று அழைக்கப்படும் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வட அயர்லாந்து ஆகியவற்றில் கோவிட் இறுக்கம் தளர்த்தப்படுவது பற்றி பிரிட்டிஷ் அரசு கால அட்டவணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் பெரும்பாலாவை அடுத்த மாதம் ஜூன் 21ஆம் திகதி அகற்றப்பட முடியுமென்று பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால் இது திகதிகள் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல சம்பவங்கள் சம்பந்தப்பட்டது, மருத்துவமனைகளில் கோவிட் தொற்றுடன் எவ்வளவு பேர் அனுமதிக்கப்படுகிறார்கள் என்ற எண்ணிக்கை அடிப்படையிலும் மரணிப்பவர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்து வீழ்ச்சியடைவதிலுமே தங்கியுள்ளது.
முதலாம் கட்டம் இரு கட்டங்களாக மார்ச் 8 திகதியும், மார்ச் 29ஆம் திகதியும் பூர்த்தி செய்யப்பட்டது. பள்ளிக்கூடங்கள் திறக்கப்படல், அயலவர்கள் 6 பேர் வீட்டுக்கு வெளியே சந்தித்து பேசுவது அனுமதிக்கப்படல், இவை முதற்கட்டத்தில் திருப்திகரமாக நிறைவேற்றப்பட்டன.
இரண்டாம் கட்டமான ஏப்ரல் 12ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட விஷயங்கள் அத்தியாவசியமற்ற விற்பனை நிலையங்கள் மீண்டும் திறக்கப்படல், உதாரணமாக முடிதிருத்தும் நிலையம் (Saloon), உடற்பயிற்சிக் கூடம் (gym) பெண்களின் நகங்களை அழுகுபடுத்தும் நிலையங்கள் (nail studios) நூலகங்கள், திறந்தவெளி வர்த்தக நிலையங்கள் திறந்து செயல்பட அனுமதிக்கப்பட்டன. இதே அடிப்படையில் உணவு கடைகளும் மதுபான விற்பனை கடைகளும் வாடிக்கையாளர்களை கடைக்கு வெளியே மட்டும் உபசரிக்க அனுமதி வழங்கப்பட்டது அல்லது வேண்டிய உணவை வாங்கிக் கொண்டு வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டது.
மூன்றாம் கட்டம் 17ஃ5ஃ21 முதல் சமூக தொடர்பு தடைகள் பெரும்பாலானவை அகற்றப்படுகின்றன. ஆனாலும் 30க்கும் அதிகமானோர் ஒரே இடத்தில் கூடுவது தொடர்ந்து தடை செய்யப்படும்.
உணவகங்களுக்கு உள்ளே உட்கார்ந்து உணவருந்த 6 பேர் கொண்ட குழு மட்டும் அனுமதிக்கப்படும். மதுச்சாவடி, சினிமா மற்றும் நாடக அரங்கம், அருங்காட்சியகம், கலையரங்குகள் விடுதிகள் முற்றாகத் திறக்கப்பட அனுமதியில்லை. குடும்ப உறவினர்களும் நண்பர்களும் சந்திக்கும் போது சமூக இடைவெளியை தொடர்ந்தும் கடைப்பிடித்தல் அவசியம். ஒருவரை ஒருவர் கட்டியணைந்து hரப செய்ய அனுமதிக்கும் என அரசு அறிவித்தது.
உதைபந்தாட்ட விளையாடு மைதானங்கள் திறக்கப்பட அனுமதியுண்டு. கோவிட் பரிசோதனைக்கு அமைய இந்த விதி கடைப்பிடிக்கப்படும். பிறகு எல்லா தனியார் குடும்ப நிகழ்வுகளிலும் திருமணங்கள், உபசரிப்பு நிகழ்ச்சிகள், இறுதிச் சடங்குகள் இவற்றில் 30 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம் என்ற நிபந்தனை மாற்றப்படவில்லை. பல்கலைக்கழக மாணவர்களில் எஞ்சியிருப்போர் தத்தம் வளாகங்களுக்கு திரும்ப வேண்டும். கோவிட் தொற்றுக்கான சுயபரிசோதனை உபகரணங்கள் (kits) பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஜூன் 21ஆம் திகதி சமூக தொடர்புகள் பற்றிய கட்டுப்பாடுகள் முழுமையாக அகற்றப்படும். இரவு விடுதிகளை இத்திகதிக்குப் பின்னர் திறக்க முடியும் என்று அரசு நம்புகிறது. பிரம்மாண்டமான கொண்டாட்டங்கள் மீதான தடைகளையும் அகற்ற முடியுமென்று அரசு நம்புகிறது. நுழைவு அனுமதிக்கு ஒரு முன் நிபந்தனையாக கோவிட் பரிசோதன மேற்கொள்ளப்படலாம். ஜூன் மாதம் 21ஆம் திகதி திருமணங்களுக்கு வரும் விருந்தினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது பற்றி பிரிட்டிஷ் அமைச்சரவை தீர்மானிக்க இருக்கிறது.
1,301 total views, 2 views today